Monday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனிதர்களை தாக்கும் மன (உளைச்சல்) நோய்கள்

மன உளைச்சல் நோய்கள் மனிதனின் மனதிற்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அக்கால மருத்துவர்கள் முதல் இக்கால மருத்துவர் கள் வரை கூறுகிறார்கள்.

ஒருவரது மனதில், கவலை தோன்றும் போது, அவரது உடல் தளர்ந்து போவதும், கோவத்தில் இருக்கும்போது இதயம் படபட ப்பதும் மன உணர்ச்சியின் அடிப்படையில் உடலில் தோன்றும் விளைவுகளாகும். அதிக அச்சம் ஏற்படுவதால் இதயத்துடிப்பு அதிகரித்தல், கால்கள் இழுத்துக்கொள்ளு தல் ஒரு சிலருக்கு இதயமே நின்று போய் விடும்.

மனதில் தோன்றும் உணர்ச்சிகளுக்கும், உண்ணும் உணவிற் கும் நேரடி தொடர்பு இருக்கிறது. அதிக காரம், இனிப்பு உணவு உண்ப வர்கள் வீரிய குணம் கொண்டவர்க ளாக இருக்கிறார்கள். அதிக கசப்பு, புளிப்பு உண்பவர்கள் சோம்பல் கொண்ட மனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எல்லா சுவைக ளையும் மிதமாக உண்பவர்கள் மன அமைதியுடன் வாழ்கி றார்கள்.

ஒருவர் தன் மனதில் தோன்றும் உணர்ச்சிகளுக்கு ஏற்ப உணவு முறைகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேணடும். மேலும் உடற் பயிற்சி, பிராணாயாமம், தியானம் போன்ற பயிற்சிகளைச் செய்வதால் தீய உணர்ச்சிகள் அடங்கி மன அமைதியும்,உடல் ஆரோக்கியமும் பெறலாம்.

அதிக மன உளைச்சல், மன அழுத்தம் உள்ளவர்கள் தங்கள் உணர்ச்சிகளை அடக்கி கொள் வார்கள் எனில், அவர்களது வயிற்றில் அதிக அமிலம் சுரக் கிறது. அமிலத்தின் புளிப்புத் தன்மையும் வீரியமும் குடலில் புண்களை ஏற்படுத்துகிறது. குடல் புண்ணால் வயிற்றில எரி ச்சல், பசி பொறுக்க இயலா மை போன்ற உபாதைகள் ஏற்படு கின்றன.

அதிக அமிலம் சுரப்பதினால் மலச்சிக்கலும் அதிகரிக்கும். தன்னை பற்றிய பிறருடைய கருத்துக் களை தாங்க முடியாமல் மன அழுத்த த்திற்கு உண்டாகி மலச்சிக்கலால் அவ திப்படுகிறார்கள். ஒரு சிலருக்கு புதிய இடச்சூழலும் மலச் சிக்கலை உண்டாக் கும் இதற்கு காரணம் பயம் அல்லது வெட்க உணர்ச்சியுமே காரணமாகும்.

அதிக கோபம், அதிக பயத்தால் இதயம் அதிவேகமாக துடிக் கத் தொடங்குகிறது. டென்ஷன், கோபம் மற்றும் பயம் போன்ற உணர்ச்சிகள் இதயத்தையே முதலில் பாதிக்கின்றன.

சிறிய விஷயங்களுக்காக கவலைப் படுபவர்கள் மற்றும் விரைவிலேயே குற்ற உணர்ச்சி அடைபவர்கள் போன் றோருக்கு இதயத்தில் பாதிப்பு உண்டா கிறது இதனால் நரம்புத் தளர்ச்சி, இரத்த அழுத்த நோய் போ ன்ற நோய்கள் உண்டாகலாம்.

நன்றி – தமிழ்கடல்

One Comment

  • Dheena Dhayalan (Raju), Hyderabad

    People should try to understand these facts and reduce their physical / mental tensions by following the suggested remedies.

Leave a Reply