Friday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுறவுக்கு உங்களை உந்தும் வீரியமிக்க‍ உணவுகள்!

உடலுறவுக்கு உங்களை உந்தும் வீரியமிக்க‍ உணவுகள்!

ஆண்மை பெருக்கும் பாலியல் உணர்வை தூண்டும் மருந்துகள் மட்டுமன்றி,

ள்  சில வகை உணவுகளையும் எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். பாலியல் உணர் வை உண் டாக்கும் உணவு கள் யாவை?

என்பது பற்றிய சர்ச்சைகள் இன்றும் நிலவுகின்றன. பழைய காலத்தில், சோம்புக் செடி, துளசி, கேரட், பிஸ்தா பருப்புகள், டர்னிப், நதி நத்தைகள் போன்றவை காமத்தை தூண்டுவதா க கருதப்பட்டன.

பழங்கால கிரேக்கர்களின் காதல் தெய்வம் ‘ஆஃப்ராடிடி’ (Aphrodite). இந்த தேவதை சிட்டுக்குருவிகளை புனிதமாக கருதினாள். ஏனென்றால் அவற்றுக்கு அதிகமான காதல் உணர்வு இருக்கிறது என்ற கருத்தினால். அதனால் பல ‘காதல் மருந்துகளில்’ சிட்டுக்குருவி சேர்க்கப்பட்டது. நீங்கள் நம்மூர் சிட்டுக் குருவி லேகியத்தைப் பற்றி கேள்விப்பட்டி ருப்பீர்கள்.

கோதுமை, அரிசி, உளுத்தம் பருப்பு, இவை ஆயுர்வேதத்தின் படி, சுக்ல தாதுவி ன் தரத்தை உயர்த்தும். இவற்றால் தயாரிக் கப்படும் இனிப்பு கள் பாலுணர்வை ஊக்குவிக்கும்.

பாதாம்:-

பாதாம் போன்ற எல்லாவகை கொட்டைகளும், செக்ஸ் ஆரோக்கிய த்தை அதிகப்படு த்தும். கிரேக்க இதிகாசத்தின்படி பில்லீஸ் (Phyllis) என்ற அழகான இளவரசி, கல்யா ணத்திற்கு சித்தமாக தனது காதலன் ‘டெமோஃபோன்’ (Demophon) வரவுக்காக காத்திருந்தாள். அவன் வரா மல் போகவே, அவ ள் தன்னை மாய்த்துக் கொண்டாள். பரிதாபப்பட்ட தேவர்கள் அவளை பாதாம் மரமாக மாற்றினார்கள். பச்சாத்தாபத்தோ டு வந்த டெமோஃபோன் அந்த பாதாம் மரத்தை தழுவ, அது பூப்பூத்து கொட்டியது. அழியாத காதலுக்கு அடையாளமாக பாதாம் மரம் கருதப்படுகி றது. பாதாம் உள்ள விட்டமின் “இ” ஒரு செக்ஸ் விட்டமினாகும். இளமையை காக்கும். பாதாம் தவிர, பிஸ்தா, பாதாம், முந்திரி, வேர்க் கடலை பருப்புகளும் பாலுணர்வை மேம்படு த்தும்.

சாக்லேட்:-

ஆண்மை மற்றும் பெண்மை பெருக்கிகளின் இராஜா என்றே சாக்லேட்டை சொல்லலாம். வேட்கையை பெருக்கும் பாலுறவு கிளர்ச்சியூட் டும்.

வாசனை திரவியங்கள்:-

ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூ, இலவ ங்கப் பட்டை இவைகளும் ஆசையை அதிகரிக்கும் குறிப்பாக ஜாதிக்காய் “விந்து முந்துதலை” (Premature ejaculation) தடுக்கும். இந்த வாசனை திரவியங்களை பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். ஞாபக மிருக்கட்டும் – இலவங்கப்பட்டை தான் ஆசைய ஊக்குவிக்கும். அதன் இலைகள், எதிர்மாறாக ஆண்மை ஆசை யை குறைத்து விடும்.

காய்கறிகள்:

பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள், பூமியின் சக்தியை உறிஞ்சி, அதை நமக்களிக்கும். கேரட், முள்ளங்கி போன்ற வை ஆண்மையை பெருக்க வல்ல வை. தக்காளியும் சிறந்த பாலு ணர்வு ஊக்கி. ஃப்ரான்ஸில் இதை ‘காதல் ஆப்பிள்’ – (Love apple) என்பார்கள்.

வெங்காயம்

வெங்காயமும் தொன்றுதொற்று இந்தியாவில், எகிப்தில், அரேபியா வில் ஆண்மை ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறியாகும். அதுவும் வெள் ளை வெங்காயம் சிறந்தது. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண வேண்டும். “ஆனியன் சூப்” புத்துணர்ச்சி ஊட்டும். இவை தவிர குடமிள காய், இஞ்சி, செலரி, வெள்ளரி, தனியா இவைகளும் உதவும்.

பழங்கள்:-

பப்பாளி, வாழைப்பழம், மாம்பழம், கொய்யாபழம் இவைகளும் சிற ந்த இளமை காக்கும் பழங்கள். கொய்யாப்பழம் பெண்களின் ஜனனே ந்திரிய உறுப்புக்களின் தசைகளை வலுப்படுத்தும். வாழைப்பழத்தி ல் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும்.

அஸ்பராகஸ் (Asparagus):

இது நல்ல சுவையுள்ள தோட்டக் கீரை. 19ம் நூற்றாண்டில் ஃப்ரான்ஸ் தேசத்தில் ஒரு பழக்கம் இருந்தது. கல்யாண த்திற்கு முந்திய கடைசி உணவில், மணமகன் இந்த கீரையை சூடாக மூன்று பிரிவு உணவுக ளிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பால் சார்ந்த உணவுகள்:-

பால் அதுவும் எருமைப்பால், தயிர்(பகலில்) மோர், வெண் ணை, நெய் இவை இல்லாமல் இந்திய உணவுகள் இல்லை. இவையெல்லாம் உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்.

மாமிசங்கள், மீன்:-

மாமிச வகைகளில் நீர் வாழ் பிராணிகளின் மாமிசம் உண்பது நல்லது. கடல் மீன்களை விட நதி மீன்கள் பாலியல் உணர் வை தூண்டுபவை. கடல் முத்துசிப்பி, சிறந்த ஆண்மை பெரு க்கியாக கருதப்படுகிறது.

வெற்றிலை:-

உணவுக்கு பின் தாம்பூலம் தரிப்பது உடலுறவு ஆசையை தூண்டும். ஆனால் பாக்கு, புகையிலை, ஆல்கஹால் இவை எதிர்மாறான விளைவுகளை உண்டாக்கும்.

சில டிப்ஸ்

தினந்தோறும் இரவில் 1கப் பாலில், சிறுதுண்டுகளாக்கப்பட்ட 4 பேரிச்சம்பழம் போட்டு காய்ச்சவும். குங்குமப்பூ சேர்த்து பருகவும்.

பாதாம் பருப்பு, அக்ரோட் பருப்பு, பிஸ்தா, சாரைப்பருப்பு, பூனைக்காலி விதைப் பருப்பு (Mucuna Pruriens), ஆப்பிள் விதை, ஏலக்காய் கல்க ண்டு, அத்திப்பழம் – இவை ஒவ்வொன்றில் 100 கிராம் எடுத்துக் கொ ள்ளவும். எல்லாவற்றை பொடித்து, அனைத்தையும் பசு நெய், குங்கும ப்பூ சேர்த்து பிசையவும். ஒரு வாரம் வைத்திருந்து, பிறகு தினம் 10 கிரா ம் அளவில் காலை யில் சாப்பிட்டு வரவும். பலமும், வீ£யமும் பெருகும்.

சில பாலியல் தகவல்கள்

1. நீரிழிவு, இதய நோய் போன்ற வற்றால் ஆண்களை போல வே பெண்களும் பாதிக்கப்படலாம். பெண்ணுறுப்புகளுக்கு ரத்தஒட்டம் குறைவாக பாய்வதால் (இந்த நோய்களால்) செக்ஸ் ஆசை குறைய லாம்.

2. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு புற்றுநோய் வரும் சந்தர்ப்பங்கள் குறை வு. காரணம் தாய்ப்பால் கொடுக்கையில் ளிஜ்ஹ்tஷீநீவீஸீ என்ற ஹார்மோன் சுரக்கும். உடலுறவின் போது பெண்ணின் மார்பகங்கள் ஆணால், கையாளப்படும் போதும் இந்த ஹார்மோன் சுரக்கி றது.

3. பெண்ணால் ஆணை ஆண் மையற்றவனாக்க முடியும். ஆணுறுப்பு விறைக்க உடல் ரீதியாக மட்டுமல்ல, மனோ ரீதியாகவும் ஊக்குவி க்கவேண்டும். உடலுறவில் நாட்டமில்லாத பெண், கேலி செய்யும் பெண் போன்றவர்களால் மனப்பாதிப்பு ஏற்பட்டு ஆண் தன் ஆண்மையை இழக்கிறா ன்.

4. கணவன், மனைவியிடம் பல கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பாலியலில், உடலுறவில் ஒருவருக்கொருவர் திருப்திபடு த்த முடிந்து சந்தோஷமான உடலுறவு அடையும் தம்பதிகளுக்கிடையே எந்த வித மான கருத்து வேறுபாடு களா லும் சண்டை வராது.

5. பாலியல் உறவுகள் சிறப்படைய உடலை ஆரோக்கியமாக வைக்க வேண்டும். அதேபோல் நிறைவு தரும் உடலுறவு ஆரோக்கியத்தை அதிகரிக்கும். தவறாமல் நடப்பது, உடற்பயிற்சி செய்வது இவை அவசியம்.

6. காதல் செய்ய படுக்கை அறை ஏற் றதாகவும், அது எப்படி அமைய வே ண்டும் என்று இந்த நூலில் சொன் னோம். மாறுதலுக்கு வீட்டில் சமைய ல் மேடை போன்ற இடங்களில் கூட காதல் செய்யலாம்.

7. சிலருக்கு விந்து வெளியாகும் போது விரைகளின் கீழே வலி ஏற்படலாம். இது Prostatis ஆக இருக்கலாம். சுக்கில சுரப்பி (Prostate) வீக்கம் காரணமாகலாம். டாக்டரை அணுக வும்.

8. காதல் செய்யும் போது பலரசாயன மாற்றங்கள் உடலுக்குள் நிகழும். ஏன், தொடுதல், அணைத்தல் போன்ற வற்றாலே டோபோமைன் அளவுகள் ஏறும். ஆண் ஹார்மோனும் சுரக் கும். இவை உங்களை சுறுசுறுப்பாக வைக்கும்.

9. உடலுறவினால் ரத்த சுழற்சி சீராகி, மூளைக்கு அதிக ரத்தம் பாய்கிறது.

10. சாக்லேட் பெண்ணின் காதல் ஆசையை தூண்டும் காரணம் ரசாயனம் தான். ‘செரோடோ னின்’ லெவல்கள் அதிகரிக்கும் சாக்லேட்டில் Phenylethylamine(Pea) என்ற கவர்ச்சியை தூண்டும் பொருள் இருக்கிறது.

11. கீழ்வயிற்று தசைகளை உறுதியாக்கசெய்யும் கெகெல் பயிற்சி (Kegal exercise) செய்தால் ஜனன உறுப்புக்களுக்கு அதிக ரத்தம் பாயும்.

12. ஒரு வாரத்தில் ஒன்று (அ)இரண்டு தடவை உடலுறவி னால் உடலின் நோய் தடுப்பு சக்தி அதிகரிக்கும். உடலின் தசை நார்கள் பலமடையும். மனச்சோர்வுக்கு அருமருந்து செக்ஸ! பெண்களுக்கு ம் இது பொருந்து ம்.

13. உடலுறவு ஆஸ்த்மாவை கட்டுப்படுத் தும்.

14. மகிழ்ச்சியான உடலுறவில் திளைக்கும் பெண்களுக்கு அழகு கூடு கிறது.

15. முடி வளர்வது, சந்திர பிம்பம் போல் வதனம், மேனி எழில் கூடும்.

16. ஏழு நாட்களில் 4 முறை உடலுறவு கொள்ளும் பெண்கள் 10 வருட வயது குறைந்தவர்களாக தெரிகிறார்கள். இவை சமீபத்திய விஞ்ஞா ன ஆய்வுகள் தெரிவிப்பவை.

17. உடலுறவினால் ரத்த சுழற்சி சீராகி, மூளைக்கு அதிக ரத்தம் பாய்கிறது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: