Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பற்கள் பராமரிப்பு – ஆரோக்கியமாகவும், சுத்த‍மாகவும் வெண்மையாகவும் பிரகாசிக்க‌ சில குறிப்புகள்

முத்துப் போன்ற பற்கள்… முகத்தை அழகாக்கும். ‘பல் போனால் சொல் போச்சு’ போன்ற பற்களைப் பற்றிய பளிச் பழமொழிகள் ஏராளம். பற்கள் பாதிக்கப்பட் டால் பல்வேறு நோய்களும் நம்மை எட்டிப் பார்க்கும். பற்கள்தான் ஒருவரின் ஆரோக்கி யத்தை நிர்ணயிக்கின்றன என்கிறது மருத் துவ உலகம். பற்களை ஆரோக்கியமாகப் பாதுகாத்தாலே போதும், பெரும்பாலான நோய்களுக்கு, நோ என்ட்ரிதான்.

மிகப் பெரிய நிறுவனம் ஒன்றின் தலைமை அதிகாரியாகப் பணிபுரிபவர் 55 வயதான கமலேஷ். யாருடனும் அதிகம் பேச மாட்டார். வெளியிட ங்களுக்கு அதிகம் செல்ல மாட்டார். நண்பர் கள், உடன்பணிபுரிபவர்கள் விருந்துக்கு அழைத்தால்கூட போகமாட்டார். வார்த் தைகளை அளந்து பேசுவார். இதனால் மற்றவர்கள் மத்தியில். ‘மனுஷன் வா யைத் திறக்கிறாரா பாரு… கல்லூளி மங்க ன், அழுத்தக்கா ரன், திமிர் பிடித்தவன்’ என் றெல்லாம் பட்டப் பெயர்கள் இருந்தன.

ஆனால் உண்மையில் அவர் மிகவும் எளி மையான நபர். பல்லில் ஏற் பட்ட பிரச்னை காரணமாக அவருக்கு அனைத்துப் பற்களையும் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனா ல், பல் செட் போட்டுக்கொண்டார். மற்ற வர்களுடன் பேசும்போது, எங்கே… பல் செட் கழன்றுவிடுமோ? என்ற பயம். சாப் பிடும்போது விழுந்து விடுமோ என்ற தயக்கம்தான் இதற்கெல்லாம் காரணம். பல் செட் போட்டது முதல், தன்னம்பிக் கை இழந்து அவர்பட்ட அவஸ்தைகள் ஏராளம். கடைசியில், கைகொடுத்தது நவீன முறையில், விழாத செயற்கைப் பல் கட்டும் (இம்பிளான்ட்) சிகிச்சை. தற் போது தன்னம்பிக்கையுடன் மற்றவர்க ளை எதிர்கொள்கிறார். அனைவருடனும் சிரித்துப் பேசி மகிழ்ச்சியாக இருக்கிறார் . ” இப்ப டி எவ்வளவு பெரிய அந்தஸ்தில் ஒருவர் இருந்தாலும் அவரது தன் னம்பிக்கையையே தரைமட்டமாக்க க்கூடியது பற்கள்.

பற்களில் ஏற்படும் பாதிப்பு கள், தீர்வுகள், பராமரிப்புகள், சிகிச்சைகள் என ஒட்டுமொத்த பல் பாதுகாப்பு குறித்தும் விரிவாய் தந்துள்ளனர் டாக்டர்கள் எம்.எஸ் .ரவி, சுனிதா ரவி, அஸ்வினி, சௌமியா. பற்களைப் பற்றி விரிவாக வரிசையாகத் தொடுக் கப்பட்டுள்ள இந்த கையேடு உங்கள் பல் ஆரோக்கியத்திற்கான பளிச் கைடு!

பராமரிப்பும்/பாதுகாப்பும்

பிரஷ்: ஹார்டு, மீடியம், சாஃப்ட் என மூன்று வகைகளில் பிரஷ்கள் கிடைக்கின்றன. பொ துவாக பல் மருத்துவர்கள் ஹார்டு பிரஷ்க ளை பரி ந்துரைப்பது இல்லை. பற்கூச்சம் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு சாஃப்ட் வகை டூத் பிரஷ்களையும், மற்றவர்கள் மீடி யம் வகை பிரஷ்களை மட்டுமே பயன்படுத் தவேண்டும். பிரஷின் தலைப் பகுதி சிறியதாக இருந்தால் மட்டுமே அது நல்ல பிரஷ். அப்போதுதான் பல் வரிசையின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று சுத்தம் செய்ய வசதியாக இரு க்கும். கைப்பிடி நன்றாக சௌகரியமா க இருக்க வேண்டும்.

பிரஷில் உள்ள இழைகள், பூ காம்புக ளைப் போன்று வளைய ஆரம்பித்தா ல், உடனே பிரஷை மாற்றிவிட வேண் டும். பொதுவாக, இந்த இழைகள் 60 நாட்களில் வளைய ஆரம்பிக்கும். எனவே, 60 முதல் 90 நாட்களு க்கு ஒரு முறை பிரஷை மாற்றுவது நல்லது.

பற்பசை: ஃப்ளோரைட், உப்பு, ஜெல் எனப் பல்வேறு பற்பசைகள் உள்ள ன. ஃப்ளோரைட் உள்ள பற்பசையானது பற் களுக்கு வலிமை சேர்க்கும். அதுவும் 10 லட்சத்துக்கு ஒன்று என்ற அளவில் ஃப் ளோரைட் சேர்க்கப்ப ட்டிருக்க வேண்டு ம். ட்ரைக்ளோசான் உள்ள பற்பசைகள் ஈறுக்கு வலிமை சேர்க்கும். ஜெல் உள் ள பற்பசைகளைத் தவிர்க்கலாம்.

குழந்தைகள் பற்பசையை விழுங்கிவிடக்கூடும். இதனால் பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக, பிரத்யேகப் பற் பசைகள் கிடைக்கின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். எவ்வளவு பற்பசையைப் பயன்படுத்து கிறோம் என்பதைவிட, பற்பசையால் எப்படி பிர ஷ் செய்கிறோம் என்ப தில்தான் சூட்சும மே இருக்கிறது. ஒரு பட்டாணி அளவுக் கு பற்பசை இருந்தால் போதும். அதைக் கொண்டே பற்களைத் துலக்கலாம். இர ண்டு முதல் மூன்று நிமிடங்களுக்குள் பல் துலக்கிவிட வேண்டும்.

பற்களை எப்படித் துலக்கலாம்?

பெரும்பாலும் பல் துலக்கும்போது பிரஷை இட வலமாக பற்களின் மேல் அழுத்தித் தேய்ப்பார்கள். இப்படி செய்வதால் எந்த பலனும் இல் லை. அழுத்தித் தேய்ப்பதால் பற்களின் மேல் இருக்கும் கிரு மிகள், உண வுத் துகள்கள் பல் இடுக்கில் தங்கிவிடும். இதனா ல் பற்கள் தேயவும் வாய்ப்பு உள்ளது. டூத் ப்ரெஷ்ஷை 45 டிகிரி சாய்த்து மெதுவாக ஒவ் வொரு பல்லிலும், உங்கள் ஈரும், பல்லும் சந்திக்கும் இட த்தில் இருந்து மென்மையாக துலக்க வேண்டும். இதேபோன்றே முன்பக்கம், பின்பக்க ப் பற்களை துலக்க வேண்டும். உணவு மெல்லும் பகுதியில் மட்டும் பிரெஷைக் கொண்டு ஒரு சுற்று சுற்றுவது போல துலக்க வேண்டும். ஒவ்வொரு பல்லுக் கும் செய்ய இரண்டு முதல் மூன்று நொ டிகள் போதுமானது. இப்படி செய்வதன் மூலம் ஈறுகளில் ஒளிந்திருக்கும் உண வுத் துகள்கள் மற்றும் கிருமிகள் வெளி யேற்றப்பட்டு பற்கள் பளிச்சிடும். பல் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பல் துலக்குவது நல்லது. பல் துலக்கிய பிறகு நாக்கை சுத்தம் செய்வது அவசிய ம். நாக்கை வேகமாக இழுக்காமல் மென் மையாக இழுத்து, நாக்கின் மேல் படிந்து ள்ளவ ற்றை அகற்றலாம்.

இருமுறை பல் துலக்குங்கள்:

பல் துலக்கும் நுட்பத்தைத் தெரிந்து மிகச் சிறப்பாக பல் துலக்கினாலும் கூட, 90 சதவிகிதம் அளவுக்குத்தான் கிரு மிகளை அகற்ற முடியும். மீதம் உள்ள 10 சதவிகித கிருமிகள் பெருக்கம் அடைந்து, பற்களைத் தாக்க 12 மணி நேரம் போதுமானது. அப்படி இருக்கும்போது பல் துலக்கும் நுட் பம் தெரியாமல் பல் துலக்கு ப்பவர்க ளுக்கு அதன் மூலம் கிருமிகள் அக ற்றம் என்பது மிகக் குறைவாகவே இருக்கு ம். இந்த கிருமிகள் பற்களைத் தாக்கும் அளவுக்கு பெருக்கம் அடைய சில மணி நேரங்களே போது மானது. எனவே, ஒரு நாளைக்கு காலை மற்றும் இரவு என இரு முறை பல் துலக்குவது மிகவும் அவசியம். பல் துலக்கிய பிறகு ஈறுகளை மென்மை யாக அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். நாக் கில் உள்ள பசை யை அகற்ற வேண்டும்.

ஃபிளாஸ்ஸிங்:

பல் துலக்குவதன் மூலம் பல்லின் முன்புறம், மேல் புறம், பின்புறத்தை சுத்தம் செய்கிறோம். ஆனால், இரண்டு பற்க ளுக்கு இடையே உள்ள பகுதிக்கு பிரஷ் செல்ல முடியாது. இங்குதான் உணவுத் துக ள்கள் சிக்கிக் கொள்கின்றன. தினமும் ஃ பிளாஸ்ஸிங் செய்வதன் மூலம் பற்களுக்கு இடையில் உள்ள உணவுத் துகள்களை அக ற்றலாம். இரு பற்களுக்கு இடையில் மெழு கு தடவப்பட்ட மெல்லிய நூலை செலுத்தி மேலும் கீழுமாக மெதுவாக இழுக்கும்போது அங்குள்ள உணவுத் துகள்கள், அழு க்குகள் வெளியேற்றப்படும். இதற்கென உள்ள டென்டல் ஃபிளாஸ்ஸிங் கயிறுகளை மட்டு மே  வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

இயற்கை பிரஷ்ஷிங்:

இயற்கையான கரும்பு, அன்னாசிப்பழம் போன்ற சில உணவுப் பொருட் கள் நம்முடைய பற்களை சுத்தம் செய்யும் தன்மைகொண்டது. அதிக அளவில் நார்ச் சத்து உள்ள பச்சைக் காய்கறி போன்ற உணவுப் பொரு ட்களைச் சாப்பிடுவது உடலுக்கும், பற்களுக்கும் ஆரோக்கியமானது. சுத்திகரிக்கப்பட்ட மைதா, சர்க்கரை போன்றவை பற்களைப் பாதிக்கக் கூடியவை. கொத்தமல்லித் தழையை லேசாகக் கழுவிவிட்டு சமைக் காம லேயே பயன்படுத்துகிறோம். மேலும், பச்சைக் காய்கறிகளை அப்படியே சாப்பிடும்போது, உண வுகளில் கிருமிகள் இருக்கலாம். இவை பற்க ளையும் பதம் பார்க்கும். காய்கறிகளை வெந்நீரி ல் போட்டு லேசாக வெந்ததும் சாப்பிடுவது நல் லது.

பளீர் பற்கள்

காபி, தேநீர் போன்றவற்றை தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப் பைக்கு மேல் குடிக்கக் கூடாது. புகைத்தல், மது அருந்துதல், கோலா கலந்த குளிர்பானங்கள் அரு ந்துவது, பாக்கு போடுதல் போன்றவற்றால் பற்களில் கறை ஏற்படுவதுடன், பல்லின் ஆரோக்கியத்துக்கும் வேட்டு வைக்கும். பல்லில் அடிபடுவதாலும் பழுப்பு நிறம் ஏற்படலாம்.

கர்ப்பக்காலத்தில் டெட்ராசைக்ளின் என்ற மாத் திரையை எடுத்துக் கொ ள்பவர்களின் சிசுவுக்கு பற்களின் நிறம் மஞ்சளாக இருக்கலாம். பொது வாக டாக்டர்கள் கர்ப்ப காலத்தில் இந்த மாத்தி ரைகளைப் பரிந்துரைப்பது இல்லை. சுய மருத் துவம் எடுத்துக்கொள்ளும்போது இந்தப் பிரச் னை வரலாம் என்பதால் ஜாக்கிரதை. பளிச்சென்ற பற்கள் கிடைக்க, பல் மருத்துவர்கள் ப்ளீச்சிங் என்ற சிகிச்சை அளிப்பார்கள். வீட்டிலேயே கூட டாக்டரின் ஆலோசனையின் பேரில் பற்களுக்கு ப்ளீச்சிங் செய்து கொள்ளலாம்.

மவுத் வாஷ்

மவுத் வாஷ் பயன்படுத்தலாமா வேண்டா மா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. பற் களை வலுவாக்க, ஈறுகளை வலுவாக்க, பல் கூச்சத்தைப் போக்க என மூன்று வகையான மவுத் வாஷ்கள் வருகின்றன. பற்களை வலுவாக்கும் மவுத் வாஷில் ஃப்ளோரைட் கலந்திருக்கும். புத்துணர்வு தரக்கூடிய மவுத் வாஷ்கள் ஈறுகளைப் பலப்படுத்தும். நம் வாயில், கெடுதலை விளைவிக்கும் நுண் உயிரிகள் இருப்பதுபோல், நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிரிகளும் உள்ளன. மவுத் வாஷ் செய்யும்போது இந்த கெடுதலை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளுடன், நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும் அழிந்து விடும். இத னால் வாய் உலர்ந்துபோகும் தன்மை போன்ற பிரச்னை ஏற்படலாம். எனவே, டாக்டரின் பரிந்துரையின்றி மவுத் வாஷ் களைப் பயன்படுத்த வேண்டாம்.

பாதிப்பும் / தீர்வும்

ஈறு: ஈறுகள்தான் நம் பற்களைப் பாதுகா க்கும் அமைப்பு. பல் நேரடியாக தாடை எலும்புடன் இணையவில்லை. நார் போ ன்ற அமைப்புகளே பல் லையும் எலும் பையும் இணைக்கின்றன. இந்த எலும் பை போர்வை போன்று மூடிப் பாதுகாக்கிறது ஈறு. பல்லுக்கும் ஈறுக்கும் இடையில் 1.2 மி.மீ. ஆழம் உள்ளது. இங்குதான் பற்களைப் பாதுகாக்க ஒரு வகையான திரவம் சுரக்கிறது. பற்க ளில் உணவுத் துகள்கள், காரை படியும்போ து ஈறு பாதிக்கப்பட்டு, பல்லையும் எலும் பையும் இணைக்கும் தொடர்புகள் துண்டிக் கப்படுகின்றன. இந்த ஆழமானது 3 முதல் 4 மி.மீ. அளவுக்கு செல்வதை ‘கம் பாக்கெட்’ என்று சொல்வோம். உண வுத் துகள்கள் அதிக அளவில் உள்ளே போய் உட்கார்ந்து கொள்ளும். உணவுத் துகள்களில் கிருமிகள் வளரும். இதை வெளியேற்ற உடலில் உள் ள நோய் எதிர்ப்பு அமைப்புகள் போராடும். இந்த போராட்டத்தில் உடல் பாதுகாப்பு அ மைப்பு தோல்வியுறும்போது கிருமி வேக மாக வளர்ந்து எலும்பை அரிக்கத் தொடங் கும். 50 சதவிகிதம் அளவுக்கு ஈறுகள் ஆழ ம் அதிகரிக்கும்போது பல் வலுவிழக்கிறது. இதை ஆரம்ப நிலையிலே யே கண்டறிந்து சரிப் படுத்தலாம். பிரச்னையின் தீவிர த்தை பொருத்து சிகிச்சை தீர்மானிக்க ப்படுகிறது.

ஈறுகளில் வீக்கம் ஏற்படும்போது அதை சரிப்படுத்த நம் உடலில் சில ஹார்மோன் கள் சுரக்கும். கர்ப்பிணிகளுக்கு முன்கூட்டி யே குழந்தை பிறப்பதற்கு, இந்த ஹார்மோ ன் காரணமாகிவிடுகிறது. மேலும், இந்த ஹார்மோன் இதய நோயையும் உண்டு பண் ணலாம். எனவே, கர்ப்பிணி கள் ஈறுகளில் ரத்தக் கசிவு இருந்தால் உடனடியாக மருத்து வரை அணுகி சிகிச்சைப் பெறவேண்டும்.

வாய் துர்நாற்றம்:

வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. உணவு த் துகள்கள் பல் இடுக்குகளில் மாட்டிக்கொண்டு வாய் கொப்பளிக்கும் போதோ அல்லது பல் துலக்கும்போதோ வெளியேறவில்லை என்றால் அழுகிப்போய் கெட்ட வாடை வீசலாம். தொண்டை யில் நோய்த் தொற் று ஏற்பட்டு துர் நாற்றம் வீசலாம். ஈறு நோய், சொத் தைப் பல், வயிறு தொடர்பான பிரச் னைகளால் துர்நாற்றம் அடிக்கலாம். இதுபோன்று இன்னும் வேறு பல காரணங்கள் உள்ளன. வாயில் துற் நாற்றம் எதனால் வீசுகிறது என்ப தைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை எடுப்பது மட்டுமே இந்த பிரச்னைக் குத் தீர்வு. வெறும் மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது என்பது பிரச்னையைத் தற்காலிகமாக ஒத்திப்போடுமே தவிர, முழுமையான தீர்வைத் தராது.

பற்கூச்சம்:

பற்களின் எனாமலை அடுத்துள்ள டென்டைன் என்ற பகுதியில் குளிர்ந்த அல்லது சூடான பானங்கள் நேரடியாகப் படும்போது பற்கூச்சம் ஏற்படும். டென்டைன் பகுதியில் நிறைய மெல் லிய குழாய்கள் போன்ற அமைப்பு இருக்கும். இதன் மூலம் வெப்பம், குளிர் போன்றவை ரத்த நாளங்கள், நரம்புகள் கொண்ட பகுதியான பற் குழிக்குக் கடத்தப்படுவ தால் இந்த பற்கூச்சம் ஏற்படுகிறது. முறையற்ற வகையில் பற்களை த் தேய்ப்பது, நீண்ட நேரம் பல் தேய்ப்பது போன் றவற்றால் எனாமல் தேய வும், ஈறுகளும் பற்களில் இருந்து விலகிச் செல்லவும் வாய்ப்புள்ளது. ஈறுநோய்கள் ஏற்படும்போது ஈறுகளில் வீக் கம், பல் உடைதல், தூக்கத்தில் பல் கடிக்கும் பழக்கம் போன்றவற்றா லும் கூச்சம் ஏற்படலாம். எதனா ல் பற்கூச்சம் ஏற்படுகிறது என்ப தைப் பொறுத்தே சிகிச்சை அளிக் கப்படும்.

ஆயில் புல்லிங் அவசியமா?

இயற்கையான நல்லெண்ணெயி ல் மட்டுமே வாய் கொப்பளிப்பு செய்ய ப்படுகிறது. 15 முதல் 20 நிமிடங்கள் கொப்பளித்த பிறகு அந்த எண்ணெயை வெளியே துப்பி விட வேண்டும். பிறகு சுத்தமான நீரில் வாய் கொப் பளிக்க வேண்டும். ஆயில் புல்லிங் செய்வதற்கு முன் பு பல் துலக்க வேண்டியது இல்லை . ஆனால், ஆயில் புல்லிங் செய்து முடித்த பிறகு பிரஷ் செய்வதும், வாயை நன்றாக சுத்தம் செய்வது ம் அவசியம். ஆயி ல் புல்லிங் செய் வதால் பல் வலி, பற்கள் விழுதல், வாயில் நோய்த் தொற்று, ஈறுகளி ல் ரத்தக் கசிவு போன்ற பிரச்னை கள் நீங்குவதாகக் கூறப் படுகிறது. உடலுக்கு கெடுதல் இல்லாதது என்பதால், ஆயில் புல்லிங் செய்வதில் தவறு இல்லை.

வரிசையும்/அமைப்பும் ஞானப்பல்:

விவரம் தெரிந்த 17-18 வயதில் ஒருவருக்கு கடைவாயில் முளைக்கும் பல்லுக்கு ஞான ப்பல் என்று பெயர். ஒருகாலத்தில் மனிதனு க்கு 44 பற்கள் இருந்தது. அப்போது வேட்டை யாடுவது, எதையும் பச்சையாகவே சாப்பிடு வது என இருந்ததால் அத்தனைப் பற்கள் தேவைப்பட்டன. இன் று பற்களால் மென்று சாப்பிடும் பழக்கம் குறைந்துகொண்டே வரு வதால், தற்போது இருக்கும் 32 பற்கள் வரும் காலத்தில் 28 பற்களாக குறை ந்துவிடலாம். இந்த ஞானப்பற்கள் வளரப் போதுமான இடம்  இல்லாத தால் மற்ற பற்களில் முட்டிக்கொண்டு பற்களின் வரிசையை யே பாதிக் கச் செய்துவிடுகிறது. இதனால் உணவு மெல்லுதல் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. என வே, பிரச்னை ஆரம்பிப்பதற்கு முன்பாக வே ஞானப் பற்களை அகற்றிவிடுவது நல் லது.

தற்போது தூக்க நிலையில் ஞானப் பற் களை அகற்றும் நவீன சிகிச்சை முறைக ள் வந்துவிட்டன. பற்களைப் பிடுங்க வேண்டிய நபருக்கு, மய க்க மருந்து நிபுணர் உதவியுடன் மயக்க மருந்து செலுத்தப்படும். நன்கு தூக்க நிலையில் இருக்கும்போது, உணர்வு நீக்க ஊசியை செலுத்தி பற் கள் பிடுங்கப்படுகின்றன. இதனால் பல் பிடுங்கும்போது வலி இருக்கா து. விழிப்பு நிலைக்கு வரும்போது, வலி குறைவாகவே இருக்கும்.

‘கிளிப்’ பற்றி கிளிக்!

பற்கள் தூக்கலாகவோ, உள்ளடங்கியோ, முன்னும் பின்னுமாகவோ இருந்தால் கிளிப் போட்டு சரிசெய்யலாம். கிளிப் போடுவது என்பது பற்களின் அமைப்பில் உள்ள பிரச்னையைப் பொருத்தது. வளரும் குழந்தை களுக்கு பால் பற்கள் அனைத்தும் விழுந்து நிலையான பற்கள் தோன்றும் நேரத்திலேயே தேவைப்படலாம். சிலருக்கு அதற்கு முன்பா கவே செய்ய வேண்டியிருக்கலாம். முன்பக்க மா க போடுவதால் முக அழகு குறையும் என்று நினைப்பவர்களுக்கு, மறைவாக பல்லுக்கு பின் பக்கமாகவும் போடக்கூடிய கிளிப் வகைகள் வந்துவிட்டன. யாருக்கு எந்த மாதிரியான கிளிப் போடலாம் என்பது அவரது பற்களைப் பரிசோ தித்த பின்னரே தெரியவரும். கிளிப் அணிந்திருக்கும் காலத்தில் பற்கள் பராமரிப்பில் அதிகக் கவனம் செலு த்த வேண்டும். கிளிப் இடுக்குகளில் உணவுத் துகள்கள் தங்க வாய்ப்பு உண்டு. இதற்கென உள்ள பிரத்யேக பிரஷ் கொண்டு துணுக்குகளை அகற்றவேண்டும்.

