Tuesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தன் உறுப்பைக் கொடுத்து மருகளின் உயிரைக் காப்பாற்றிய மாமியார்!

 

மாமியார் – மருமகளுக்கு இடையே சண்டை தான் ஏற்படும் என்ற பொதுவான கருத்து நிலவுகி றது. ஆனால் மும்பையில் மாமி யார் ஒருவர் தன் இளம் வயது மரு மகளுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்து பிர மிக்க வைத்துள்ளார். மும்பை யை சேர்ந்த வைஷாலி ஷாவுக்கு 35, காய்ச்சல் காரணமாக இரு சிறுநீரகங்களும் பழுதுபட்டது. உடனடியாக, மாற்று சிறு நீரகம் பொருத்த வேண்டியநிலை ஏற்பட்டது. அவரின்கணவர் மணிஷ் மனம் உடைந்து போனார். அவரின் சிறு நீரகம் பொருந்த வில்லை. இதனால் அவர் மிகுந்த வருத்தம் அடை ந்திருந்த நேரத்தில் வைஷாலியின் மாமியார் சுரேகா ஷா 59, தன் சிறு நீரகத்தை மருமகளுக்கு தானம் கொடுக்க முன் வந்தார். இதைகேட்டு, வை ஷாலியும் அவரது குடும்பத்தாரும் திக்கி த்து போயினர்.

கணவன், மனைவி, சகோதரர், சகோதரி என்ற உறவுநிலையி ல் தான் சிறுநீரக தானம் கொடு க்க முன்வருவர். ஆனால், மரு மகளுக்கு, மாமியார் சிறுநீரக த்தை தானமாக கொடுக்க வந்த து,டாக்டர்களையே பிரமிப்பில் ஆழ்த்தியது .சிறு நீரகவியல் மருத்துவர்கள் சுரேகாஷாவை பரிசோதித்து பார்த்தனர். அவர து சிறுநீரகம் வைஷாலிக்கு பொருத்தமாக இருக்கும் என தெரியவந்தது. இதையடுத்து கடந்த மாத இறுதியில் மும்பையில் அறுவை சிகிச்சை நடந்த து. இதில் வைஷாலிக்கு வெற்றிகரமாக மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது. மருமகளும் மாமியாரும் சிகிச்சை முடிந் து சிலநாள் ஓய்வுக்குப்பின் இல்லம் திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து சுரேகா ஷா கூறு கையில்…என் சிறுநீரகம் மரும களுக்கு பொருந்தியதற்காக ஆண்டவனுக்கு நன்றி தெரிவி த்து கொள்கிறேன். மருமகளுக் கு புது வாழ்க்கை கிடைத்துள்ள து. உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு, மக்கள் தயங்க கூ டாது. உயிர்களை காப்பாற்ற முன்வர வேண்டும்,” என்றார். புத்துயிர் பெற்றுள்ள வைஷா லி பேசுவதற்கு வார்த்தை வ ராமல் கண்ணீர் மல்க எனக்கு உயிர் பிச்சை அளித்துள்ள என் மாமியாரை தெய்வமாக பார்க்கிறேன். அவருக்கும் டா க்டர்களுக்கும் நன்றி தெரிவிக் கிறேன் என்றார். மாமியார் என்றாலே வில்லியாக சித்தரி க்கப்படும் நிலையில், சுரேகா அந்த எண்ணத்தை மாற்றி தன் னை போன்ற மாமியார்களுக்குமுன் உதாரணத்தை ஏற்படுத் தியுள்ளார்….!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: