Monday, May 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சீரற்ற முகத்தையும் சீராக்கும் “முக சீரமைப்பு சிகிச்சை!”

இந்த உலகில் வாழும் ஒவ்வொருவரிடமும் அழகுக்கான ஏக்கம் இருக்கிறது. அழகு இருந்தால் தான் மற்றவர்கள் ரசிக்கும் விதத்தில் நல்ல வாழ்க்கை வாழ முடியும். அதாவது தன்னம்பிக் கை தரும் அளவுக்காவது முகத்தின் அமைப்பு அழகாக இருக்கவேண்டும். எந்த வகையிலும் காண் பவரை உறுத்தும் வண்ணம் முக அமைப்பு இருந்துவிடக்கூடாது. 

நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லும் போது கூட தோற்றத்திற்கு அங்கே மதிப்பிருக்கிறது . தகுதி கள், திறமைகளுக்கு இணையாக தோற்றமும் இருக்கிறதா என்று எடை போடு கிறார்கள். அதனால்தான் ஆணுக்கும் பெண் ணுக்கும் லட்சணமான முகம் அத்தியாவசியமாகிறது. யாருமே அவலட்சணமான முகத்திற்கு ஆசைப்படுவதில்லை.

ஆனால் பிறவியிலேயே தாடை, பற்கள் மற்றும் உதடுக் குறை பாடு ஏற் பட்டிருந்தால் முக அமைப்பு திருப்தி இல்லாமல் போய்விடுகிறது. இதெ ல்லாம் இயற்கை கொடுத்த தண்டனை என்று விரக்தி அடையாமல், முக த்தை சீர்படுத்தி அழகாக்கும் முக சீரமைப்பு சிகிச்சை இப்போது நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் செய்யப்படுகிறது.

• முக அழகு மேம்பாடு:

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பிறவியிலேயே தாடை மற்றும் உதடு பிளவு குறைபாடுடன் கிட்டத்தட்ட 800-க்கு ஒரு குழந்தை பிறப்ப தாக ஆய்வு கள் தெரிவிக்கின்றன. பிறவியிலேயே சிலருக்கு குறைவா ன அல்லது கூடுதல் வளர்ச்சியுடன் தாடை இருக்கும்.

பற்கள் நேர் வரிசையாக இல்லாமல் ஏறுக்குமாறாக இருக்கலாம். இன் னும் சில ருக்கு முகம் ஒருபக்கம் கோணலாக அமைந்திருக்கும். இது போன்ற குறைபாடுகளுக்குக் காரணம், முக எலும்புகள் முழுமையாக வளர்ச்சி அடையாததுதான். இதுதவிர விபத்துக்களால் தாடை, பற்கள் சேதமடைந்து முகத்தின் அழகு பாதிக்கப்படலாம்.

சிலருக்கு முக எலும்புகள் உடைந்து சேதமடை யலாம். கதிர்வீச்சு போ ன்ற காரணிகளாலும் முகத்தில் குறைபாடு தோன் றலாம். சிலர் தங்க ள் பழக்க வழக்கத்தாலும் குறை பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அதாவது ஒரு சில குழந்தைகள் மட்டும் பள்ளிக்குச் செல்லும் வயதைத் தாண்டிய காலகட்டத்திலும் கை சப்பும் பழக்கத்தை தொடருகிறார்கள்.

இதனால் முகத்தின் அமைப்பு சற்று மாறிவிடுகிறது. இதுதவிர வாயைத் திறந்து தூங்கும் பழக்கம் சிலரி டம் இருக்கிறது. இதுபோன்ற பழக்கங்க ளாலும் இன் னும் சில கணிக்க முடியாத காரணங்களாலும் முக அமைப் பில் விரும்பத் தகாத மாற்றங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.

முகத்தில் எலும்புகள், பற்கள், தாடைகளில் தோற்றக் குறைபாடுகள் இருந்தால் அதை சீர்படுத்தி இயல்பான அழகுக்கு கொண்டு வந்து விட இயலும். உதட்டுப்பிளவு, அண் ணப்பிளவு போன்ற குறைபாடுகளையும் சிகிச்சை மூலம் எவ்வித தழும்புகளும் வெளியே தெரியாதவண்ணம் சீராக்கிவிடலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: