Saturday, February 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தம்பதியருக்குள் அன்னியோன்னியம் அவசியம்! ஆனால் நிஜத்தில் நடப்பது என்ன?

திருமணமான ஆணும் சரி, பெண்ணும் சரி. தங்கள் இணை யைக் அன்பாலும் அரவணைப்பாலும் அன்னியோன்னியத்தாலும் நட்பாலும் காதலாலும் காமத்தாலும் அணைத்துக் கொள்ள வேண்டும். இது எவர் மனதிலும் சலனத்தை ஏற்படுத் தாது. பரஸ்பர நம்பி க்கை, ஒருவர் மீது ஒருவர் வைக்கும் அளவு கடந்த நிபந்தனையற்ற அன்பு, புரிதல், அனுசரித்தல், நட்பு பாராட்டுதல் அன்னியோன்னிய‌ம் போன்றவை தம்பதி யருக்குள் அவசியம் தேவை. ஆனால் நிஜத்தில் நடப்பது என்ன?

ஒரு குழந்தை பிறந்த பின்பு பிடியிடையாள் ‘பிடி’யிடையா ளாக உடல்பெருத்து, தன் உடலையோ அழகையோ பேணாது அழுக்கு ஆடை யுடன் வீட்டு வேலைகளே கதியென்று இருக்கிறாள். கணவரைச் சம்பாதிக்கு ம் இயந்திரமாகக் கருதி அது வேண்டு ம், இது வேண்டும் என்ற நச்சரிப்பிலும் பாதி ஆயுளைக் கழிக்கிறார். சதாசர்வ மும் குழந்தைகளையே பேணிக் கணவரைக் கண்டுகொள் ளாமல் விடும்போது மனத் தடுமாற்றங்கள் கணவருக்கு ஏற்ப டுகிறது. இதேபோல் தன் உடலைப் பேணாத, ஆடைகளில் கவனம் செலுத்தாத எப்போதும் சிடுசிடு வென இருக்கும் கணவர், அடிப்ப டை அன்பும் மனிதாபி மானமுமி ன்றி வீட்டு வேலைகளுக்கும் தன் வயதான பெற்றோரைக் கவனிக்க வும் மட்டும் பயன்படுத்திக் கொ ண்டு உடல் அளவிலோ மனதளவிலோ அரவணைப்பு செலுத் தாத வேளைகளிலே தடம் மாறும் அப்பாவிப் பெண்களும் இருக்கிறார்கள். தவறு செய்வ தாகச் சித்திரிக்கும் பெண்களி ல் உடல் சுகத்திற்காக, சிலர் மன சுகத்திற்காக, சிலர் மன அமைதி க்காக என்று செல்கிறார்கள். அந் தக் காதல், இணையிடம் குளிர க்குளிரக் கிடைத்திருந்தால்…அள்ளிக் கொடுக்க முடியாவிட்டாலும் கிள்ளியாவது கொடுத் திருந்தால் பாதை மாறி இருப்பாரா? என்பது சந்தேகம்தான். சரி, தவறு என்ற வாதத்திற்கு வர வில்லை. தவறுகளுக்கான காரணங்கள் ஆராயப் பட்டுக் களையப்படுவது தம்பதியர் நிலை தடுமாறாமலிருக்க உதவும்.

ஒரு ஆணிற்குப் பெண்ணிடமிருந் து உடல் சுகத்துடன் உள்ள சுகமும் தேவைப்படுவது போல ஒரு பெண்ணிற்குக் கோடி கோடியா ய்ப் பணமோ நகைகளோ சொத்துக்களோ மகிழ்ச்சியைக் கொடுத்திடாது. கணவரின் அன்பான பேச்சு, அக்கறை, காதல் , கனிவான அணுகுமுறையே அதிக சந்தோஷத் தைக் கொடுக்கும்.வெளிநாடுகளில் முன் பின் அறிமுகமில்லாதவர்களிட ம் கூட பார்த்தவுடன் முகமலர்வுடன் ‘எப்படி இருக்கிறாய்?’ என்ற கேள்வி முன்வைக்கப்படும், எத்தனை கணவர் மனைவியைக் கேட்டிருக்கிறார்? எத் தனை மனைவி கணவரி டம் கேட்டிருக்கிறார்? அது கேட்கக் கூடாத கேள்வி இல்லை தானே.. நம் குடும்பத்திற்குத் தானே கணவர் சம்பாதிக்கிறார், தன் இல்லத்திற்காகத்தானே ஷரீர ரீதியில் மனைவி பாடு படுகிறார். ‘சாப்பிட்டாயா? வர வர உன்னைக் கவனிச்சு க்க மாட்டேங்கிறியே?’ இந்த அக்கறையான கேள்வி மனைவியிடம் கேட்கப்படுகி றதா? மனைவி என்ன ஆடை அணிகிறார்? எந்த விதமான கூந்தல் அலங்காரம் செய்திருக்கிறார்? எந்த நிறம் பிடிக்கும்? எது பிடிக்காது? எந்த உணவு மிகவும் பிடிக்கு ம்? பிடித்த பத்து என்னென்ன? எத்தனை பேருக்குத் தெரியும். அதே போல் கண வரின் திறமைகள் என்ன? எந்த நேரத்தில் என்ன மனநிலை? பிடித்தது என்ன? பிடிக்காதது என்ன? உணர்வுகளுக் கு மரியாதை கொடுக்கப்படுகிறதா?

கணவர்களே உடற்பயிற்சி செய்து நன்றாக உண்டு உடலைப் பேணி, முடி திருத்தி, கிழிந்த உடையுடன், நமக்குத் தான் கல்யாணம் ஆயாச் சே, யாரு பார்க்கப் போறாங்க? என்ற எண் ணமின்றி ஆடைகளில் அக்கறை செலுத்தி, கூலிங் கிளாஸ் போட்டு ஹீரோவாக மாறுங்கள். முகத்திலும் அகத்திலும் வித்தியாசம் காட்டுங்க ள். துணையைப் புரிந்து ரொமா ன்டிக் காக நடந்து பாருங்கள், மனைவியின் அழகை, செய்யு ம் சிறிய நல்ல செயல்களையு ம் அவ்வப்போது பாராட்டுங் கள், குற்றங்களையும் விரலை நீட்டிச் சுட்டிக் காட்டாமல் அக் கறையுடன் பொறுமையாய் அன்புடன் நண்பனாய் இருந்து விளக்கிப் பாருங்கள். மல்லிகைப்பூவும் அல்வாவும் மனைவி க்கு இனிப்பதில்லை, அதை வாங்கித் தர வேண்டும் என்று தோன்றும் கணவரின் அன்பே அவர் இதயத்தை மணக்கவும் ருசிக்கவும் செய்திருக்கிறது. மனைவிக்குப் பிடித்த நாயகனாய் மாறுங்களேன். தவறில் லையே. மனைவியும் கணவரிடத் தில் அன்புடன் பழகுவதோடு மட்டுமில்லா மல் குறிப்பறிந்து பழகலாமே. மனைவி யும் உடல் அழகையும் உள்ள அழகை யும் மேம்படுத்திகணவருடன் அன்னி யோன்னியமாக இருக்க வேண்டும்.

இரவில் மெல்லிசைகள் செவிகளுக்கு உணவாக, இனிமை யான பார்வைகள் காதல் பாஷைகளைப் பரிமாறிக் களிக்கட்டுமே. காதலித்தபோ து செய்த குறும்புகள், பெண்பார்க்கும் படலத்தின் சுவையான நிகழ்வுகளை மலரும் நினைவுகளாகக் கொஞ்சம் அசை போடுங்களேன். யாருமில்லாத கடற்கரையில் கைகள் கோர்த்து அலை கள் கால்களை நனைக்க,காதல் இதயங் களை நனைக்க அங்கே ஒரு காதல் புரி உருவாகட்டுமே. குறுகுறு பார்வைகள், செல்லக் குறும்புகள், மின்சாரத் தீண்டல் கள், எதிர்பாராத முத்தங்கள், பின்னாலி ருந்து கட்டியணைத்தல், தோளோடு சாய்ந்து பள்ளி, கல்லூரி கால பசுமையா ன நினைவுகளை அசை போடுதல், நிமி டங்களிலே தீர்ந்து விடக் கூடிய ஊடல் கள், செல்லக்கூடல்கள், அலுவலகத்தில் பிரச்சினையென்றா ல் மடியோடு கிடத்தி இதுவும் கடந்துபோகும் என்று கண்ணீ ரைத் துடைத்தல், விழிகளை நனைக்கும் அன்பு வழிகள். உங் களுக்குள்ள விரிசல்களை இந்த உரசல்கள் சரிசெய்யட்டும்.

உடல் நிலை சரியில்லாத போது அன்பாய்க் கவனித்தல், அக் கறை காட்டுதல் போன்றவற்றைச் சொல் லாமலே செய்தால் கந்துவட்டியாய் அன்பு பறந்து வரும். இடி இடித்து வீடு அதிர்ந்தால் தவிர இடித்துப் பேசுதலும் கத்துத லும் வேண்டாமே. இரவுகளில் பத்து நிமிட உரசல்களில் இயந்திரத்தனமாய் செலுத்து ம் அன்பை விடக் காதலாய் ஈருடல் ஓரு யிராய் வாழ்வது எத்தனை கோடிகள் கொட் டிக்கொடுத்தாலும் வராது. இயந்திரமயமா ன உலகிலே பணம் சம்பாதிப்பதும் சொத்து க்கள் சேர்ப்பதும் குழந் தைகளைப் படிக்க வைப் பதுமே வாழ்க்கையில்லை. அவை வாழ் வின் இன்றியமையாதவை என்றால் கண வர் மனைவி உறவு அதைவிட இன்றிய மையாதது. வயதானாலும் மனதிற்கு என்றும் இளமைதான். ஒவ்வொரு நாளும் இணையை உயிருக்குயிராய்க் காதலியுங் கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

%d bloggers like this: