Sunday, May 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“காமக்கொடூரன்கள் இதை பார்த்தாவது திருந்தட்டும்!” – நடிகை ஆவேசம்!

ஒரு பெண் தாயாவது எவ்வளவு வலி மிகுந்தது என்றும், அப்படிப்பட்ட காட்சிக ளை பார்த்தாவது நாட்டில் காமக் கொடூர ன்கள் திருந்தட்டும் என்றும் ஆவேசப் பட்டிருக்கிறார் பிரபல மலையாள நடிகை ஸ்வேதாமேனன்.

எத்தனையோ ஹிட் படங்களிலும் நடித்தி ருந்தாலும் 2011- ஆம் ரிலீசான ‘ரதி நிர் வேதம்’ என்ற 11 மணிக்காட்சி படத்தில் தான் ரசிகர்களிடையே பிரபலமானார் ஸ்வேதா மேனன்.

இன்றும் கூட அந்தப் படத்தை தமிழகத்திலு ள்ள பிட்டு பட தியேட்டர்களில் தினசரி 4 காட்சிகள் ஓட்டிக் கொண்டிருக்கி றார்கள். அப்படிப்பட்ட புகழுக்குச் சொந்தக்காரரான ஸ்வேதா மேனன் மலையாளத்தில் நடித்து சர்ச்சைக்குள்ளான படம் தான் ‘களிமண்’.

அவருடன் பிஜூமேனன், சுஹாசினி, லஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப்படத்திற்காக ஒரு பிரசவ காட்சியை படமாக்க நினைத்தார் டைரக்டர் பிளெஸ்ஸி.

இதற்காக திருமணத்துக்குப் பிறகு நிஜமா க தாயான நடிகை ஸ்வேதா மேனன் தனது பிரசவக் காட்சியை படம் பிடிக்க டைரக்டர் பெர்மிஷன் கொடுத்தார். அதன் படி அவரது பிரசவக் காட்சிகள் படமாக்கப் பட்டு இந்தப் படத்தில் சேர்க்கப்பட்டது.

விஷயத்தைக் கேள்விப்பட்ட கேரளவாசி கள் ஸ்வேதா மேனனின் இந்தச் செயலு க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப் புறம் என்ன? இந்த சர்ச்சைக்காகவே படமும் ரிலீசாகி அங்கு ஹிட்டானது.

அப்படிப்பட்ட அந்தப் படத்தைத் தான் இப்போது ‘உயிரின் ஓசை’ என்ற பெயரில் பிரதாப் புரொட க்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தமிழில் டப்பிங் செய்கிறார்கள்.

ஒரு பெண் தாயாவது எவ் வளவு வேதனையானது என்பதும், பெண்க ளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் காமக் கொடூர ன்கள் இதை பார்த்தாவது திருந்த வேண்டும் என்றும் படத்து க்கு ஆதரவாக ஆவேசக்குரல் கொடுத்திருக்கிறார் ஸ்வேதா மேனன்.

ஆமாம் மேடம், நீங்களும் படத்துக்கு படம் இப்படியே போஸ் குடுத்துக்கிட்டிருங்க, சீக்கிரமே ரசிகர்கள் திருந்திடுவாங்க….

– soundcameraaction 

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: