Tuesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுறவின்போது பொதுவாக ஏற்படும் சந்தேகங்களும் சரியான விளக்கங்களும்!

உடலுறவில் சந்தேகமா – உங்களுக்கான பதில்கள் இதோ !!
இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் சந்தேகம் வந்தா யார் கிட்டப் போய் விளக்கம் கேட்கிறது? கூச்ச மா இருக்கே என்று நினைக்கிற மாதிரி உங்கள் மனதைக் குடையு ம் கேள்விகள் ஏதேனும் இருக்கின் றனவா? இதோ சில பொதுவான சந்தேகங்களும், அவற்றுக் கான விளக்கங்களும்….

ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகும் சிலருக்கு இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இது கவலைப்பட வேண்டிய விஷயமா?

பிறப்புறுப்புத் தொற்று காரண மாக சிலருக்கு இப்படி ஏற்பட லாம். ஆனால் ஒவ் வொரு முறை உறவுக்குப் பிறகும் இப்படி இருந்தால் மகப்பேறு மருத்துவரைக் கலந்தாலோ சிப்பது பா துகாப்பானது.

தாம்பத்திய உறவின்போது சிலருக் குப் பிறப்புறுப்புக் கசிவே இருப்பதி ல்லை. வறட்சியாகவே இருப்பதா ல் உறவு முழுமை யடைவதில்லை . என்ன செய்யலாம்?

உணர்ச்சிகளின் உந்துதலால் பிறப் புறுப்புக் கசிவு தானாகவே ஏற்படும். சில பெண்களுக்கு உறவுக்கு முன்பு நீண்ட நேர முன் விளையாட்டு தேவைப்படலாம். ஒவ்வொரு பெண் ணின் உடலிலும் கிளர்ச்சியூட்டும் பகுதி எது என்று அவர் களுக்குத் தெரியும். அதைத் தன் கணவரிடம் தெரியப்படுத்தி, அதைத் தூண்டச் செய்ய வேண்டும். அப்படியும் கசிவு ஏற்பட வில்லை என்றால் கே.ஒய்.ஜெல்லி (K.Y Jellly) போன்ற செயற்கை வழு வழுப்புத் திரவங்களை உபயோகிக்கலாம்.

குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வருடக் கணக்கில் கருத் தடை மாத்திரைகளை உட் கொள்வதால் கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் பிரச்சினைகள் வருமா?

பெரும்பாலும் அப்படியில்லை. மாத்திரைகளை நிறுத்தியதும் கர்ப்பம் தங்கும். ஆனால் மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே அவை எடுத்துக் கொள்ளப்பட வே ண்டும்.

மன உளைச்சலுக்கும், மாதவிலக்கு தள்ளிப் போவதற்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டா?

நிச்சயமாக உண்டு. மன உளைச் சல் காரணமாக ஹார்மோன் மாறு தல்கள் ஏற்பட்டு, மாத விலக்கு இரண்டொரு நாட்களு க்கோ அல் லது அதற்கு மேலுமோ தள்ளிப் போகலாம்.

கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் மார்பகங்கள் அளவில் பெருத்துப் போகுமா?

கருத்தடை மாத்திரைகள் உட்கொ ள்ளும் சில பெண்களுக்கு உடலிலு ள்ள தண்ணீரின் சேமிப்பு காரணமா க மார்பகங்களில் வலியும், வீக்கமு ம், மென்மையான உணர்வும் ஏற் படலாம். ஆனால் மார்பக அளவு கூட வாய்ப்பில்லை. இன் னும் சில பெண்களுக்குக் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடு வதன் விளைவால் உடல் பெ ருக்க வாய்ப்புகள் உண்டு. அத னாலும் மார்பகங்கள் பெருத் து விட்ட மாதிரித் தோன்றும்.

பிறப்புறுப்பு நாற்றம் ஏன் ஏற் படுகிறது? அதை சரியாக்க என்ன செய்ய வேண்டும்?

ரொம்பவும் மோசமான வாடை என்றால் அது தொற்றுக் கிருமிகளின் தாக்குதலால் இருக்கும். உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாதவிலக்கிற்கு முன்போ அல்லது மாத விலக்கின் போதோ அப்படி நாற்றம் வீசுவது இயற்கை யே. உடலில் ஏற்படுகிற வே தி மாற்றங்களின் விளைவே அது. தொடர்ந்து நாற்றம் இருந்தால் பிறப்புறுப்பை அடிக்கடி சுத்தமாகக் கழுவி, உலர்வாக வைத்திருக்க வேண் டும்.

திருமணமாகி எத்தனை வருட ங்கள்வரை குழந்தைப்பேற்று க்காகக் காத்திருக்கலாம்?

ஒரு வருடம் வரைக் காத்திருக் கலாம். கருத்தடை முறைகள் எதையும் பின்பற்றாமல் தாம்ப த்திய உறவு கொள்ளும் பெண்களில் 80 சதவிகிதத்தினர் ஒரு வருடத்திற்குள் கர்ப்பம் தரிக்கின்றனர். மீதமுள்ள 20 சதவிகித த்தினர் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிரு க்கிற து.

பிறப்புறுப்பில் அடிக்கடி ஏற்படும் அரிப்பி ற்கு என்ன காரணம்?

பூஞ்சைத் தொற்றே இப்பிரச்சினைக்கான முதல் முக்கிய காரணம். இது தானாக வந்து தானாகவே சரியாகிவிடும். உள்ளா டையினால் ஏற்படும் அலர்ஜி, பிறப்புறுப்பில் ஏடா கூடமாக வளரும் ரோமங்கள், ஈஸ்ட் தொற்று போன்றவையும் இதற் கான பிற காரணங்கள். தொடர் ந்து ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பின் விளைவாக பிறப் புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமா கவும் இப்படி அரிப்பு ஏற்படலாம்.

பிறப்புறுப்பைச் சுற்றி வலியில் லாத சிறு கட்டிகள் மாதிரித் தெரிவன என்ன? அவற்றை அறு வை மூலம் நீக்கலாமா?

சில பெண்களுக்கு இப்படிக் காணப்படுவது சகஜமே. பிரச வத் திற்குப் பிறகு பிறப்புறுப்பு விரிவடைவதால் இவை தானா க மறைந்து விடும். என்றாலும் மருத்துவரிடம் ஒருமுறை நேரில் காட்டி ஆலோசனை பெற் றுக் கொள்வது நலம்.

ஆணுறை உபயோகிக்கும் போது கூட கர்ப்பம் தரிக்கும் வாய் ப்புகள் உண்டு என்பது நிஜமா?

சரியாகவும், தரமானதாகவும் உபயோகி க்கப்படும் பட்சத்தில் 97 சதவிகிதம் இது பாதுகாப்பானதே. 14 சதவிகிதப் பெண்க ள் ஆணுறை உபயோகித்த போதும் கர்ப்ப மடைகிறார்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: