குருடர்களுக்கு கண்ணாடி எவ்வளவு பயனு ள்ளதோ அவ்வளவு பயனுள்ளதே முட்டாள் களுக்கு புத்தகங்கள்
கல்வியே சிறந்த நண்பன். கல்விமான்களு க்கு செல்லுமிட மெல்லாம் சிறப்பு. கல்வி அழகையும், இளமையையும் விஞ்சி விடும்.
பிறர் செய்யும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங் கள், ஏனெனில் நீங்களாகவே பட்டு உணர்ந்து பாடம் கற்க வேண்டு மெனில் இந்த ஆயுள் போதாது.
ஒருவர் மிகவும் நேர்மையாக இருக்கக் கூடாது. நேர் நிமிர்ந்த மரமே முதலில் வெட்டிச் சாய்க்கப் படுகிறது. நேர்மையான மனிதனே அதிக சோதனைகளை எதிர்கொள் கிறான்.
பாம்புகள் கூட விஷமில்லாமல் இருக்கலாம், ஆனால் விஷம் இருப்பதாக பாசாங்கு செய்வது அவசியம்.
ஒவ்வொரு நட்புறவிலும் கொஞ்சம் சுயநலம் உள்ளது. சுய நலமற்ற நட்புறவு இல்லவேயில்லை. இதுதான் கசப்பான உண்மை!
எந்த ஒரு வேலையைத் தொடங்குவதாக இருந்தாலும் முத லில் உங்களிடம் நீங்களே 3 கேள்விக ளை கேட்கவேண்டும்: நான் ஏன் இதனை ச் செய்யவேண்டும், முடிவுகள் என்ன வாக விருக்கும், நான் இதில் வெற்றி பெறுவேனா? இந்தக்கேள்வி களை ஆழ மாகச் சிந்திக்கும்போதுதான் திருப்திகர மான விடைகள் கிடைக்கும். முயற்சி செய்யுங்களேன்.
பயம் உங்களை நெருங்கும்போது அதனை தாக்கி அழியுங்க ள்!
உலகின் ஆகப்பெரிய சக்தி இளமையு ம் பெண்ணின் அழகும் தான்!
ஒரு வேலையத் துவங்கிவிட்டீர்களெ ன்றால் அதன் விளைவுகள் பற்றி அச்சப்படக்கூடாது. கைவி டாதீர்கள்! நேர்மையாக பணியாற்றுபவர்கள் மகிழ்ச்சியான வர்கள்.
மலரின் மணம் காற்றின் திசைவழி மட்டுமே செல்லும், ஒரு நல்ல மனிதனின் நற்தன்மை அனைத்து திசைகளுக்கும் செல்லும்.
விக்கிரகங்களில் கடவுள் இல்லை. உங்கள் உணர்வுகளே உங்கள் கடவுள். ஆன்மாவே கோயில்.
மனிதன் செயலினால் உயர்ந்தவனே தவிர பிறப்பினால் அல்ல.
உங்களைவிட தகுதியில் உய ர்ந்தவர்களிடமோ, தாழ்ந்தவ ர்க ளிடமோ நட்பு பாராட்டா தீர்கள், இந்த நட்பினால் மகிழ்ச்சி ஏற்படாது.
முதல் 5 ஆண்டுகளுக்கு உங் கள் குழந்தைகளை அன்பு டன் நடத்துங்கள். அதன் பிறகு கண்டியுங்கள், 16 வயது ஆகி விட்டதா நண்பராக நடத்துங்கள், வளர்ந்த உங்களுடைய குழந்தைகளே உங்கள் சிறந்த நண்பர்கள்.
Wonderful
Reblogged this on Gr8fullsoul.