பாண்டவர்களை சூதில் வஞ்சகமாக கௌரவர்களால் வஞ்ச கமாக தோற்கடிக்கப்பட்டபோது, பாஞ்சாலியை துரியோதனன் தன் தொடை மீது வந்து உட்கார் என்று சொல்லியும். துச்சாதனன் பாஞ்சாலி அணிந்திருந்த ஒற்றை சேலை அவிழ்த்த போது கண்ணன் திருவரு ளால் பாஞ்சாலியின் மானம் காக்கப் பட்டவுடன், பஞ்ச பாண்டவ கண்ண னுக்கு நன்றியினை தன் மனதுக்குள்ளேயே சொல்லியவாறு ம், அதே நேரத்தில் தங்களை வஞ்சகமாக சூதில் தோற்கடித்த கௌரவர்கள் மீது கடுமையான சினமும் கொண்டபோது, பீமனும் அர்ச்சுனனும் சபதம் செய்கின்றனர்.
பீமன் செய்த சபதம்
எங்கள் மரபுக்குக் கடவுளாகிய கண்ணன் பாதத்தின் மீது ஆணை, தேவர்கள்மீது ஆணை, பராசக்தி மீது ஆணை, பிரம் மன் மீது ஆணை, காமனைச் சுட்ட சிவ பெருமான் பொன்னடி மீது ஆணை! ஆண்மையற்றத் துரி யோதனனை நோக்கி, திரௌப தியைத் தன்தொடைமீது வந்து அமர்’ என்று சொன்ன நாய் மகனாம் உன்னை யுத்த களத்தில் உன் தொடையைப் பிளந்து கொல்வேன் உன் தம்பி துச்சாதனனை, அவனது தோள்களைப் பிய்த்து அவனது இரத்தத்தை குடிப்பேன். இது நடக்கும். இது
என் வார்த்தையன்று; தெய்வத்தின் வார்த்தை. பராசக்தி இதைச் சாதித்துக் காட்டுவாள்.
அர்ச்சுனன் செய்த சபதம்
பாதகக்கர்ணனைப் கடும்போர் புரிந்து மாய்ப்பேன் இது கண்ணன் பாதத்தின் மீது ஆணை, எம் தேவி பாஞ்சாலியின் கண் மீது ஆணை, எனது வில்லின் மீது ஆணை! உலகே, போர்த் தொழில் வித்தைகளை விரைவிலேயே நீ காண் பாய்!’
என இருவரும் சபதம் ஏற்றனர்.
– விதை2விருட்சம்
Reblogged this on Gr8fullsoul.