நடிகர் கமலஹாசன் 1954-ஆம் வருடம் நவம்பர் மாதம் 7-ஆம் தேதி தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஸ்ரீனிவாசன்-ராஜலட்சுமி தம்பதிகளுக்கு பிறந்தார். இவர் 1960-ஆம் ஆண்டு ‘களத்தூர் கண்ணம்மா’ என்ற திரை ப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து நடிகராக மட்டுமல் லாது திரை க்கதையாசிரியர், இயக்குனர், பாடலாசிரிய ர், பின்னணிப் பாடகர், நடன கலைஞர் என பன்முகத் தன்மை கொண்டவராக தமிழ் சினிமாவில் இன்றளவும் விளங்கி வருகி றார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையா ளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவர் 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல இந்தி ய விருதுகளை பெற்றுள்ளார். இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக் காக இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ள து. திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த இந்திய நடிகர்கள் மிகச்சிலரில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார்.
இதே தேதியில் நடந்தபிற நிகழ்வுகள் :-
* 1492 – உலகின் மிகப் பழமையான விண்கல் மோதல் பிரான்சில் இடம் பெற்றது.
* 1502 – கொலம்பஸ் ஹொண்டூ ராஸ் கரையை அடைந்தார்.
* 1893 – கொலராடோ மாநிலத்தில் பெண்க ளுக்கு வாக்குரிமை வழங் கப் பட்டது.
* 1931 – மா சே துங் சீன சோவியத் குடிய ரசை அக்டோபர் புரட்சியின் நினைவு நாளில் அறிவித்தார்.
* 1941 – நாசி ஜெர்மனியர் உக்ரேனில் நெமிடீவ் என்ற இடத்தில் 2580 யூதர்க ளைக் கொன்றனர்.
* 1983 – ஐக்கிய அமெரிக்காவின் செனட் கட்டடத்தில் குண்டு வெடித்தது.
* 2002 – அமெரிக்கப் பொருட்களின் விள ம்பரங்களை அறிவிக்க ஈரான் தடை செய் தது.
60 வது ஆண்டு. (50 வது ஆண்டு என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது)
ulakam potrum”ulakkai naayakan”!