Friday, January 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“பாலியல் குற்ற‍வாளிகளை உருவாக்குவதே பெண்கள்தான்!” – – நடிகை பூர்ணா ஆவேசம்

அண்மைக்காலமாக நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன• இதனை தடுக்க சட்ட‍ திருத்த‍ங்கள் கொண்டுவரப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க ப்பட்டு வருகின்றன. பாலியல் குற்ற‍ வாளிகளுக்கு கடுமையான தண்ட னைகளும் வழங்கப் பட்டு வருகிறது. இருந்தபோதிலும் பெண்களுக்கு எதி ரான பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை.

இளம் பெண்கள் அணியும் கவர்ச்சி உடைகள் பாலியல் குற்ற ங்களுக்கு தூண்டுதலாய் அமைகிறது என்று விமர்சிக்கப்படுகிறது. சில கல்லூரிகள் மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. இதற்கு

ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகிற து. இந்நிலையில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’, ‘கொ டைக்கானல்’, ‘கந்தக் கோட்டை’, ‘துரோகி’, ‘ஆடுபுலி’, ‘வித்தகன்’ போ ன்ற சில திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை பூர்ணா இது குறித்து தனது கருத்தினை தெரிவி த்து உள்ளார். அவர் கூறியதாவது:–

பாலிய குற்ற‍வாளிகளை உருவாக்கு வதே! பெண்கள்தான்! பெண்கள் ஆபாசமாக ஆடைகள் அணிய கூடா து. சினிமாவில் நடிகைகள் கவர்ச்சியாக ஆடை உடுத்துகின் றனர். அதை பார்த்து சில பெண்களும் கவர்ச்சி ஆடை அணிகிறார்கள். சினிமா வுக்காக மட்டும் பயன்படுத்தக்கூ டிய உடைகள் அவை. பொது இடங்களில் அவ ற்றை அணிவது சரியல்ல. நடிகைகள் போல் ஆடைகள் அணிய ஆசைப்படக் கூடாது. ஆபாச ஆடைகள் அணிவதை தவிர்த்தால் பாலியல் குற்றங்கள் குறையும். இவ்வாறு பூர்ணா கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன•

Leave a Reply