Friday, January 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களே! உங்கள் பின்னழகு, மேலும் அழகாக நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்

உடலின் பின்பகுதி அதிக சதை பிடித்து அசிங்கமாக இருக்கிற தே என்று இன்றைக்கு பெரும்பா லான பெண்கள் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இடுப்பும் பின்புறமும் சரியான அமைப்பு இல்லாததால் அதற்கே ற்ப உடைகளை தேர்ந்தெடுப்பதிலு ம் சிக்கல்கள் எழுகின்றன. எனவே பின்புறத்தை அழகாக்க அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோ சனைகளை பின்பற்றுங் கள்.

ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்ப வர்கள் அனைவருமே எதிர் கொள்ளும் ஒரு சிக்கல் பின் புறம் பெருத்து விடுவதுதான். இதற்கு காரணம் ஒரே நேர த்தில் அதிக நேரம் உட்காரும் போது ப்ரிடிபோசைட் செல்கள் கொழுப்பு செல்களாக மாற்றம் பெறுகிறது என்று ஆராய்ச்சி யில் தெரிய வந்துள்ளது. அலுவ லகத்தில் வேலை பார்ப்பவர்கள் அதிக நேரம் கம்ப்யூட்டர், இன்டர் நெட் முன்பு செலவிடு வோருக்கு ஏற்படும் உடல்நல கோளாறுகள் தொடர்பாக இஸ்ரேல் ஆராய்ச் சியாளர் ஆய்வு மேற்கொண்ட தில் இது கண்டறியப்பட்டுள்ளது.

அசையாமல் அமர்ந்திருப்பது

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதனால் ஏற்படும் உட ல்களில் ஏற்படும் அழுத்தம் அந்த இடங்களில் உள்ள செல்கள் விரை வாக அதிகரிக்கும். இதனால் அப்பகுதிகளில் கொழுப்பு அதிகரிக் கும்.

இது‘மெக்கானிகல் ஸ்ட்ரெச்சிங் லோ ட்ஸ்’ எனப்படுகிறது. ஒரே இடத்தில் அசைவின்றி வெகு நேரம் உட்கார்ந்தி ருந்தாலோ, படுத்திருந்தாலோ இந்த பாதிப்பு அதிகம் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

உடலின் மற்ற பகுதிகளைவிட ‘சீட்’ பகுதியில் கொழுப்பு செல் கள் சீக்கிரம் அதிகரிக்கும். இதனால் அந் த பகுதியில் மட்டும் அதிக சதை போடும் இதை தவிர்க்க போதிய உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு அவசியம். அது மட்டு மின்றி, அதிக நேரம் ஒரே இடத்தில் உட் கார்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டு ம். அடிக்கடி எழுந்து நடக்கவேண்டும் என்றும் நிபுணர்கள் கூறு கின்றனர்.

அழகாக உடற்பயிற்சி

முதலில் நேராக நின்றுகொண்டு தோள்களின் மீது நீளமாக ஒரு கட்டையை வைத்துக்கொள்ளவும். இரண்டு கைகளாலும் அந்த கட்டை யை பிடித்துக்கொண்டு தலையை முன் னோக்கி நீட்டியவாறு முதுகுவரை வளைக்கவும். இதனால் பின்புறம் அழ காகும்.

உயரமான தூண் உள்ள பகுதியில் நின்று கொள்ளவும். அதனை பிடித்துக் கொண்டு வலதுகாலை பின்னோக்கி மடக்கவும், பத்துமுறை செய்யவும். அதேபோல் இடதுகாலையும் பின்னோக் கி மடக்கி நீட்டவும். இவ்வாறு செய்தா ல் கால் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும். பின்புறம் டைட்டாக மாறி அழகாகும்.

ஆசனத்தை விரித்து முழங்கை யை ஊன்றி குப்புறப்படுத்துக்கொ ள்ளவும். பின்னர் ஒருகாலை பின்னோக்கி மடக்கவும். இதே போல் இருகால்களையும் பத்து முறை மடக்கி நீட்டவும். இதே போன்ற பயிற்சிகளை தொடர்ந்து காலையிலும், மாலையிலும் செய்துவர அழகான இடுப்பும், பின்பகுதியும் அழகாக மாறும் என்றும் நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அப்புறமெ ன்ன கண்ணைக்கவரும் ஆடைகளை அணிந்து அழகாக தோ ற்றமளிக்கலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply