Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“அர்ச்சுனன்”-ஐ சிவபெருமான், வேடன் வேடம் பூண்டு அரக்க‍னிடம் இருந்து காப்பாற்றிய அதிசய நிகழ்வு!

துரியோதனனின் வஞ்சகமான நாடகத்தால் சூதில் அனைத் தையும் இழந்த பாண்வர்கள் வன வாசம் வந்தனர் வந்த இடத் தில் இந்த 12+1 மொத்த‍ம் 13 வருட வனவா சத்தை எப்ப‍டி கழி க்க‍ப்போகிறோம் என்ற தீவிர ஆலோசனையில் ஈடுபட் ட‍னர். அப்போது அங்குவந்த வியாசர் , பாண்வர்களிடம், ‘இந்தப் பதிமூன்று ஆண்டுக்காலத்தில் துரியோதனன் தன் பலத்தைப் பெருக்கிக் கொள்வா ன். ஏற்கனவே

..பீஷ்மர், துரோணர், கர்ணன் முதலி யோர் அவன் பக்கம் இருக்கிறார்கள். இந்நிலையில் வெறும் தவக்கோலம் பூண்டு காட்டில் இருப்ப தால் பயன் இல்லை.இல்

லை.

நீங்களும் உங்களைப் பலப்படுத்திக் கொள்ளவேண்டும்.நான் ‘பிரதிஸ்மிருதி’ என்னு ம் மந்திரத் தை சொல்லித் தருகிறேன். அர்ச்சுன ன் இமயம் சென்று. இம் மந்திரத்தை உச்சரித்துச் சிவபெருமானையும், தேவேந்திரனையும், திக்குப் பாலகர் களையும் வேண்டித் தவம் செய்வா னாக. சிவபெருமான் பாசுபதக்க ணையை நல்குவார். அவ்வாறே பிறரும் சக்தி வாய்ந்த கருவிகள் பல வற்றை அளிப்பார்கள்’ என்று கூறி மறைந்தார்.

உடன் அர்ச்சுனன்…இமயமலையில் இருக்கும் இந்திரகிலம் பகுதியை அடைந்து தவம் மேற்கொண்டான்.அவனைச் சுற்றி புற்று வள ர்ந்தது….ஆனாலும் அவன் அசையாது தவத்தில் இருந்தான்.

அவனது தவத்தின் கடுமை அறிந்த சிவன் உமா மகேஸ்வரியிடம் ‘ அர்ச்சுனன் தவத்தை அறிந்து கொண்ட துரியோதனன் அதை குலைக்க மூகாசுரனை ஏவுவான் .அந்த அசுரனை..என் ஒருத்த னால் மட்டுமே கொல்ல இயலும்.

அந்த அசுரன் காட்டுபன்றி வடிவம் தாங் கி..அர்ச்சுனனை கொல்ல வருவான்… நான் வேடனாகப்போய் அவனைக் காப் பாற்றுவேன்’என்றார்.

அதே போல மூகாசுரன் காட்டு பன்றியாய் வந்தான்.

அர்சுனன் மீது அக்காட்டுப் பன்றி மோதியது.அர்ச்சுனன் தவக் கோலம் நீங்கி தற்காப்புக்காக ஒரு அம்பு கொ ண்டு அவ்விலங்கை தாக்கினான். அப்போது ஒரு வேடன் தன் அம்பை அந்த பன்றியின் மேல் செலுத்த பன்றி வீழ்ந்தது.யாருடைய அம்பால் அப்படி நேர்ந்தது என்று சர்ச்சை எழ..இருவரும் விற் போரில் ஈடுபட்டனர்.அர்ச்சுனன் தோற்றான் .உடன் மண்ணா ல் ஒரு சிவலிங்கத்தை அமைத்து பூமாலை ஒன்றை அணி வித்து பூஜித்தான்.ஆனால் அம்மாலை வேடன் கழுத்தில் இருப்பதை அறிந்த அர்ச்சுனன் வேடனாக வந்தது சிவனே என்று அறிந்து வணங்கி னான்.சிவனும் அவனுக்கு பாசு பதக்கணையை வழங்கினார். அந்த அற்புதக்காட்சியைக்கண் ட தேவர்கள் பல்வேறு கருவிக ளை அர்ச்சுனனுக்கு அளித்தனர்,

தன் மைந்தனின் பெருமை அறிந்த தேவேந்திரன் அவனைத் தேவர் உலகத்திற்கு அழைத்தான்.இந்திரன் கட்டளையால் அவனது சாரதி மாதலி அர்ச்சுனனை தேரில் நட்சத்திர மண்ட லங்களைக் கடந்து ..அமராவதி நகருக்கு அழைத்துச் சென்றான். இந்திரன் ..தன் மகனை அரியணையில் அமர்த்தி சிறப் பு செய்தான்.தெய்வீகக்கருவிகளைப் பயன் படுத்தும் முறைபற்றி அறிய ஐந்து ஆண் டுகள் தங்கியிருக்கவேண்டும் என கட்ட ளையிட்டான். இந்திரன் ..நுண்கலைகளா ன நடனம், இசை ஆகியவற்றிலும் அர்ச் சுனன் ஆற்றல் பெற அவனை சித்திரசே னனிடம் அனுப்பி வைத்தான். அனைத்துக் கலைக ளிலும் பயிற்சி பெற்று நிகரற்று விளங்கினான் தனஞ்செயன்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: