Saturday, January 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பலம்பொருந்திய “பீமன்” ஏன் கதறி அழுதான்?

அரக்குமாளிகையால் கட்ட‍ப்பட்ட‍ அரண்மனையில் பாண்டவ ர்களை, துரியோதனன் வஞ்சக நாடகமாடி அங்கே தங்க வைத்து, நள்ளிரவு நேரத்தில் அந்த அரக்கு மாளிகைக்கு தீ வைத்து எரித்தான். ஸ்ரீ கண்ண‍ பிரானின் அருளாலும் எச்சரிக்கை யாலும் அங்கிருந்த தப்பித்து, கானகம் வந்தனர். வந்த இடத்தில் நா வறட்சியால் ஏற்பட்ட‍ தாகத்தை தணிக்க‍ தண்ணீர் கொண்டு வர, பாண்வர்களின் மூத்த‍வரான தருமர், பீமனிடம் பறவைகளின் இன்னிசை கேட்கும் திசையில்தான் தண்ணீர் இருக்கிறது. ஆகையால் அங்கே நீ “போய என்று சொன்னான் பீமனும் தனது அண்ண‍னின் ஆணையை ஏற்று அந்த நீர்வாழ் பறவைகளின் ஒலி வந்த திசைநோக்கி புறப்பட்டான். புறப்பட்ட‍ சிறிது நேரத்திலேயே ஒரு ஏரியை அடைந்தான். அங்கே குளித்து முடித்து, தனது தாகத்தைத் தணித்துக் கொண்டான். தனது சகோதரர்கள் மீது கொண்ட பாசத்தால்

 

தனது மேலாடையை அந்நீரில் முக்கி, அதை தனது சகோதரர்கள் இருக்கும் இடத்திற்கு விரைவாக கொண்டு வந்தான்.

அங்கே தனது தாய் இருக்கும் இடத்திற்கு வேகமாக வந்து, அவளைக் கண்டு பெரும் துயரம டைந்து ஒரு பெரிய மலை பாம்பினைப் போலப் பெரு மூச்சு விட்டான். தனது தாய், மற்றும் இதர சகோதரர்களும் வெற்றுத் தரையில் படுத் துறங்குவதைக் கண்டு, துக்க‍ம் அவனது நெஞ்சை அடைத் த‍து.

இதனால் ஏற்பட்ட‍ மன உளைச் சலால் கதறி அழ ஆரம்பித்தா ன். “ஓ, சகோதரர்கள் வெறுந்தரை யில் தூங்குவதைக் காணு ம் பாவியானேனே, இதைவிட பெரிய வலிதர வேறு என்ன நிகழ வேண்டும்? அந்தோ, வார ணவதத்தின் விலையுர்ந்த மென்மையான படுக்கையில் தூங்க முடியாதவர்கள், இப்போ து வெறுந்தரையில் தூங்குகி றார்களே! ஓ, தாமரை இதழ்க ளைப் போன்ற மென்மை கொ ண்ட குந்தி, எதிரிப் படைக ளைத் துவம்சம் செய்யும் வாசுதே வனின் தங்கையான குந்தி, குந்திராஜனின் மகளான குந்தி, அதிர்ஷ்டக் குறிகள் நிறைந்த குந்தி, விசித்திரவீரியனின் மரு மகளும், சிறப்புமிக்க பாண்டு வின் மனைவியுமான குந்தி, எங்களின் (ஐந்து சகோதரர்கள்) தாயான குந்தி, விலையுயர்ந்த படுக்கையில் படுக்கத் தகுதி வாய்ந்த இந்த குந்தி, வெறும் தரையில் தூங்குவதைக் காணும் காட்சியை விட, வலி நிறைந்த காட்சி எது இருக்க முடியும்! ஓ, தர்மன், இந்திரன், மருதன் ஆகியோரின் பிள்ளை களை ஈன்றெடுத்து, அரண் மனையில் மட்டுமே உறங்கி யவள், களைப்படைந்து வெறும் தரையில் உறங்குகிறாளே! ஓ, மனிதர்களில் புலி போன்றவ ர்கள் (எனது சகோதரர்கள்) வெறும் தரையில் தூங்குவதைக் காணும் காட்சியை விட வலி நிறைந்த காட்சி எது இருக்க முடியும்? ஓ, மூவுலகத்தையும் ஆளும் தகுதி கொண்ட அறம்சார்ந்த யுதிஷ்டிரன், சாதாரண மனிதனைப் போலக் களைப்படைந்து தரையில் தூங்குகிறானே! மனிதர்களில் ஒப்பில்லாத, நீல மேகங்க ளைப் போல கருநிறம் கொ ண்ட அர்ஜூனன், வெறுந் தரையில் சாதாரண மனித னைப் போலத் தூங்குகிறா னே! ஓ, இதைவிட வலிநிறைந்தது எது இருக்க முடியும்? ஓ அஸ்வினி இரட்டையர்களைப் போன்ற அழகுடன் தேவர்க ளைப் போல இருக்கும் இந்த இரட்டையர்கள் சாதாரணமான வர்கள் போல வெறும் தரையில் தூங்குகிறார்களே!

பொறாமையும் தீய எண்ணமும் கொண்ட உறவினர்களும் இல்லாதவன், கிராமத்தில் இருக்கும் ஒற்றை மரம் போல இவ்வுலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்வான். அதே வகை மரங்கள் வேறு இல்லாமல், தனியாக இலைகளுடனும் கனிகளுடனும் கிரா மத்தில் நிற்கும் மரம் புனிதமடை ந்து, அனைவராலும் வழிபடப்பட்டு கொண்டாடப்பட்டு இருக்கும். நிறைய உறவினர்களுடையவர்களும், வீரத் துடனும், அறத்துடனும் இருப்பவர்க ளும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். பலத்துடனும், வளமையில் வளர்ந்து ம், எப்போதும் நண்பர்களையும் உற வினர்களையும் மகிழ்வூட்டுபவர்கள், ஒரே கானகத்தில் வளரும் நெடும் மரங்களைப் போல ஒருவரை ஒருவர் நம்பியே வாழ்கின்றனர். நாம் தீய திருதராஷ்டிரனாலும் அவனது மகன்களாலும் நாடு கடத்த ப்பட்டு, மரணத்திலிருந்து பெரும் சிரமத்திற்கிடையில் தப்பி த்து வந்திருக்கிறோம். அந்த நெருப்பிலிருந்து தப்பித்து, இந்த மரத்தின் நிழலின் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே இவ்வளவு துன்பப்பட்ட பிறகு, இனி நாம் எங்கே செல்வது? தொலைநோக்குப் பார்வை சிறிதும் அற்ற திரு தராஷ்டிரன் மைந்தர்களே, நீங்கள் தீயவர்கள், உங்கள் தற் காலிக வெற்றியில் மகிழ்ச்சி கொள்ளுங்கள். தேவர்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனா ல் தீய பாவிகளே, நீங்கள் இன்னும் உயிரோடிருப்பது, யுதிஷ்டிரன் உங்களைக் கொல்ல எனக்குக் கட்டளையிடாமல் இருப் பதால்தான். இல்லையேல் கோபத் தால் நிறைந்திருக்கும் நான், இந் நாளிலேயே (ஓ துரியோதனா) உன்னை உனது பிள்ளைகள், நண் பர்கள், சகோதரர்கள், கர்ணன் மற்றும் (சகுனியுடன்) சுவலனின் மகனோடு சேர்த்து எமனின் உலகத்திற்கு அனுப்பியிருப்பேன். ஆனால், இழிந்த பாவிகளே, நான் என்ன செய்ய? பாண்டவர் களில் மூத்த அறம்சார்ந்த மன்னன் யுதிஷ்டிரன், இன்னும் உங்களிடம் கோபம் கொள்ளவில்லையே?” என்று சொல்லி அழுதான்.

– விதை2விருட்சம்

One Comment

Leave a Reply