Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சவால் எண்.17: – உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்!

இப்பகுதியில் நேற்று (15-11-2013 அன்று), சவால் எண்.16-ன் படி கொடுக்க‍ப்பட்ட‍ வாக்கியங்ளை, படித்த‍வர்கள் சுமார் 290 பேர் என்றாலும் கொடுக்க‍ப்பட்ட‍ அந்த வாக்கியங்களில் எது சரி? எது தவறு? என்பதை சுட்டிக்காட்டியவர்களது பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ள‍து.click h

ere

திருமதி அழகன் மா. தேவி (சிங்கப்பூர்),
திருமதி கல்யாணி (தமிழீழம்),
திரு. சின்ன‍ச்சாமி (கோவில்பட்டி),
திரு.சக்திநாயகம்,
திரு. செல்வம்,
திரு. ராமன்,
திரு. ராமச்சந்திரன்,
திரு. ராஜா,
திரு. அழகேசன் (மலேசியா),
திரு. தீனதயாளன் (ராஜு),
திரு. எஸ். ராஜு (எஸ்ஸிடி),
திரு.எஸ். சந்தோஷ்குமார் (துபாய்),
திரு.மணிகண்டன் பொன்னுச்சாமி (துபாய்),
செல்வி. எம். ரஸ்வினா தாஹிர்

ஆக மொத்த‍ம் 14 பேர் சரியாக சுட்டிக்காட்டி அவற்றிற்கான‌ சரியான பொருளையும் தெரிவித்து , தங்களுக்கு இருக்கும் தமிழ் ஆர்வத்தை இங்கே பகிர்ந்து கொண்டார்கள். மேற்கூறி ய 14 பேரையும், விதை2விருட்சம் இணையம் சார்பாகவும், அதன் வாசகர்களாகிய உங்கள் சார்பாகவும் பலத்த‌ கரவொ லியுடனும் குரலொலிகளோடும் மனதார எனது பாராட்டுக்க ளை தெரிவித்துக்கொள்கிறேன்.

1.1) மனமுள்ள‍ மலர்மாலைதனை, தான் சூடி, அழகுப்பார்த்த மங்கையவள் ஆண்டால் பின் அதை திருமாள் மார்பில் சூடிய அம் மலர்மாலைதனை மனமுவந்து ஏற்றான்.

1.2) மணமுள்ள‍ மலர்மாலைதனை, தான் சூடி, அழகுப்பார்த்த மங்கையவள் ஆண்டாள் பின் அதை திருமால் மார்பில் சூடிய அம் மலர்மாலைதனை மனமுவந்து ஏற்றான்.

1.3) மணமுள்ள‍ மலர்மாலைதனை, தான் சூடி, அழகு பார்த்த மங்கையவள் ஆண்டாள் பின் அதை திருமால் மார்பில் சூடிய அம் மலர்மாலைதனை மனமுவந்து ஏற்றான்.
***

2.1) இவள் தந்தை, அய்யகோ! என்று அலறி, தன் மகளை வசைபாடி, வேறொரு மலர்மாலைதனை சூடினார் ஆனாலும், ஆண்டாளவல் சூடிய மலர்மாலைதனை ஏற்ற‍ திருமாள் இம்மலர்மாலைதனை மணமுவந்து ஏற்கவில்லை.

2.2) இவள் தந்தை, அய்யகோ! என்று அலறி, தன் மகளை வசைபாடி, வேறொரு மலர்மாலைதனை சூடினார் ஆனாலும், ஆண்டாளவள் சூடிய மலர்மாலைதனை ஏற்ற‍ திருமால் இம்மலர்மாலைதனை மனமுவந்து ஏற்கவில்லை.

2.3) இவள் தந்தை, அய்யகோ! என்று அலறி, தன் மகளை வசைபாடி, வேறொரு மலர்மாலைதனை சூடினார் ஆனாலும், ஆண்டாளவள் சூடிய மலர்மாலைதனை ஏற்ற‍ திருமால் இம்மலர்மாலைதனை மனமுவந்து ஏற்கவில்லை.
***

3.1) தமிழ்ப்பால் கொண்ட ஈர்ப்பால், தமிழ்ச்சுவடிகளை தினந்தேடி அலைந்தே! உயிர்ப்பால் கொடுத்து, மெய்ப்பால் உனர்த்திய நம் தமிழ் தாத்தா அவர்.

3.2) தமிழ்ப்பால் கொண்ட ஈர்ப்பால், தமிழ்ச்சுவடிகளை திணந்தேடி அலைந்தே! உயிர்ப்பால் கொடுத்து, மெய்ப்பால் உணர்த்திய நம் தமிழ்த்தாத்தா அவர்.

3.3) தமிழ்ப்பால் கொண்ட ஈர்ப்பால், தமிழ்ச்சுவடிகளை தினந்தேடி அலைந்தே! உயிர்ப்பால் கொடுத்து, மெய்ப்பால் உணர்த்திய நம் தமிழ்த்தாத்தா அவர்.
***

கீழ்க்காணும் மூன்றில் எந்த திருக்குறள் சரியாக உள்ள‍து என்பதை சுட்டிக்காட்ட‍வும்.

A) அன்ரரிவாம் என்னாது அரஞ்செய்க மர்து
     பொன்ருங்கால் பொன்ராத் துணை

B) அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
     பொன்றுங்கால் பொன்றாத் துனை

C) அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
     பொன்றுங்கால் பொன்றாத் துணை

9 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: