Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதுப்பொலிவுடன் உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்! – சவால் எண்.14

இப்பகுதியில் தொடர்ந்து தங்களது நல்லாதரவை தந்து கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் விதை2விருட்சம் இணையத்தின் சார்பாக எனது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறேன்.

இப்ப‍குதியில் ஒவ்வொரு நாளும் புதுப் புது வாக்கியங்களும் அதனுடன் தவறான வாக்கியங்களை தந்து, அதில் சரியான வாக்கியம் எது என்று தங்களை பதிலளிக்க‍ கேட்டிருந்தேன். தற்போது கூடுதலாக, ஒரு

குறளையும் தந்து, அந்த குறளோடு பிழையான வார்த்தைகளை கொண்ட குறளை கொடுத்து அவற்றில் எந்த குறள் சரியான குறள் என்பதையும் நீங்கள் தேர்ந்தெடுக்க‍ வேண்டும்.

இப்பகுதியில் நேற்று (12-11-2013 அன்று), சவால் எண்.13-ன் படி கொடுக்க‍ப்பட்ட‍ வாக்கியங்ளை, படித்த‍வர்கள் சுமார் 180 பேர் என்றாலும் கொடுக்க‍ப்பட்ட‍ அந்த வாக்கியங்களில் எது சரி? எது தவறு? என்பதை, திரு. ரவி பிரகாஷ் (ஆர்.பி.) மற்றும் திரு. ரஸ்வீனா தாஹிர் ஆகிய இருவர் மட்டுமே சரியாக சுட்டிக் காட்டிஅவற்றிற்கான‌ சரியான பொருளையும் தெரிவித்துள்ளார். மேலும் திரு. சிவபாலா என்பவர் எது சரி எது தவறு என்று சுட்டிக்காட்டும்போது முதலிரண்டில் உள்ள‍ சரியான வாக்கியங்களை சரியாக சுட்டிக் காட்டியுள்ளார். மேற்காணும் மூவரும், தங்களுக்கு இருக்கும் தமிழ் ஆர்வத்தை இங்கே பகிர்ந்து கொண்டார்கள். மேற்கூறிய மூவரையும், விதை2விருட்சம் இணையம் சார்பாகவும், அதன் வாசகர்களாகிய உங்கள் சார்பாக பலத்த‌ கரவொலியு டனும் குரலொலிகளோடும் மனதார எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதோ இன்றைய வாக்கியங்கள்

1.1) வெண்ணிற ஆடையணிந்து வெண்தாமரையில் பூத்திருக்கும் செந்தாமரை பெண்ண‍வள், இப்பாவையின் பார்வை படும் மூடரும்கூட‌ கண்ணிமைக்கும் நேரத்திலே அறிஞனாவான்.

1.2) வென்னிர‌ ஆடையனிந்து வென்தாமரையில் பூத்திருக்கும் செந்தாமரை பென்ன‌வள், இப்பாவையின் பார்வை படும் மூடரும்கூட‌ கண்ணிமைக்கும் நேரத்திலே அறிஞனாவான்.

1.3) வெண்ணிர‌ ஆடையணிந்து வெண்தாமறையில் பூத்திறுக்கும் செந்தாமறை பெண்ண‍வல், இப்பாவையின் பார்வை படும் மூடறும்கூட‌ கண்ணிமைக்கும் நேரத்திலே அறிஞனாவாண்.
***
2.1) கறைபுற‌ண்டு ஓடும் ஆற்றின் கறை உயர்த்த‍ ஆனையிட்ட‍ மன்ன‍னிடம் பிரம்படி பட்ட‍ பரமவன் பரமசிவன்

2.2) கரைபுரன்டு ஓடும் ஆர்றின் கரை உயற்த்த‍ ஆணையிட்ட‍ மன்ன‍னிடம் பிரம்படி பட்ட‍ பரமவண் பரமசிவண்

2.3) கரைபுரண்டு ஓடும் ஆற்றின் கரை உயர்த்த‍ ஆணையிட்ட‍ மன்ன‍னிடம் பிரம்படி பட்ட‍ பரமவன் பரமசிவன்
***
3.1) கள்லின் கண், உதிற‌ம் வடித்த‍தைக் கண்டு, கல்லென்று பாராமால், ஈசனாகவே எண்ணி, தனது கண்களை,  ஈசணுக்கே தாண‌ம் செய்த பக்தனவன் கன்ன‌ப்ப‍ன்

3.2) கல்ளின் கண், உதிரம் வடித்த‍தைக் கண்டு, கல்லென்று பாராமால், ஈசனாகவே எண்ணி, தனது கண்களை ஈசனுக்கே தாண‍ம் செய்த பக்தனவண் கண்ண‍ப்ப‍ண்

3.3) கல்லின் கண், உதிரம் வடித்த‍தைக் கண்டு, கல்லென்று பாராமால், ஈசனாகவே எண்ணி, தனது கண்களை, ஈசனுக்கே தானம் செய்த பக்தனவன் கண்ண‍ப்ப‍ன்
***

கீழ்க்காணும் மூன்றில் எந்த திருக்குறள் சரியாக உள்ள‍து என்பதை சுட்டிக்காட்ட‍வும்.

A) என்ந‌ன்றி கொன்றாற்க்கும் உய்வுண்டாம்; உய்விள்லை
     செய்நன்றி கொன்ற மகற்கு.

B) எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
     செய்நன்றி கொன்ற மகற்கு.

C) எந்நன்றி கொண்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
     செயநன்றி கொன்ற மகற்கு.

11 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: