Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சவால் எண்.9 (உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்!)

இப்பகுதியில் நேற்று (06-11-2013) ஆம் தேதி அன்று, சவால் எண்.8-.ன்படி கொடுக்க‍ப்பட்ட‍ வாக்கியங்ளை, படித்த‍வர்கள் சுமார் 200 பேர் என்றாலும் கொடுக்க‍ப்பட்ட‍ அந்த வாக்கியங்களில் எது சரி ? எது தவறு? என்பதை, திரு. கார்த்திக் பழனிச்சாமி, திரு. ப்ரியன், திரு. ஏ. கோபால கிருஷ்ணன் (பொறியாளர், துபாய்), செல்வி வித்யா, மற்றும் தீனதயாளன் ஆக மொத்த‍ம் ஐவர், சரியாக‌ சுட்டிக்காட்டி சரியான பொருளையும் தெரிவித்து ள்ளார்கள். மேற்காணும் ஐவ‌ரும், தங்களுக்கு இருக்கும் தமிழ் ஆர்வத் தை இங்கே பகிர்ந்து கொண்டார்கள். மேற்கூறிய ஐவரையும், விதை2 விருட்சம் இணையம் சார்பாகவும், அதன் வாசகர்களாகிய உங்கள் சார்பாக பலத்த‌ கரவொலியுடனும் குரலொலிகளோடும் மனதார எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பு

வாக்கியங்களுக்குண்டான சரியான பொருளை ஒரு சிலரே குறிப்பிடு கின்றனர். குறைந்த பட்சம் தவறான வாக்கியங்களையாவது குறிப்பிட வேண்டுகிறேன். (அதனால் பொருளை குறிப்பிடுபவர்களை நான் வேண் டாம் என்று சொல்ல வில்லை. அவர்கள் தாராளமாக பொருளை குறிப்பி டலாம்.)

இதோ அந்த வாக்கியங்கள்!

1.1) மங்கையை மனந்த மனால‌ன், மன‌ம் வீசும் மார்ரான் தோட்ட‍த்து மள்ளிகையிடம்கூட மண‌ம் மயங்காது, கன்ணியம் காட்டி தன் ஆன்மையை காப்பவனே சிர‌ந்த ஆன்மகண் ஆவாண்

1.2) மங்கயை மணன்த மணால‌ன், மந‌ம் வீசும் மாற்றாண் தோட்ட‍த்து மல்ளிகையிடம்கூட‌ மனம் மயங்காது, கண்னியம் காட்டி தண் ஆண்மையை காப்பவணே சிறன்த ஆண்மகன் ஆவான்

1.3) மங்கையை மணந்த மணாளன், மணம் வீசும் மாற்றான் தோட்ட‍த்து மல்லிகையிடம்கூட‌ மனம் மயங்காது, கண்ணியம் காட்டி தன் ஆண்மையை காப்பவனே சிறந்த ஆண்மகன் ஆவான்

2.1) இன்னாள் இள்ளால் வந்த நந்நாள், இள்ளால் எனக்கு இள்ளாது இறுந்தால் என் இள்ள‍ர‌ வால்வில் சுகம் நிள்ளாது செண்ரிறுக்கும்.

2.2) இந்நாள் இல்லாள் வந்த நன்நாள், இல்லாள் எனக்கு இல்லாது இருந்தால் என் இல்ல‍ற வாழ்வில் சுகம் நில்லாது சென்றிருக்கும்.

2.3) இன்நாள் இல்லாள் வந்த நன்நால், இள்லாள் எனக்கு இல்ளாது இருந்தால் என் இல்ல‍ர‌ வாழ்வில் சுகம் நிள்லாது சென்றிருக்கும்.

3.1) கன்னியவள், கடைக்கண் பார்வை காட்டியதால்தான் வில்லொடித்த வில்லாளன் ஆனான் வில்லேந்திய ஆடவன்

3.2) கண்னியவல், கடைக்கன் பார்வை காட்டியதாள்தான் விள்லொடித்த விள்லால‌ன் ஆணான் விள்லேன்திய ஆடவன்

3.3) கன்ணியவல், கடைக்கண் பாற்வை காட்டியதால்தான் வில்ளொடித்த வில்ளால‌ன் ஆனான் வில்ளேந்திய ஆடவன்

10 Comments

Leave a Reply