Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கருக்கலைப்பிற்குபின் ஏற்படும் குற்ற‍ உணர்ச்சி, மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து விடுபட சில குறிப்புகள்

கருக்கலைப்பு என்பது பரவலாக நடக்கும் ஒன்றுதான். கருக்கலைப்பு நடப்பதற்கு பல காரணங்கள் உள்ள து. அது சட்ட விரோதமாகவும் நடைபெறுகிறது; தம்பதிகளின் சம்மதத்தோடும் நடை பெறுகிறது. கருக்கலைத்தல் காயத்தை ஏற்படு த்துமா? காயம் என்றால் அது உடல் ரீதியான காயம் என்றில்லை, அது மன ரீதியான காயமாக கூட இருக்க லாம். கருக்கலைத்தலைப் பற்றி பல வாக்குவாதங்கள் நடந்து கொண் டுதான் இருக்கிறது. கருக்கலைப்பு செய்வ தால் பெண்களுக்கு மன ரீதி யாக எந்த பாதிப்பும் ஏற்பட போ வதில்லை என்று சில ஆராய்ச்சி யாளர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் கருக்கலைப்புக்கு பின் ஒரு பெண் மன ரீதியாக காயங்களை பெறுகிறாள் என்று பல ஆய்வுகள் கூறுகிறது.

கருக்கலைப்பு என்பது பெண்களி டம் பல விதமான அலை எழுச்சி களை உண்டு பண்ணும். அதனா ல் குற்ற உணர்வு, படபடப்பு, மன அழுத்தம், எதையோ இழந்த உணர்வு, கோபம், ஏன் தற்கொலை போன்ற பல உணர்சிகளுக்கு கூட ஆளாவார் கள். கருக்கலைப்பைப் பற்றி தன்னு டைய உணர்வை புரிந்து கொள்ள வே பல பெண்களுக்கு கடினமாக இருக்கு ம். அதனால் தான் அவ்வகை பெண் கள் பலதரப்பட்ட உணர்ச்சிகளுக்கு ஆளாகின்றனர். குற்ற உணர்வு மற்று ம் எதையோ இழப்பதை போன்ற உணர்வுதான், பலபெண்கள் தங்க ளை தாங்களே பழிப்பதற்கும், காயப்படுத்துவதற்கும் காரணமாக விள ங்குகிறது.

கருவை, கலைத்தப்பின் ஏற்படும் வரு த்தம் தீர்ந்தவுடன், சில பின் விளைவு களை பெண்கள் சந்திக்க வேண்டியிரு க்கும். அதனை கையாள பெண்கள் சில வற்றை பின்பற்ற வேண்டும். இப்போ து கருக்கலைப் புக்கு பின் பெண்களுக் கு ஏற்படும் மன அழுத்தத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை உங்க ளுக்காக நாங்கள் விளக்கியுள்ளோம்.

கருக்கலைப்பிற்கு பின் ஏற்படும் மன அழுத்தத்தை கையாள சில டிப்ஸ் …

வலியை நினைவில் வைத்துக் கொள் ளுங்கள்

முதலில் அடக்கிய உணர்ச்சிகளை எல்லாம் வெளிக்கொண்டு வர வே ண்டும். பொதுவாக வெட்கம், குற்ற உணர்வு மற்றும் சிசு இழப்பு போன் ற உணர்வுகளையெல்லாம் உங்களுக் குளே அடக்குவீர்கள். இப்படி உங்களு க்குள் ஒழித்து வைத்திருக்கும் உணர் வுகளை வெளியில் கொட்டி விடுங்க ள். அப்படி செய்தால் தான், மனம் அந்த இழப்பை ஏற்று கொள்ளும் பக்குவத் தை அடையும்.

கோபத்தை அறிந்து கொள்ளுங்கள்

கருக்கலைப்பு செய்யும் பல பெண்கள் தங்கள் கோபத்தை வெளிக்காட்ட தயங்குவார்கள். உண்மையிலே யே அவர்கள் முழு மனதுடன் இந்த கருக்கலைப்பை செய்திருக்க மாட் டார்கள். சந்தர்ப்பமும், சூழ்நிலையு ம் தான் அவர்களை கருக்கலைப்பு செய்ய தூண்டியிருக்கும். அதனால் ஏற் படும் கோபத்தை, அவர்கள் தங்களுக்குள்ளேயே அடக்கி வைத் துக் கொள்வார்கள். இப்படி அடக்கி வைத்திருக்கும் கோபம் ஒரு நாள் வெடித்து பல விபரீதங்களை ஏற்படு த்திவிடும். அதனால் கருக்கலைப்பு செய்த பெண்கள் கோபத்தை வெல் வது மிகவும் முக்கியம்.

கவுன்சிலிங் செல்லுங்கள்

கருக்கலைப்பின் வலியை ஒரு பெண் அனுபவித்த பின், அந்த வேத னையை திரும்பி பெற இய லாது. ஆனால் கண்டிப்பாக அந்த வலியை பற்றி யாரிடமாவது பேசலாம். அதனைப்பற்றி உங்க ள் கணவனிடமோ அல்லது குடு ம்ப உறுப்பினரிடமோ பேச தயக்கமாக இருந்தால், கவுன் சிலிங் செய் யும் வல்லுனரிடம் செல்லலாம். ஏனெனில் கவுன்சிலிங் கொடுப்பவர் உங்கள் வலியை போக்க சில தெரபிகளை பரிந்துரைப்பார்க ள். மேலும் மன அழுத்தத்தை நீக்க உங்களுக்கு வேண்டிய உதவிக ளை செய்வா ர்கள்.

எனவே கருக்கலைப்பு செய்த பின் மன ரீதியாக உங்களுக்கு ஏற்பட்டுள் ள மன அழுத்தத்தை நீக்க மேற்கூறிய வழிகளை பின்பற்றுங்கள். அப்படி செய்தா ல் உங்கள் வலி சீக்கிரமாகவே குறையும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply