Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தேவதாசியின் மீது கொண்ட தீவிர‌ காதலால் சைவ சமையத்திற்கு மாறிய வைணவர்

காளமேகம் திருவரங்கப் பெருமாளின் திருக்கோயில் மடையன் அதா வது சமையல்காரன். அவர் காதல் கொண் டதோ திருவானைக்காவல் தேவதாசியி ன் மீது.

மார்கழி மாதக் குளிரில் புலவருக்கு வருகி ன்றது ஒரு பெரிய இடையூறு. என்ன செய் வார் புலவர். துடித்துப் போனார். ஆமாம். ஒரு மார்கழி மாத இரவிலே புலவர் போகி ன்றார் காதலியின் வீட்டிற்கு பெருமாள் கோயிலின் அக்காரவடிசில் அதிரசம் புளி ச்சாதம் என்று எல்லாவற்றையும் எடுத்து க் கொண்டு. காதலி, கதவு திறக்க மறுக்கின் றார். காளமேகம் அதிர்ந்து போகின்றார். மார்கழி மாதக் குளிர் அவரை வருத்துகின்றது.

காரணம் கேட்கின்றார். அந்தப் பெண்ணோ, கதவைத் திறக்க முடியாது என்கின்றார். காளமேகம் கெஞ்சுகின்றார். அந்தத் திருவானைக்காவல் கோயில் தேவதாசிப் பெண் சொல்கின்றா ர். மார்கழி பிறந்து இந்த் மூன்று நாளும் எனது தோழியர்கள் செய்யும் கேலியை என்னால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை. மானிக்க வாசகப் பெருமானு டைய திரு வெம் பாவையைக் கோயிலில் பாடும் போதெ ல்லாம் நான் நாணப்பட்டு கேவலப்பட்டு நிற்கின்றேன்.

ஆமாம் எம் கொங்கை நின்னரன்பர் அல் லாதார் தோள் சேரற்க என்ற திருவரிக ளை என்னால் பாட முடியவில்லை. எனது மார்பகங்கள் சேர் வது உமது திருத் தோளினைத்தானே. காளமேகம் புரிந்து கொள்கின்றார். இவரோ வைணவர். அவ்வளவுதானே என்று வெளியி ல் இருந்து தனது காதலி க்கு உறுதிமொழி தருகின்றார். இந்தக் கணத்தி லிருந்து நான் சைவ சமயத்தை சார்ந்தவன் என்று. கதவு திறந்தது.

மறு நாள் நீராடி சிவச் சின்னங்களோடு காள மேகம் திருவரங்கத்திற்குள் நுழைகின்றார். அங் குள்ள வைணவர்களில் சிலர் பிள்ளை யாருக்கு திரு மண்ணைக் குழைத்து நாமம் இட்டு காள மேகத்திடம் அவர் தும்பிக்கை யாழ்வார் எனக் கேலி செய்கின்றனர். அங்கே தான் காளமேகத் தின் பதில் அவரது அறிவின் பெருமையைக் காட்டுகின்றது.

ஆமாம் காளமேகம் சொல்லுகின்றார். உண்மை தான் இவரது தந்தை சிவபெருமானுக்கு பிறப்பு ம் கிடையாது இறப்பும் கிடையாது. இவரது தாய் மாமனான பெருமாளோ பத்துப் பிறபெடுக் கின்றவராக இருப்பதனால் அவரது சொத்தை இடை வெளியில் யாரும் எடுத்துக் கொண்டு போகாமல் இருப்பதற்காக இவர் தாய்மாமனின் சின்னமான திருமண் ணை நாமமாகத் தரித்து இங்கே காட்சி தருகின் றார். அதுவுமல்லாமல் திருமாலின் மகனான காமனை அதாவது மன் மதனை வேறு சிவபெருமான் எரித்துத் தொலைத்து விட்டதால் வாரிசும் இல்லாமல் இருக்கின்றது என்பதானாலே தான் தும்பிக்கையா ழ்வார் இல்லை மாமனுக்கு நம்பிக்கையாழ் வாராக இருக்கின்றார். என்னும் பொருள் தரும் பாடலை த் தருகின்றார்.

செய்யுள்

தந்தை பிறந்திறவாத் தன்மையினால் தன்மாமன்
வந்து பிறந்திருக்கும் வண்மையினால் – முன்னொரு நாள்
வீண் இக்கு வேளை எரித்தான் மகன் மாமன்
காணிக்கு வந்திருந்தான் காண்

– தமிழ்க்கடல் நெல்லைக்கண்ண‍ன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: