ஒரு பக்கம் சீரியல்களில் அழுவாச்சி கண்ணீர், மறு பக்கம் விஜய் டி.வி. ‘காமெடியில் கலக்குவது எப்படி?’
நிகழ்ச்சியில் ஹ்யூமர் கலாட்டா என கலக்குகிறார் சின்னத்திரையின் ஸ்வீட் பியூட்டி சபர்ணா. கசங்கிய சேலையும், கண்ணீர் கண்களுமாய் ஷூட்டிங்கில் இருந்தவரிடம் ஜாலியும் கேலியுமாய்ப் பேசியதில்…
”ஹீரோக்கள் 60 வயசானாலும் ஹீ ரோவா நடிக்கிறாங்க… ஹீரோயின்கள் மட்டும் ஏன் சீரியலுக்கு வந்துடுறாங்க?”
”அவங்க என்னங்க பண்ணுவாங்க? இது வரைக்கும் அந்த மாதிரி கல்யாணம் ஆன பொண்ணுங்களை நம்ம தமிழ் சினிமா ஏத்துக்கிட்டது இல்லை. அதனால ஹீரோயின்களும் அதுக்கா ன முயற்சியை எடுக்கிற எண்ணம் வரலை.”
”சைட்…?”
”சூப்பரா அடிப்பேன்!
பட்… நான் சைட் அடிக்கிறது மத்தவ ங்களுக்கு மட்டுமில்ல, சம்மந்தப்ப ட்ட ஆளுக்குக்கூடத் தெரியாது. ஓரக் கண்ணால பார்க்கிறதுல அப்படி ஒரு கிக்.”
”உங்களை கரெக்ட் பண்றதுக்கு என் னங்க பண்ணணும்?”
” ‘அகத்தின் அழகு முகத்துல தெரியும்’னு சொல்வாங்க. அதனால, அழகா இருக்கணும்னு அவசியம் இல் லை. கேரக்டர் நல்லா இருந்தாப் போதும். கல்யாணம் பண்ண பொண்ணை கண் கலங்காம வெச்சுப் பார்த்துக்கிறவன்தான் ஆம்பளை. என்னோட சாய்ஸ் அப்படி இருக்கும்.”
”நிறைய அனுபவமோ?”
” அய்யய்யோ… இதுவரைக்கும் எனக்கு வந்த மொத்த லவ் லெட்டர் ரெண்டோ, மூணோதான். முதல் லெட்டர் ஒன்பதாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்தப்போ, பேக்க ரி கடை வெச்சிருந்த அஜித்துங்கிற மலை யாளிப் பையன் கொடுத்தது. லெட்டர்னு சொல்ல முடியாது… காதல் கவிதையை எழுதிவெச்ச கிரீட்டிங் கார்டு. அதை வாங் கிக்கிட்டு என்னோட ஃபிரெண்ட்ஸ்கிட்ட எல்லாம் ‘எனக்கும் ஒருத்தன் லவ் லெட்டர் கொடுத்திருக்கான்டி’னு பெருமைப் பட்டுக்கிட்டேன்.”
”இப்போ கிரீட்டிங்ஸ் கார்டுல காதல் கவி தை எழுதிக் கொடுத்தா?”
”நோ சான்ஸ்… ‘ஐ மேரி யூ…’னு அப்ரோச் பண்ணிட்டு, வீட்டுல வந்து பொண்ணு கேட்டுக் கல்யாணம் பண்ணிக்கணும். கல் யாணம் முடிஞ்சு ஆற அமர லவ் பண்ணிக்க லாம்.”
”முகத்துக்கு முன்னாடி விழற முடி மேல பொண்ணுங்களுக்கு அப்படியென்ன கிரேஸ் ?”
”சில பேருக்கு அது ஸ்டைல், சில பேருக்கு அது ‘என்னைக் கவனிடா’ங்கிற சிக்னல். முக் கியமானது பசங்க பக்கத்துல நிக்கும் போது வர்ற படபடப்பைப் போக்கிக்கிறதுக்கு!