கிளிப் போடும் சிகிச்சை முடிய ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகலாம். கிளி ப் போட்ட பிறகு நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு ஒரு முறை டாக் டரை சென்று சந்திக்க வேண்டும். அவரது ஆலோசனைப்படி, உணவுக ளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தாடையின் அளவு சிலருக்கு அதிகமாக இருந்தால், முதலில் அதை சரி செய்ய வே ண்டும். பிறகு, அறுவைசிகிச்சை தேவைப் பட்டால், பல் மற்றும் தாடையின் அளவை எக்ஸ்ரே மூலம் கண்டறிந்து, அதற்கேற்ப பல் மருத்துவரால் முடிவு செய்யப்படும்.

ஸ்லீப் ஆப்னியா:

தூக்கம் தொடர்பான பிரச்னை ஏற்படுவதற் கு தாடை மற்றும் பற்களின் அமைப்பும் ஒரு காரணம். குறட்டை விடுவதற்கும் இது ஒரு காரணம். ஒருவருக்குப் பற்கள் தேய்வதால் தாடையின் உயரம் குறைந்து, தூங்கு ம்போது நாக்குக்கு போதுமான இடமும் குறைந்து, நாக்கு தொண்டைக் கு சென்று மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்திவிடும். இந்த பிரச் னையை சரிசெய்ய முடியும். தாடையின் உயரத்தைக் கூட்டி, சில வகை கிளிப் போடுவதன் மூலம் குறிப்பிட்ட வகை ‘ஸ்லீப் ஆப்னியா ’வை சரி செய்யலாம்.

சிகிச்சை முறைகள்

பல்சொத்தை:

 பல் சொத்தை எந்த அளவுக்குப் பரவியு ள்ளது, அது எந்த நிலையில் உள்ளது என்ப தைப் பொருத்து சிகிச்சை முறைகள் மாறு ம். பல்லில் எனமாமல், டென்டின், பற்கூழ் என மூன்று பகுதிகள் உள்ள ன. இதில் பற் கூழ் பகுதிதான் பற்களின் இதயம் என்று சொல்லும் அளவு க்கு முக்கிய மானது. பற்கூழில் இருந்து எவ்வளவு தூரம் பல் சொத்தை உள்ளது என் பதைப் பொருத்து ஃபில்லிங் செய்ய வேண்டுமா அல்லது ரூட் கெனால் செய்ய வேண்டியிருக்குமா என்று முடிவு செய்யப்படும்.

 பல் சொத்தை உள்ளதா, எந்த நிலையி ல் பாதிப்பு உள்ளது என்பதை சாதாரணப் பரிசோதனை மூலமாகவும், பிறகு எக் ஸ்ரே மூலமாகவும் கண்டறியப்படும். சொ த்தையானது எனாமல் வரை மட்டுமே இருந்தா ல் அதற்கு சாதாரண ஃபில்லிங் என ப்படும் நிரப்புதல் போதுமானது. டென்டின் வரை பாதிப்பு இருந்தால் பல் கூச்சம் இருக்கும். அதைத் தொ டர்ந்து பல் வலி வரும். பற்கூழில் இருந்து எவ்வளவு தூரம் பாதிக்க ப் பட்டுள்ளது என்பதைப் பொருத்து ந்பில்லிங் செய்யப்படும்.

 சொத்தையானது பற்கூழுக்கு அருகில் அல்லது பற்கூழ் வரை சென் றுவிட்டது என்றால் ரூட் கெனால் மட்டுமே தீர்வு. ஒரு காலத்தில் இப்ப டிப்பட்ட பாதிப்புக்கு பல்லைப் பிடுங்குவது மட்டுமே தீர்வாக இருந்தது. அதற்கு மாற்றாக வந்ததுதான் ரூட் கெனால்.

 பல்லின் உள்ளே வேர்ப் பகுதி உள்ளது. இந்த வேர் வழியாகத்தான் ரத்தமானது பல் லின் மையப் பகுதிக்கு வருகிறது. சொத்தை யானது இந்த மையப் பகுதியைத் தாக்கிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சொத்தை வந்த வழியாக கிருமித் தொற்றை சுத்தம்செய்து, பற்கூழை அகற்றி விட்டு, வந்த பாதையை சுத்தம்செய்து, பிரத்யேகமான எதற்கும் பாதிப் பை ஏற்படுத்தாத, பாதிக்கப்படாத பொரு ளைக்கொண்டு மூடுவதுதான் ரூட் கெனால்.

 ரூட் கெனால் செய்த பிறகு, 15 நாட்களுக்குப் பிறகு அந்த பல்லுக்கு கேப் போடப்படும். மரம் பச்சையாக இருக்கும்போதுதான் கிளைகளை வளைக்க முடியும். காய்ந்துவிட்டா ல், வளைக்கும்போது ஒடிந்துவிடு ம். ரூட் கெனால் செய்து, பற்கூழ் பகுதியை அகற்றிவிடுவதால் பல்லுக் கு ரத்த ஓட்டம் இருக்காது. இதனால் பல் காய்ந்துபோய் நொறுங்கி விடும். இதைத் தவிர்க்க கேப் போடுவது மிகவும் அவசியம். செராமிக், தங்கம் உள்ளிட்ட உலோகங்கள் என அவரவர் வசதிக்கு ஏற்ப இதைப் போட் டுக்கொள்ளலாம்.

 சிலருக்கு ரூட் கெனால் சிகிச்சைகூட செய்ய முடியாத அளவுக்கு சில பற்கள் மிகவும் மோசமாக இருக்கும். அத்தகைய பற்களை அகற்றி விடுவது மட்டுமே ஒரே வழி. பல் மருத்துவரை குறிப்பிட்ட இடைவெ ளியில் சந்திப்பதன் மூலம் பல் சொத்தையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரிப்படுத்திவிட முடியும்.

செயற்கை பல்:

ஒரு பல் எடுத்தால், அதன் அருகில் உள்ள மற்ற பற்கள் அந்த இடத்தை நோக்கி நகர ஆரம்பிக்கும். மேல் பகுதியில் உள்ள பல் கிட்டத்தட் ட பய னற்ற பல் போலத்தான். அதுவும் பல் இல்லாத இடம் நோக்கி நகர ஆரம் பிக்கும்). இதைத் தவிர்க்க, அந்த இடத்தில் பொய் பல் கட்ட வேண்டியது மிக வும் அவசியம். முன்பு பிரி ட்ஜ் என்ற முறையில் இடைவெளி உள்ள இடத்தில் செயற்கைப் பல் கட்டப்பட்டது. ஆனால் இந்த மு றையில் நன்றாக இருக்கும் இரண்டு பற்களையும் செதுக்க வேண்டி யிருந்தது. அந்த இரண்டு பற்களின் ஆதரவுடன் எளிதில் கழன்றுவிடாத படியான செயற்கைப் பல் கட்டப்ப ட்டது.

பக்கத்தில் உள்ள இரண்டு பற்களின் ஆத ரவில் இந்த செயற்கைப் பல் இருப்பதா ல், அந்த பற்களில் ஒன்றில் பாதிப்பு வந்தாலும் இதைப் பொரு த்தமுடியாது. இது போன்ற பாதிப்பு உள்ளவர்களுக் கும், பல பற்கள் மாற்ற வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கும் பயன்படு ம்படி வந்ததுதான் இம்பிளான்ட். அதாவது செயற்கையாக பல்லின் வேர் போ ன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பல் கட்டும் தொழில்நுட்பம்.

இம்ப்ளான்ட்:

இயற்கையாக எப்படி வேர் போன்ற அமைப்புடன் பல் உள்ளதோ அதே போன்று செயற்கையாக ஸ்கூரு போ டும் அமைப்பு இம்ப்ளான்ட் அறு வை சிகிச்சை மூலம் உருவாக்கப்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில் இதன் மேல் செயற்கைப் பல் கட்டப்ப டும். கழன்றுவிடும் என்ற பயம் இந்தத் தொழில்நுட்பத்தில் இல்லை. ஒரு பல் முதல் அனைத்துப் பற்களுக்கும் இம் பிளான்ட் சிகிச்சை செய்யலாம்.

அச்சு அசலாக, இயற்கைப் பல் போன்று தோற்றம் அளிக்கும் செராமிக் பற்களைக் கட்டிக்கொள்ளலாம்.

தற்போது சிபிசிடி என்கிற டென்டல் சிடி ஸ்கேன் கருவி வந்துள்ளது. இதன் மூலம், எலும்பின் அடர்த்தி, ஆழம், இம் பிளான்ட் போடும் இடத்தி ல் நரம்புகள், ரத்தக் குழாய்கள் செல்கிறதா, நரம்பு ரத் தக்குழாய்க்குப் பாதிப்பின்றி எப்படி இம்பிளான்ட் போடலாம் என்பது போன் ற முடிவுகள் எடுக்க இந்த டென்டல் சிடி ஸ்கேன் உதவும்.

ஒரேநாளில் பல்கட்டும் நவீன முறைகளும் உள்ளன. இதற்கு டாக்டரை அணுகி எந்த மாதிரியான பல் வேண்டும் என்பது உள்பட சில ஆலோச னைகள், பரிசோதனைகள், வடிவமை ப்பு போன்றவற்றை முடிவு செய்து விட வேண்டும். அறுவைசிகிச்சை நடக்கும் தினத்தில் இம்பிளான்ட் பொ ருத்தப்பட்டு, ஏற்கனவே தயாராக உள் ள பல் செட் அதில் பொருத்த ப்படும்.

டூத் லேமினேட்:

திருமணத்துக்குத் தயாராக இருப்பவர் கள் கடைசி நேரத்தில் நிறம் மாறிய பல், பல் இடைவெளியே அகற்ற நினைப்பார்கள். குறுகிய காலத்தில் இதை சரிசெய்ய வந்ததுதான் டூத் லேமினேட் சிகிச்சை. செராமிக் கொ ண்டு இந்த சிகிச்சை செய்யப்படும். குறுகிய காலத்தில் செய்தாலும் இது நிரந்தர அமைப்புதான்.

லேசர் சிகிச்சைகள்:

ஈறுகளில் அறுவைசிகிச்சை செய்ய, சொத் தைப் பல்லில் உள்ள கிருமித் தொற்றை அழிக்க, பற்களை வென்மையாக்க எனப் பல வகைகளில் லேசர் கருவி பயன்படுத்தப்படு கிறது. சிலருக்கு ஈறுகள் மிகவும் கருப் பாக இருக்கும். இவர்களுக்கு லேசர் சிகிச்சையி ன் மூலம் பிங்க் நிறத்துக்கு ஈறுகளைக் கொண்டுவர முடியும்.

எலும்பு கிராஃப்ட்டிங்:

சிலருக்கு பற்கள் எல்லாம் விழுந்து போயி ருக்கும். அல்லது விழும் நிலையில் இருக்கும். அவர்களுக்கு இம் பிளான்ட் செய்யலாம் என்றா ல், தாடையின் அடர்த்தி மற்றும் உயரம் குறைவாக இருக்கும். இதனா ல் இம்பிளான்ட் செய்ய முடியாது என்று டாக்டர்கள் தெரிவிப்பார்கள். இவர்களுக்கு செயற்கைப் பல் கட்டும் வகையில் அளிக்கப்படுவதுதான் எலும்பு கிராஃப்ட்டிங் சிகிச்சை. முகத்தின் மேல் தாடையில் சைனஸ் என்ற ஒரு அமைப்பு உள்ளது. மேல்தாடைக்கும் சைனஸ் அமைப்புக்கு ம் இடையே உள்ள எலும்பின் தடிமன் மற்றும் உயரம் எவ்வளவு உள்ளது என்பதை ஓ.பி.ஜி. எக்ஸ் ரே மூலம் கண்டறியலாம். 8-10 மி.மீ. அளவுக்கு தடிமன் இருந்தால், அவர்களுக்கு இம்பிளான்ட் செய்ய முடியும். 5-6 மி.மீ. அளவுக்கு எலும்பு இருந்தால் சைனஸ் லிஃப்ட் என்ற சிகிச்சை முறையில் இம்பிளான்ட் செய்யப்படுகிறது. அதாவது உடலின் வேறு பகுதியில் இருந்து எலும்பை எடுத் து அறுவைசிகிச்சை மூலம் தாடையில் பொருத்தி, பின்னர் இம்பிளான்ட் செய்யப் படும். இதேபோன்று ஈறுக்கும் அறுவை சிகி ச்சை செய்யப்படுகிறது.

அவசியம் பார்க்க வேண்டும் பல் மருத்துவரை…

 குழந்தைக்கு ஆறு மாதம் ஆனதும், முதன் முறையாகப் பல் மருத்து வரிடம் குழந்தையை கொண்டுசென்று காண்பிக்க வேண்டும். இது அந்தக் குழந்தை க்கு எதிர்காலத்தில் பல் தொடர்பான பிர ச்னைகள் வரா மல் தடுக்க உதவும்.

 பல் முளைக்கும்போது ஏதேனும் பிரச் னை இருந்தாலும் அதைக் கண்டறிந்து சரிப்படுத்தலாம். ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருட இடைவெளியில் பல் பரிசோத னை செய்துகொள்வதன் மூலம், சொத் தைப் பல், ஈறு நோய்கள் வராமல் தடுப்பது டன், ஆரம்ப நிலையிலேயே அதை சரி             ப்படுத்திவிட முடியும்.

பற்களின் அமைப்பு, வரிசை போன்றவற் றில் குறைபாடு இருந்தாலும் சரி செய்து விடலாம்.

 சர்க்கரை நோயாளிகளுக்கு ஈறு தொடர்பான நோய்கள் வருவதற்கா ன வாய்ப்பு அதிகம்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை டாக்டரை அணுகி முழுப் பரிசோத னை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

 சர்க்கரை நோயாளிகள் இரவு படுக்கும் முன்பு பால் மற்றும் இனிப்புப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். கூர்மையான பற்களினால், ஈறுக ளிலோ, நாக்கிலோ புண் ஏற்பட்டால், உடன டியாக பல் மருத்துவரிடம் காண்பித்து சரிசெய்துகொள்ள வேண்டும்.

 லேசான வலி மற்றும் வீக்கம் இருந்தா லே, மருத்துவரை அணுகி ஆலோசனை பெற  வேண்டியது அவசியம்.

பற்களின் பகைவன்

புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவ தால் பற்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறி த்து கும்பகோணத்தைச் சேர்ந்த பல் மருத் துவர் பி.பிர காஷ் விளக்குகிறார்:

 இன்று உலக அளவில் தவிர்க்கக் கூடிய மரணங்கள் அதிகமானதற்கு புகையிலைப் பழக்கம் மிக முக்கியக் காரணம். புகை பிடிப்பதாலும், புகையிலைப் பொருட்களை மெல்லுவதாலும் வாய் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

 புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு வாயின் வெப்பநிலை அதிகரிக்கும். வாயில் உள்ள திசுக்கள் மாற்றம் ஏற்பட்டு உலர்ந்து போய் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் மிக எளிதில் பூஞ்ஜை மற்று ம் வைரஸ் போன்ற நுண்ணுயிர் தொற்று ஏற்படலாம்.

 புகைப்பவர்களுக்கு மற்றவர்களைவிட புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு ஆறு மடங்கு அதிகரிக்கும்.

 புகைபிடிப்பவர்களுக்கு ஈறு நோய் வருவதற்கான வாய்ப்பு இரு மடங்கு அதிகம். ஈறு வீக்கம், பல் ஆடுவது, ஈறுகளில் சீழ், ரத்தம் போன் ற பிரச்னைகள் வரலாம். புகைப்பிடிப்ப தால் பற்களில் கறை ஏற்படும்.

செய்யக்கூடியவை:

 சாப்பிட்டதும், ஒரு மணி நேர ம் கழித்து, அவசியம் பல் துலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்

 தூங்கச் செல்வதற்கு முன்பு பல் துலக்க வேண்டும்

 புகைத்தல், மது அருந்துதல் கைவிடுங்கள்.

 போதுமான அளவுக்கு தண்ணீர் அருந்துங்கள்.

 உணவு சாப்பிடும் நேரத்தில் மட்டும் இனிப்பு சாப்பி டுங்கள்.

 ஜூஸ் செய்து குடிப்பதற்குப் பதிலாக பழங்களைக் கடித்து சாப் பிடுங்கள்.

 ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பால் பொருட்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 குளிர்பானம் குடிப் பதைத் தவிருங்கள். இல்லையெனில், ஸ்ட்ரா பயன்படுத்துங்க ள்.

குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தியுங்கள்.

செய்யக் கூடாதவை:

 எவ்வளவு கோபமாக் இருந்தாலும் ‘நறநற’வெனப் பல்லைக் கடிக்கா தீர்கள்

 நகத்தைக் கடிக்கக்கூடாது. அதன் மூலம் கிருமிகள் வாய்க்கு சென்று வியாதிகளைப் பரப்பிவிடும்.

 பல்லை அழுத்தித் தேய்க்காதீர்கள்.

 பாட்டில் மூடி போன்ற கடினமான பொருட்களை பல்லால் கடித்துத் திறக்க முயற்சிக்காதீர்கள். பற்களுக்கு சேதம் ஏற்படுத்துவதுடன், உதடு களிலும் கீறல் அல்லது காயம் ஏற்படலாம்.

மேற்சொன்ன ஆலோசனைகளைப் பின்பற்றினால், ஆரோக்கியமான புன்னகை உங்கள் வசம்.

தவிர்க்க வேண்டியவை:

கார்பனேட்டட் கோலா குளிர்பானங்களில் உள்ள அமிலத்தன்மையான து பல்லின் எனாமலைப் பாதிக்கும்..

நொறுங்க தின்றால்… பல்லுக்கு ஆயுசு!

பல் வலி, பல் ஆடும் பிரச்னை உள்ளவர்கள் காய்கறி, பழங்களை அப்ப டியே கடித்துச் சாப்பிடும்போது, பல்லில் விரிசலை ஏற் படுத்தி, விழவும் செய்துவிடும். எனவே, கடிக்க ஏற்ற வகையில் சிறு துண்டுகளாக நறு க்கி நன்றாக மென்று சாப்பிடுங்கள்.

‘ஷாக்’லெட்

பல்லில் ஒட்டிக்கொள்ளக் கூடிய கடினமான சாக்லெட்களில் உள்ள இனி ப்பு நீண்ட நேரத்துக்கு நம் பல் இடுக்குகளில் ஒட்டிக் கொள்ளும். இதனா ல் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு பற்கள் பாதிக்கப்படுவதால், இவற்றை தவிர்ப்பது நல்லது.

உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் பாப்கார்ன்: சிப்ஸ் துகள்கள் பல் இடுக் குகளில் சிக்கிக்கொள்ளும்போது அதைச் சிதைக்கும் பாக்டீரியாக்கள் அமிலத்தை வெளியேற்றி பற்சிதைவுக்கு வழிவகுக்கிறது. பாப்கார்ன் கவரின் அடியில் பொரியாத சில சோள விதைகள் இருக்கும். மிகக் கடி னமான இந்த விதைகளைக் கடிக்கும்போது, பல்லுக்குப் பாதிப்பு ஏற் படலாம்.

உலர் பழங்கள்:

திராட்சை, பேரீட்சை போன்ற உலர் பழங்க ளை சாப்பிட்டதும் பல்லின் இடுக்குகளில் நன்கு ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்ட வை. இவற் றை, சாப்பிட்டதும் பல்லைச் சுத்தம் செய்ய மறந்துவிடக் கூடாது.

இயற்கையான பொருடக்ளைக்கொண்டும் பல்தேய்க்கலாம்.

பற்கள் சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்களை தேய்ப்போம். ஆனால் அவ்வாறு செய்தால் மட்டும் பற்கள் சுத்தமாகிவிடுமா என்ன? பற்களை சுத்தப்ப டுத்தும் பேஸ்ட்களை மட்டும் பயன்படுத்தினால், பற்கள் சுத்தமாகி விடும் என்று நினைக்க வேண்டாம். எப்போதும் செயற்கை பொருட்க ளைவிட இயற்கை பொருட்களுக்கு நிறைய மகத்துவம் உள் ளது. அதேப்போல் தான் பற்களை துலக்கவும் ஒரு சில சூப்பரான இயற் கை பேஸ்ட்கள் இருக்கின்றன. அந்த பொருட்கள் அனைத்தும் அன்றாட ம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் தான். அது என்னவென்று பார்ப் போமா!!!

வேப்பங்குச்சி- இது ஒரு பழங்கால முறை. இன்றும் கிராமப்பகுதிகளில் மக்கள் வேப்பங்குச்சியைப் பயன்படுத்தி தான் தங்கள் பற்களை துலக் குகின்றனர். அதனால் தான், அவர்கள் பற்கள் இன்றும் உறுதியாக இருக் கிறது. ஏனெனில் வேப்பங்குச்சியில் நிறைய ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டி பயோடிக் பொருள் இருக்கிறது. மேலும் இதனைக் கொண்டு பற்களை துலக்கினால், பற்கள் நன்கு சுத்தமாக பளிச்சென்று, துர்நாற்ற ம் நீங்குவதோடு, பற்களில் நோய்கள் எதுவும் வராமலும் இருக்கும். ஆகவே வேப்பங்குச்சியை கொண்டு பற்களை துலக்க, முதலில் அந்த குச்சியை உடைத்து, அதன் ஒரு முனையை நன்கு மென்று, பின் தேய்க்க வேண்டும்.1

உப்பு- உப்பைக் கொண்டும் பற்களை துலக்கலாம். ஏனெனில் இதில் சோடியம் அதிகம் உள்ளது. இதனால் பற்களில் உள்ள அழுக்குகள் போவதோடு, ஈறுகளும் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பற்களில் வலிகள் ஏற்பட்டால், அப்போது இதனைக் கொண்டு பற்களை துலக்க லாம். மேலும் இது வாய் துர்நாற்றத்தை ஏற்படாமலும் தடுக்கும். ஆக வே தினமும் ஒரு டீஸ்பூன் உப்பை எடுத்துக் கொண்டு, பற்களை துல க்குங்கள், பின் பாருங்கள் அதன் நன்மை எப்படி இருக்கிறதென்று.

கடுகு எண்ணெய்- கடுகு எண்ணெயை வைத்து பற்களை துலக்கினால், பற்கள் நன்கு வெள்ளையாக காணப்படும். இதுவும் பற்களை துலக்க ஒரு சிறந்த முறை. அதற்கு அரை டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயோ டு, சிறிது உப்பை சேர்த்து கலந்து, பற்களை துலக்க வேண்டும்.

எலுமிச்சை- எலுமிச்சையில் அதிகமான அளவு வைட்டமின் சி உள்ள து. இது பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைக்கும். பொதுவா க இந்த எலுமிச்சை எத்தகைய அழுக்குகள் என்றாலும் நீக்கிவிடும், அத்தகையது பற்களில் உள்ள அழுக்குகளை நீக்காமலா இருக்கும். ஆக வே அதற்கு தினமும் எலுமிச்சை சாற்றை வைத்து பற்களை மற்றும் ஈறுகளை தேய்க்க வேண்டும். பின் பாருங்கள் வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

கிராம்பு- கிராம்பில் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அத்தகைய கிராம்பு பற்களும் மிகவும் சிறந்தது. ஆகவே சிறிது கிராம்பு பொடியை வைத்து பற்களை தேய்க்க வேண்டும். இதனால் பற்கள் வெள்ளையாக இருப்பதோடு, பற்களில் வலிகள் ஏற்பட்டால், அதனை சரிசெய்துவிடும்.

ஆகவே பற்கள் நன்கு ஆரோக்கியமாக இருக்க, மேற்கூறிய பொருட்க ளையெல்லாம் பயன்படுத்துங்கள், பற்கள் நன்கு பளிச்சென்று மின்னு ம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவல்ல‍!

One Comment

  • suresh s

    பற்கள் பற்றியும் அதன் மூலம் வரும் நன்மைகள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: