Monday, January 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்கள் வாகனம் ஓட்டும்போது . . . !

விபத்தைத் தவிர்ப்போம்

வாகனம் ஓட்டும்போது எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை அவ்வப்போது ஸ்பீடாமீட்டரைப் பார்த் து கண்காணிக்க வேண்டும். உங்களுக் கான வேகம் எவ்வளவு என்பதில் தெ ளிவாக இருங்கள். இதனால், அதிவேக த்தில் செல்வதைத் தவிர்க்கலாம்.

நீங்கள் பைக்கில் நெடுஞ்சாலையில் செல்லும்போது சைடு மிர்ர‍ர் (பக்க‍ வாட்டு கண்ணாடி)யை அடிக்கடி பார்த்த‍வாறு செல்லுங்கள். காரணம் உங்களுக்கு பின்னால் ஏதேனும் கனரக வாகனங்களோ பேரூந்துக ளோ வந்தால், அந்த வாகனங்களு க்கு முதலில் வழிவிடுங்கள். 

காவல்துறையினர் வாகனங்க ளோ அல்ல‍து ஆம்புலன்ஸ் வாக னங் ளோ அல்ல‍து தீ அணைப்பு வாகனங்களை, அவசர ஒலி எழுப் பி வேகமாக வரும்போது அந்த வாகனங்களுக்கு தாமதிக்காமல் உடனடியாக வழிவிட்டு அந்த வாகன ங்களை செல்ல‍ வழிவகை செய்ய‍ வேண்டும். 

அடிக்கடி உங்கள் வாகனத்தில் உள்ள‍ வெட் பேட்ட‍ரியி ல் டிஸ்டல் வாட்ட‍ர் எனப்படும் திரவத்தை நிரப்பி வர வேண்டும்.

நன்கு பயிற்சி பெற்ற‍ பிறகே வாகனத்தை பிரதான சாலைகளிலும் நெருக்க‍டியாக சாலைகளிலும் ஓட்டிச் செல்லுங்கள். 

குறைந்தபட்சம் ஆண்டு ஒருமுறையாவது உங்களது வாகனத்தை, சர்வீஸ் சென்டரில் சர்வீஸ் செய்து பிரேக், ஆக்ஸிலேட்ட‍ர் மற்றும் ஹாரன் உட்பட பல பாகங்கள் நல்ல‍ நிலையில் பராமரித்து வர வேண் டும்.

நீங்கள் இருசக்க‍ர வாகனத்தை ஓட்டும்போது பின்னால் வரும் உங்கள் நண்பர், முன்னோக்கி அம ர்கிறாரா என்பதை கவனியுங்கள், பின்னால் வருபவரை வேடிக்கை பார்க்கும் படியாக அமர்ந்தால் அவரை முன் னாடி பார்த்த‍ மாதிரி அமரச் செய்யுங்கள். 

பண்டிகை காலங்களில்  முடிந்த ளவிற்கு போக்குவரத்து நெருக்க‍ டியான சாலைகளில் செல்வதை தவிர்க்க‍ வேண்டும். அதாவது பீக் ஹவர்ஸ் என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அந்த நேரத்திற் கு முன்போ அல்ல‍து பின்போ நீங்கள் வாகனத்தை ஓட்டுங்கள் 

நீங்கள் வாகனத்தில் வேகமாக சென்றுகொண்டிருக்கும்போது, எச்சி லை துப்பாதீர்கள். அது உங்களுக்கு பின்னால் வருபவர்கள் திடீர் என்று விழும்போது, அவர் சற்று நிலை தடுமாறி விபத்துக்குள்ளாக நேரி டும்.

வாகனம் ஓட்டும்போது மொபை ல் போன் அல்லது ஹேண்ட்ஸ் ஃப்ரீ பயன்படுத்த வேண்டாம்.

சாலை விபத்து பற்றிய விழிப்பு உணர்வு குழந்தைப் பருவத்திலே யே ஏற்படுத்தப்பட வேண்டும்.

மோட்டார் சைக்கிள் ரேஸ் போன்ற வீடி யோ, கம்ப்யூட்டர் விளையாட்டுக்களை த் தவிர்க்க வேண்டும். இது குழந்தைகள் மனதில் வேகமாக வண்டி ஓட்டும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

குறிப்பிட்ட கால இடைவெளியில் பார் வைத்திறனைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

நன்கு ஓய்வு எடுத்தபின்பு, ஆரோக்கியமான நிலையில் வாகனம் ஓட்டு ங்கள். தூக்கத்தைத் தரும் மாத்திரை மரு ந்துகளை உட்கொண்டு விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்.

