Tuesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணிசமான வருவாய் தரும் “கறிவேப்பிலை சாகுபடி”!

மருத்துவப் பயன்கள் பல கொண்ட கறிவேப்பிலை சாகுபடியிலும் கணி சமான வருவாய் பெறலாம். பெரு ம்பாலானோர் கறிவேப்பிலையை மணத்துக்காகப் பயன்படுத்திவிட்டு உணவிலிருந்து அதை தூக்கி எறிகி ன்றனர். கறிவேப்பிலையில் உள்ள சத்துக்களையும், மருத்துவ குணங் களையும் அறிந்தவர்கள் அதை தூக்கி எறிவதில்லை. சுவைத்தும், சவைத்தும் சாப்பிட வேண்டிய அருமருந்து.

கருவேப்பிலையில் உள்ள சத்துக்கள்:

அனைத்து வகை சமையல்களிலும் தவ றாது இடம் பெற்றிருக்கும் கறி வேப்பி லையில் 0.66 % நீர்ச்சத்துள்ளது. 6.1% புரதம், 0.1%  கொழுப்பு, 0.16% மாவுப் பொ ருள், 6.4% நார்ப் பொருள் மற்றும் உடலு க்கு மிகவும் தேவைப்படும் தாது உப்புக் கள் 4.2% உள்ளது.

இது தவிர குறைந்த அளவில் காணப்ப டும் சத்துக்களாக 100 கிராம் இலையில் 810 மிலி கிராம் கால்சியம், 600 மிலி கிராம் பாஸ்பரஸ், 3.1 மிலி கிராம் இரும் புச் சத்து, 4.0 மிலி கிராம் வைட்டமின் சி, 2.3 மிலி கிரா ம் நிகோடினிக் அமிலம், வைட்டமின் ஏ ஆகியவையும் உள்ளன.

ருத்துவப் பயன்கள்:

பசியைத்தூண்டி, உண்ணும் ஆவலை வளர் க்கும். செரிப்பதற்கு துணை யாக இருக்கும். உடலுக்கு உரமூட்டவல்லது. வெள்ளை அணுக்களின் கிருமியை எதிர்க்கும் ஆற்ற லை கறிவேப்பிலையின் சாற்றை அதிகரிக் கச் செய்கிறது. இலையுடன் பிற மருந்துக ளைச் சேர்த்து துவையல் செய்து சாப்பிட பித்த வாந்தி, செரியாமை, வயிற்றுளைச்ச ல் குணமாகும்.

சாகுபடி முறைகள்:

கறிப்பிலை சாகுபடிக்கு வடிகால் வசதியுள் ள செம்மண் நிலம் மிக வும் அவசியம். வரி சைக்கு வரிசை 5 அடி, செடிக்கு செடி 5 அடி என்ற இடை வெளியில் நடவுசெய்ய லாம். ஆண்டுக்கு ஒரு செடிக்கு 20 கிலோ தொழு உரத்தை பகிர்ந்து இடுதல் வேண்டும். ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 100 கிலோ இலை பறிக்கலாம். ஒரு கிலோ கருவேப்பிலை ரூ.12-க்கு விலை போகிறது. ஒரு மரத்தில் இருந்து சராசரியாக ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டலாம்.

-தினமணி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: