Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கர்ப்பம் தரிக்க‌, தினந்தோறும் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது மிக அவசியம்!

புதிதாக திருமணமானவர் கள் சத்தான உணவுகளை உண்ண வேண்டும். ஏனெனி ல் நிலம் வளமாக இருந்தா ல்தான் விளைச்சல் நன்றாக இருக்கும். எனவே புதுமண தம்பதியர் அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். நாளொன்றுக்கு 8 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

பெண்கள் ஆரஞ்சு, காரட் உள்ளி ட்டவைகளை அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டும் ஏனெனில் இது செக்ஸ் ஹார் மோனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். ஆண்கள் மீன் உணவுகள், வெள்ளைப்பூண்டு ஆகிய வற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். இது விந்து வளர்ச்சிக்கு உதவும். 
 
புதுமணத் தம்பதியர் தினமும் தாம்பத்ய உறவு கொள்ள வேண் டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதன் மூலம் ஆணின் விந்தணு உற்சாகமடையும். இது டி.என்.ஏ வை சிதை வடையாமல் பாது காக்கிறது. முறையற்ற மாத விலக்கு கர்ப்பம் தரித்தலை தாம தப்படுத்தும் எனவே இக்குறைபாடு உள்ளவர்கள் மருத்துவர் களின் ஆலோசனையை பெற வேண்டும். 
 
கட்டுப்பான எடையை கடை பிடிக்க வேண்டும். 28 முதல் 32 நாட்களுக்குள் சுழற்சியாக பெண்களுக்கு மாதவிடாய் வருவது ஒழுங்கான மாத விடாய் பருவமாகும். மாதவி டாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து 14-வது நாள் பெண்ணின் முட்டை வெளியே றும். 
 
இந்த முட்டை வெளியேறி 24 மணி நேரத்திற்குள் ஆணின் விந்தணுவை சந் தித்தால் கரு உருவாகும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே மாதவிடாய் ஏற் பட்டு பதினோராவது நாளி ல் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக் கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடை பெறுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும். மதுபழக்கத்தை தவிர்க்க வேண்டும். 
 
புகைப்பிடித்தலை அறவே ஒதுக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். பெண்கள் காபி குடிப்ப தை தவிர்ப்பது கர்ப்பம் தரித்தலை 50 சத விகித வாய்ப்பை அதிகரிக்கிறது. தினமு ம் 40 நிமிட உடற்பயிற்சி அவசியம். இது தம்பதியரின் உடலில் உள்ள தேவைய ற்ற கொழுப்பை குறைத்து மன அழுத்த தை நீக்குகிறது. 
 
உடலில் நோய் தாக்காமல் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் புள்ளி விவ ரக் கணக்கின்படி ஒரு பெண் தன்னுடைய இருபது வயதிலிரு ந்து முப்பது வயதிற்குள் குழந்தை களைப் பெற்றுக் கொள்வ தே சிறந் த காலகட்டமாகக்கருதப்படுகிறது . 
 
20க்கு குறைந்தோ அல்லது முப்பதுக்கு மேற்பட்டோ குழந்தை களைப் பெற்றுக் கொள்வது தாயி ன் உடல் ரீதியாகவும், குழந்தையின் வளர்ச்சி ரீதியாகவும், பல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். முப்பது முப்பத்தைந்து வயதுக்கு மேல் கர்ப்பம் தரிக்கும் பெண்கள், இளம் வயது கர்ப் பிணிகளை விட பல இன்னல்க ளுக்கு ஆளாவதை நாம் கேள்வி ப்பட் டிருக்கிறோம். 
 
பெண்களுக்கு வயதாவது என்ப து நோயல்ல என்றாலும் வயது ஆக ஆக இடுப்பு எலும்பு நெகிழ்ந்து குழந்தை வெளி வருவத ற்கு சுலபமாக வழி ஏற்படுத்தி கொடுக்க இயலாமல் போய் விடும். 
 
முதிர்ந்த பெண்களுக்குப் பிறக்கு ம் குழந்தைகளுக்கு உடல் ரீதியா ன பாதிப்புகளும், மூளை பாதிப்பு களும் இருக்க வாய்ப் பிருப்பதாக மருத்துவக் குறிப்புகள் சொல்கின் றன டவுன் சிண்ட்ரோம் எனப்படு ம் மூளை வளர்ச்சி குன்றிய அல்லது உடல் குறைகளுடன் கூடிய குழந்தைகள் பிறப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதா கத் தெரிகிறது. 
 
ஆனால் இதற்கான பரிசோத னைகள் முன் கர்ப்ப காலத்தி லேயே செய்யப்பட்டு கண்டறி ந்து சொல்வதற்கான மருத்துவ முன்னேற்றங்களும் இப்போது அதிகரித்துள்ளன. கர்ப்பம் தரித் த பின்னர் இயற்கையான எந்த உணவுகளையும் விருப்பப்படி சாப்பிடலாம். 
 
செயற்கையான இரசாயனங் கள் சேர்க்கப்பட்ட உணவுகளை த்  தவிர்த்தல் நல்லது. பழுத்த அன்னாசி சாப்பிடுவதால் கர்ப்பத் திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. போலிக் அசிட் எனப் படும் மாத்திரையை நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் விழு ங்குவது நல்லது இறுதியாக மாதவிடாய் ஏற்பட்ட நாளை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 
 
வேறு எந்த மாத்திரை எடுக்கும் முன்னும் வைத்திய ஆலோ சனை பெற வேண்டும். எந்தவொரு மருத் துவப் பரிசோதனை க்கு முன்னும் ஆலோசனை பெற வேண்டும். நீரழிவு, வலிப்பு ,ஆஸ்த்மா, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் இருப்பின் கர்ப்பம் தரிப்பதற்குமு ன் அவை சிறந்த கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அப்பொ ழுதுதான் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க முடியும்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: