Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சவால் எண்.7 (உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்!)

இப்பகுதியில் கடந்த 2 ஆம் தேதி அன்று, சவால் எண்6-.ன்படி வழங்கப் பட்ட‍ வாக்கியங்ளை, படித்த‍வர்கள் சுமார் 200 பேர் என்றாலும் கொடுக்க‍ ப்பட்ட‍ அந்த வாக்கியங்களில் எது சரி ? எது தவறு? என்பதை திரு. மணி வண்ண‍ன், திரு. எஸ். ஆர். எம்.சுந்தரம் திரு. ராஜூ (விஞ்ஞானி, ஐத ராபாத்,) திரு. கிருஷ்ணா மற்றும் செல்வி வித்யா ஆக மொத்த‍ம் ஐந்து பேர், சரியா சுட்டிக்காட்டி உள்ளார்கள்.இந்த ஐவரில் திரு. ராஜு (விஞ் ஞானி ஐதராபாத்) அவர்கள் மட்டும்தான் அவைகளுக்கான‌ சரியான பொருளையும் தெரிவித்துள்ளார்கள். மேற்காணும் ஐவரும் தங்களுக் கு இருக்கும் தமிழ் ஆர்வத்தை இங்கே பகிர்ந்து கொண்டார்கள். மேற்கூ றிய ஐவரையும் விதை2விருட்சம் இணையம் சார்பாகவும், அதன் வாச கர்களாகிய உங்கள் சார்பாக பலத்த‌ கரவொலியுடனும் குரலொலிக ளோடும் மனதார எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

எது சரி? எது தவறு? என்பதை மட்டும் சுட்டிக்காட்டாமல் அதற்கான பொருளையும், தவறான வார்த்தைகளையும் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

1.1 காளை வேளையில் காலையனின் காளை, காலை மிதித்ததால் காளை இழந்தான் காளையன்.

1.2 காலை வேளையில் காளையனின் காலை, காளை மிதித்ததால் காலை இழந்தான் காளையன்.

2.1 மாலை வேளையில் மாலை தொடுக்கும் வேலை முடித்து வந்தபோது மாலை இதழை புரட்டினார்.

2.2 மாலை வேலையில் மாலை தொடுக்கும் வேளை முடித்து வந்தபோது மாளை இதழை புரட்டினார்.

3.1 நான‌லாய் நானியவளிடம் நா ண‌யம் உண்டு ஆனால் நாந‌யம் இல்லை

3.2 நாண‌லாய் நாணியவளிடம் நா நயம் உண்டு ஆனால் நாண‌யம் இல்லை

 

8 Comments

    • a
      தாங்கள் சரி என்று சுட்டிக்காட்டிய 1.1 தவறான‌ விடை

      மேலும் தாங்கள் எது சரி என்று சுட்டிக்காட்டாம‌ல். அவ்வாக்கியங்களுக்கு உண்டான உரிய பொருளையும் சுட்டிக் காட்ட வேண்டும். ஏனென்றால், இந்த பதிவு எந்த நோக்க‍த்திற்காக துவக்க‍ப்பட்ட‍தோ அந்த நோக்க‍ம் சரியான வழியில் செல்ல‍ வேண்டும் என்பதே!

    • திரு. ராஜு (விஞ்ஞானி, ஐதராபாத்) அவர்கள் மின்னஞ்சல் மூலமாக தனது கைப்பட எழுதி அனுப்பிய விளக்க‍ம் இதோ உங்கள் பார்வைக்கு. . .
      a

  • 1.2-காலை நேரத்தில் காளையன் என்பவனின் காலை காளை மிதித்துவிட்டதால், காலை இழந்தான் காளையன்.
    2.1-மாலை நேரத்தில் பூ மாலை தொடுக்கும் வேலை முடித்து வந்து, மாலை என்னும் இதழை படித்தார்.
    3.2-நாணல் புல்லைப் போல் நாணும் குணம் கொண்டவளிடம், சொல் நயம் உள்ளது. ஆனால் நம்பகத் தன்மையில்லை.

Leave a Reply