நீண்ட பயணத்தின்போது, இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை 15 நிமிட ங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும்.

வாகனம் ஓட்டும்போது தூக்கம் வந்தா ல், பாதுகாப்பான இடத்தில் நிறு த்தி ஓய்வெடுங்கள். அல்லது காபி போன்ற தூக்கத்தை விரட்டும் பானங் கள் அருந்தலாம்.

து அருந்தி விட்டோ அல்ல‍து அருந்திக்கொண்டோ வாகனத்தை ஓட்ட வேண்டாம். 

அதிகாலை 2 முதல் 6 மணி வரை மிகுந்த கவனத்துடன் வாகனம் ஓட்டுங்கள்.

மதிய உணவுக்குப் பிறகு 2 முதல் 4 மணி வரையில் வாகனம் ஓட்டு ம் போதும் கவனம் தேவை.

முறையாக போக்குவரத்து விதிகளை மதிக்க‍ வேண்டும்.

போக்குவரத்து காவலர், உங்களை வழிமறித்து ஆவணங்களை கேட்டா ல், அவர் கேட்கும் ஆவணங்களை சரி யாக வைத்திருந்தால், அந்த நேரத்தி ல் அவரிடம் காண்பிக்க‍லாம். 

நீங்கள் வாகனதை ஓட்டிச்செல்லும் போது உங்கள் முன்னால் செல்லும் வாகனத்திற்கு உங்களுக்கும் போதிய இடைவெளி அதாவது குறைந்த பட்சம் மூன்றடி ஆவது இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். காரணம் முன்னால் செல்லும் வாகனம் திடீ ரென்று பிரேக் போடும்போது, வாகனம் உங்கள் கட்டுப்பாட் டை இழந்து அந்த வாகனத்தை, உங்கள் இடித்து விபத்துத நேரி டலாம். ஆகவே குறைந்தபட்ச ம் மூன்று அடிகளாவது இருந் தால், அந்த வாகனம் பிரேக் போடும் நீங்கள் சுதாரித்துக் கொண்டு உங்கள் வாகன த்தையும் சட்டென்று நிறுத்த‍லாம். 

சட்டத்தின் பார்வையில்…

நள்ளிரவுநேரத்தில் நீங்கள் வாகனத்தை ஓட்டிச்செல்லும்போது, குற்ற‍ப் பிரிவு காவலர்களோ அல்ல‍து போக்குவரத்து காவலர்களோ உங்களை வழிமறித்து நிறுத்தினால், நள்ளிரவு நேரத்தில் நீங் கள் வந்த காரணத் தை ஆதாரத்தோடு சொல்லுங்கள் உதாரணமாக திரையரங் கம் சென்றி ருந்தாலோ, அல்ல‍து உங்கள் நண்பர், உறவினரை ரயில் நிலையத்தி லோ அல்ல‍து விமான நிலையத்திலோ விட்டு வர அல்ல‍து ஏற்றி வர வந்திருந்தால் அதற்குரிய காரணத்தை அவர்களிட்ம கூறி வாகன த்தின் ஆவணங்களை அவர்களிடத் காண்பியுங்கள். 

டிரைவிங் லைசென்ஸ் இன்றி வாகன ம் ஓட்டுவது சட்டப்படி குற்றம். ரூ.500 அல்லது மூன்று மாதங்கள் சிறை அல்லது இவை இரண்டுமே தண்ட னையாக விதிக்கப்படும்.

வாகனக் காப்பீடு இன்றி வாகனம் ஓட்டினா ல், ரூ.1000 அல்லது மூன்று மாதங்கள் சிறை தண்டனை கிடைக் கும்.

சிறுவர்கள் மோட்டார் வாகனம் ஓட்டி னால், ரூ.500 அல்லது மூன்று மாதம் சிறை அல்லது இவை இரண்டுமே தண்டனையா க விதிக்கப்படும்.

ஹெல்மெட் இன்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கும், சீட் பெல்ட் அணி யாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் ரூ.100 அபராதம்.

வேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினா ல், ரூ.2,000 அல்லது ஆறு மாதங் கள் சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

மது அருந்திவிட்டு விபத்து ஏற்படுத்தினால், காப்பீடு பலன் எதுவும் கிடைக்கா து.

வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படு த்தினால், ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்ப டும்.

இணையத்தில் கண்டெடுத்த‍ இடுகையை கூடுதல் வரிகளுடன் மேம் படுத்தியது விதை2விருட்சம் இணையம் 

3 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: