Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மூன்றாவது அணி… நாட்டின் பிணி! – தலையங்கம்!

மூன்றாவது அணி… நாட்டின் பிணி!

2013, நவம்பர் (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளி வந்த தலையங்கம்

தேசத்தின் தேர்தல் திருவிழா களை கட்ட‍ ஆரம்பித்து விட்ட‍து. திரு விழா என்றால் கோமாளிகள் இல்லாமலா? ஒவ்வொரு தேர்தல்திருவிழா அறிவி ப்பு வந்த அடுத்த‍ விநாடியே மூன்றா வது அணி முகமூடிக் காரர்கள் கிச்சு கிச்சு மூட்ட கிளம்பி விடுவார்கள். இந்த முறையும் கிளம்பியிருக்கிறா ர்கள்.

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற‍ விழா மேடையொன்றில் 17 தலங்கள் 34 கைகளுடன் மாற்று சக்தியின் தரிசனம் கிடைத்த‍து. இந்த சக்தியுடன் இன்னும் மம்தா, கலைஞர், தெலுங் கு தேச நாயுடு, சரத் பவார், தெலுங்கானா சந்திர‌ சேகர், மாயாவதி அப்புறம் நண்டு சிண்டுகள் எல்லாம் சேர்ந்து மகாசக்தியாக உருவாகுமாம் (ஐயோ பயங்கரமே!)

நாங்கள்தான் மாற்று என்று மார்தட்டுகிற இந்த மாற்று அணியின் பலரும் காங்கிரஸ். பா•ஜ•க• இந்த இரண்டு கட்சிக ளோடும், மாறி மாறி அணி சேர்ந்து ஆட்சி சுகத்தை அன்போது சொறி( ரி )ந்து கொண்டவர்கள் தானே!

30 கோடி முகமுடையாள் ஆனால் சிந்தனை ஒன்றுடையாள் என்று அன் று பாரதி பாடியது. எல்லாரின் சிந்த னையும் நோக்க‍மும் சுதந்திரம் பற்றி மட்டுமே என்பதுதான். ஆனால் இத்த னை முகங்கள் கொண்ட மூன்றாவது சனி… மன்னிக் க‍வும் மூன்றாவது அணியின் சிந்தனையெல் லாம் எல்லோருக்கும் பதவி சுகம் தவிர, வே றொன்றும் அறியேன் ப்ராபரமே! என்பதுதான்.

ஊழலையும் மதவாதத்தையும் விரட்டி உருப்படியான ஆட்சி தர வே ண்டும் என்ற உறுதியான கொள்கையும், தேசப் பற்றும் உண்மையிலேயே இந்த அவதார ங்களுக்கு (புதிய பிறவி என்று பொருள் கொள்க) இருக்குமேயா னால்… ஒரே அணியில் ஒரே சின் ன‍த்தில் எல்லா இடங்களி லும் வேட்பாளர்களை நிறுத்த‍லாமே? பொதுவான தேர்தல் அறிக்கை தயாரிக்க‍லாமே? யார் பிரதமர் என்பதை இப்போதே அறிவிக்க‍லாமே? முரண்டு பிடி க்கிற தலைவர்களையும் முரண்பாடு ள்ள‍ கொள்கைகளையும் கொண்டு ள்ள‍ மூன்றா வது அணியால் எந்த ஜன்மத் திலும் இது நடக்கப் போவதில்லை.

சரிந்து வரும் பொருளாதாரம் சக நாடுகளி ன் எல்லை மீறல், உள் நாட்டிலேயே உள் குத்து, அந்நிய முத லீடு, என்ற பெயரில் ஆக்கி ரமிப்பு… இந்த இக்கட்டான சூழலிலிருந்து இந்த தேசத்தைக் காப்பாற்ற‍ வேண்டுமானா ல். . .

(ஏ)மாற்று அணியான மூன்றாவது அணி என்ற தேசத்தின் பிணியை விரட்டுவோம். விழிப்பு டன் இருப்போம் சரியான விடை தேடுவோம்.

இந்த வைர, வைடூரிய வரிகளின் உரிமையாளர்

உதயம் ராம் (நம் உரத்த‍ சிந்தனை)

தொடர்புக்கு கைபேசி 94440 11105

One Comment

  • Dheena Dhayalan (Raju)

    Miga Sariyaana Saattaai Adi. Naattai Vettai (hunting) aadum nokkamdhan indha moonraavadhu Aniyin Aakkam.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: