Thursday, April 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“Wi Fi” தெரியும் ! அதென்ன “Li Fi” – தெரிந்துகொள்ளுங்கள்

சீனாவில் உள்ள‍ ஷங்காய் பூடான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே வயரில்லா WI – FI இணைப்பை வழங்க கூடிய மின் ஒளி சாதனத்தை கண்டு பிடித்துள்ளனர். இதற் காக ஒரு விசேட LED மின்குமிழை தயாரி த்ததோடு மட்டுமின்றி அதனுள் நொடிக்கு 150 மெகாபைட் வேகத்தினை வழங்க கூடியதாகவும் உள்ள ஒரு சிப்பினை வடிவ மைத்து உருவாக்கியுள்ளனர். மேலும் இத் தொழில் நுட்பத்துக்கு Li- Fi எனப் பெயரிட்

டுள்ளனர்.

நிறைகள்:

1. ஒளி மூலமே கடத்தப்படுவதால் ஒரு குறிப்பி ட்டச் சுவற்றை க் கடக்காது அதனால் அதிக இழப்பினை குறைக்கலாம்.

2. ரேடியோ அலைகள் பாதிப்பிலாத காரணத்தினால் தண்ணீ ருக்கு மேலே கப்பலில் போகும்போதும் சரி, தண்ணீருக்கு அடியில் நீர்மூழ்கிக் கப்ப‍லில் பயணிக்கும்போதும் சரி, அல் ல‍து ஆகாய விமானம் மூலம் ஆகாயத்தில் பறக்கும் போதும் சரி இந்த தொழில் நுட்பத்தை தாராளமாக தங்குதடையின்றி பயன்படுத்த‍லாம். 

3. அபிரிவிதமான வேகம்

4. ஒரே சமயத்தில் குறைந்தது 4 பேர் ஒரே நேரத்தில் பயன் படுத்தும் வகையில் இது தயாரிக்கப் பட்டுள்ளது.

5. இப்புதிய தொழில்நுட்பம் மூலம் கணிணி, மடிக்கணி ணி, கைப் பேசி மட்டுமல்ல‍ பிரிண்டரை உபயோகித்து வேண்டிய ஆவணங்களை பிரிண்ட் செய்து கொள்ள‍ லாம்.

6. இதற்கு ஜி.பி.ஆர். எஸ். கட்ட‍ணம் கிடையாது என்றாலும் ஜி.பி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் அவசியம் தேவை.

-விதை2விருட்சம் 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: