இப்பகுதியில் நேற்று (11-11-2013 அன்று), சவால் எண்.12-ன் படி கொடுக்கப்பட்ட வாக்கியங்ளை, படித்தவர்கள் சுமார் 110 பேர் என்றாலும் கொடுக்கப்பட்ட அந்த வாக்கியங்களில் எது சரி? எது தவறு? என்பதை, செல்வி வித்யா, வழக்கறிஞர் (கோயம்புத்தூர்), திரு.கே. மகேஸ்வரசன், திரு. மணிவண் ணன் (வேதாரண்யம்), திரு. தீனதயாளன் (ராஜு), திரு. ஆரிஃப் திரு. ரவி பிரகாஷ் (ஆர்.பி.) மற்றும் திரு.தாஹிர் (மஸ்கட்) என மொத்தம் ஏழு பேர், சரியாக சுட்டிக்காட்டி சரியான பொருளையும் தெரிவித்துள்ளார்கள். மேற்காணும் ஏழு பேரும், தங்களுக்கு இருக்கும் தமிழ் ஆர்வத்தை இங்கே பகிர்ந்து கொண்டார்கள். மேற்கூறிய ஏழு பேரையும், விதை2 விருட்சம் இணையம் சார்பாகவும், அதன் வாசகர்களாகிய உங்கள் சார்பாக பலத்த கரவொலியுடனும் குரலொலிகளோ டும் மனதார எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறே ன்.
இதோ இன்றைய வாக்கியங்கள்
1.1) எரிக்குச்சி எரித்து, ஏற்றிய எரிப்பந்தத்தை எறிந்தே பாவி அவன் குடிசைகள் பல எரித்தான்.
1.2) எறிக்குச்சி எறித்து, ஏற்றிய எறிப்பந்தத்தை எரிந்தே பாவி அவன் குடிசைகள் பல எறித்தான்.
1.3) எரிகுச்சி எரித்து, ஏற்றிய எரி பந்தத்தை எறிந்தே பாவி அவன் குடிசைகள் பல எரித்தான்.
*
2.1) மெந்நடையைக் காணும் அன்ணமும் நானும் அழகிய பெண்மகள் அவள், அவளது மெள்ளிடைக் காண்பவர் யாவரும் பாவலறாக மாறுவது தின்னம்
2.2) மென்நடையை காணும் அன்னமும் நாணும் அழகிய பெண்மகள் அவள், அவளது மெல்லிடைக் காண்பவர் யாவரும் பாவலராக மாறுவது திண்ணம்
2.3) மென்நடையைக் காணும் அன்னமும் நாணும் அழகிய பெண்மகள் அவள், அவளது மெல்லிடைக் காண்பவர் யாவரும் பாவலராக மாறுவது திண்ணம்.
*
3.1) சுகபோகம் பல துறந்து, வனவாசம் என வந்து உறைவிலும் மறைவிலும் வாழ்ந்தவர்கள் சார்பாக தூது சென்ற பரமனவன்.
3.2) சுகபோகம் பல துறந்து, வணவாசம் என வந்து உரைவிலும் மரைவிலும் வாழ்ந்தவர்கள் சார்பாக தூது சென்ற பரமணவன்.
3.3) சுகப்போகம் பலத் துறந்து, வனவாசம் என வந்து உறைவிலும் மறைவிலும் வாழ்ந்தவர்கள் சார்பாகத் தூதுச் சென்ற பரமனவன்.
1.3 2.3 3.3 are Correct answer T. Sivabala
Mr. Sivabala, 3.3 is wrong answer
1.3) தீக்குச்சியை எரித்து தீப்பற்ற வைத்த பந்தைத்தைக் தூக்கி எறிந்து பாவி அவன் பல குடிசைகளை தீக்கிறையாக்கினான்.
2.2) அந்த பெண்ணுடைய அழகிய மென்நடையைக்கண்டால் அன்னமும் வெட்கும். அவளது மெலிந்த இடையைக் காணும் யாவரும் கவிஞராக மாறுவது உறுதி.
3.1) ஆடம்பற வாழ்வைத் துறந்து, காட்டில் வாசம் செய்வது என வந்து, உறைவிலும் மறைவிலும் வாழ்ந்தவர்கள் சார்பாக தூது சென்ற பரமனவன்.
1-3,2-2,3,3-1