Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உண்மையில் “அன்னாசி” ஒரு பழமே அல்ல‍!

பதினைந்தாம் நூற்றாண்டில் கடல் வழியே உலகைச் சுற்றி வந்த கொலம்பஸ், தான் கண்டுபிடித்த ‘புது’ உலகத் திலிருந்து எதையெதை யோ ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றார். அவ ற்றில் ஒரு விசேஷமான பழம்.கொலம்பஸுக்கு அந்தப் பழம் பிடித்திருக்க வேண்டும். தன்னுடைய நாட்டு மக்களுக்கு அதனை அறிமுக ப்படுத்த விரும்பினார். அதற்காக

ஏற்றுமதி செய்தார். ஆனால் , நீண்ட கப்பல் பயணத்தில் அந்தப் பழங்கள் எல்லாம் அழுகிவிட்டன. கொலம்பஸ் நொந்து போனார் .நல்ல வேளையாக, ஒரே ஒரு பழம் மட்டும் அழுகாமல் தப்பியிருந்தது. அதைத் தன் னுடைய அரசர் ஃபெர்டினாண்ட்க்கும் அரசி இசபெல்லாவுக் கும் பரிசாகக் கொடுத்தார் கொலம்பஸ். அப்பழத்தின் தலை யில் கிரீடம் போல இலைகள் முளை த்திருந்தன. சொர சொரப்பான தேக ம். தொட்டுப் பார்த்தால் கெட்டியாக இருந்தது, முகர்ந்து பார்த்தால் ஆளை மயக்கி யது. வாசனையிலே யே அசந்து போன அரசர், அந்தப் பழ த்தை வெட்டிச் சாப்பிட்டார். ஆஹா! நான் இதுவரை இப்படி ஒரு பழத்தைச் சாப்பிட்டதில் லையே” என்று கிறங்கி விட்டார்.உடனடியாக இந்தப் பழத் தை நம் நாடு முழுவதும் விளைவிக்க ஏற்பாடு செய்யுங்கள். இனி மேல் தினம் நான் இதைச் சாப்பிட வேண்டும்!”
 
அரசர் நினைத்ததுபோல அது அத் தனை சுலபம் இல்லை. அந்தப் பழம் சில குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில், மண் வகைகளில்தான் விளையும். அன்றைய ஐரோப்பா வுக்கும் அதற்கும் ஒத்துப்போகவில்லை.அதனால் என்ன? மன்னர் நினைத்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் அதைத் தருவிக்கலாமே?அன்று தொடங்கி, அந்தப் பழம் அரசர்களின் விருப்ப மான விஷயமாகிவிட்டது. எவ்வள வு செலவானாலும் சரி, அந்தப் பழம் எங்கே விளைகிறதோ அங்கிருந்தே நேரடியாக இறக்குமதி செய்து சாப் பிட ஆரம்பித்தார்கள். அபூர்வ மாக மட்டுமே கிடைக்கும் அந்தப் பழத் தை அவர்கள் ‘அரசர்க ளின் பழம்’ (Fruit of the kings)என்று செல்லமாக அழைத்தா ர்கள்.இன்றைக்கு, அந்த அருமையான பழம் உலகம் முழுவ தும் கிடைக்கிறது. மன்னர்கள் மட்டு மல்ல, நம்மைப் போன்ற மக்களும் வாங்கிச் சாப்பிடலாம். ஆகவே, ‘அரசர்களின் பழம்’ என்ற பெயரைத் திருப்பிப்போட் டு, அதனைப் ‘பழங்களின் அரசன்’ (King of fruits) என்று மாற்றிவிட்டார்கள். ‘பைனாப்பிள்’ என்று ஆங்கிலத்திலும், ‘அன்னாசி ’ என்று தமிழிலும் அழைக்கப் படும் சுவையான பழம் தான் அது!கடைக்குச் செல்கிறீர்கள். அன்னா சிப் பழம் ஒன்றைக் கையில் எடுக் கிறீர்கள். கடைக்கா ரரிடம் இந்தப் பழம் என்ன விலை?” என்று விசா ரிக்கிறீர் கள்.உண்மையில் உங்கள் கேள்வியே தவறு. அது ‘பழம்’ அல்ல, ‘பழங்கள்’! 
 
ஆமாம், நாம் ஒரு பழமாக நினைக்கும் அன்னாசிக்குள் பல பழங்கள் ஒருங்கிணைந் து கூட்டணி சேர்ந்துள்ளன. இதனை ஆங்கிலத்தில் “Multiple Fruit’ என்று அழைக் கிறார்கள். சந்தேகமாக இருக் கிறதா? ஓர் அன்னாசிப் பழத்தைக் குறுக்கே நறுக்கிப் பாருங்க ள், மையத்தில் ஒரு தண்டு தெரியும், அதைச் சுற்றிச்சிறு கண் போன்ற பகுதிகள் இருக்கும். அவை ஒவ்வொன்றும் ஒரு பழம். மொத்தமாகச் சேர்ந்து சொர சொரப்பான வெளித் தோ லுடன் வளர்கின்றன!பொதுவாக நாம் கடைகளில் வாங்கும் அன் னாசிப் பழங்கள் அதிகபட்சம் ஓரிரு கிலோ எடைதான் இருக்கும். ஆனால், விவசாயிகள் அவற் றைப் பறிக்காமல் அப்படியே விட்டுவிட்டால், அவை மிகப்பெரியதாக வளர்ந்து எட்டு, ஒன்பது கிலோ எடை வரை செல் லக்கூடும்.அன்னாசி புதர் போன்ற சிறு செடிகளில் விளை கிறது. பொதுவாக மலைச் சரிவு களில்தான் அன்னாசி நன்றா கச் செழித்து வளரும். மலையோரக் கிராமங்கள் போன்ற சமவெளிப் பகுதிகளிலும் இதனைப் பயிரிடு கிறார்கள். தமிழ் நாட்டில் கன் னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கிராமம் முழுக்க அன்னாசியைப் பயிர் செய்திருக்கிறார்கள் .‘பைனாப்பிள்’ என்ற ஆங்கிலச் சொல்லை, பைன் + ஆப்பிள் என்று பிரிக்க வேண்டும். இந்தப் பழத்தை மேலோட்டமாகப் பார்த்தால் பைன் மரக் கூம்பைப் போல் சொரசொரப்பாக இருக்கு ம், ஆனால் வெட்டிச் சாப்பிட்டா ல் ஆப்பிளைப்போல ருசிக்கும் என்பதால் அப்படிப் பெயர் சூட்டி யிருக்கிறார்கள். இதனைத் தமி ழில் ‘அன்னாசி’ என்று அழைக்கி றோம். உண்மையில் இது போர்ச்சுக்கீசிய மொழியிலிருந்து வந்த பெயர். செந்தா ழை, பிருத்தி, அன்ன தாழை போன்ற மாற்றுப் பெயர்களிலும் இதனை அழைப்பது உண்டு.இந்தச் செடியி ன் தாவரவியல் பெயர் ‘அனனாஸ் ’. இதற்கு ‘மிக நல்ல பழம்’ என்று அர்த் தம்.அன்னாசிப் பழத்தைத் தோல் சீவித் துண்டாக்கி அப்படி யே சாப்பிடலாம். பல நாடுகளில் இதன் மீது உப்பு, காரப் பொடியைத் தூவி அப்படியே சாப்பிடுவார்கள். அப்படியே குச்சியில் குத்தி எடுத்து ஐஸ்க்ரீம்போலச் சுவைக்கிறவர்கள் உண்டு. இதே போல, அன்னாசிப் பழரசமும் மிக ச் சுவையானது. இந்தப் பழத்திலி ருந்து ஜாம் தயாரிக்கிறார்கள், ஜெல்லி தயாரிக்கிறார் கள், கேக் போன்ற இனிப்புகளின் மீது அலங் காரமாக நறுக்கி வைக்கிறார்கள்!
 
பிட்ஸாவில் பொதுவாகக் காரமா ன சமாசாரங்கள், காய்கறி கள்தான் சேர்க்கப்படும். ஆனால் அன்னாசிக்கு மட்டும் அங்கே விதிவிலக்கு, இனிப்பான அன் னாசிப் பழத்துண்டுகளைத் தூவிய பிட்ஸா உலகம் முழுக்கப் பிரபலம். இவை தவிர, அன்னாசிப் பழத்தைச் சமைத்துச் சாப்பிடுகிற பழக்கமும் இருக்கிறது. குறிப்பாக, அன்னாசி அல்வா பலருக்குப் பிடித்த இனிப்பு வகை. அன்னாசிப் பழத்தில் ரசம், பச்சடி, சாலட் என்று அடுக்கிக் கொ ண்டே போகலாம். கேசரியில் இத னைத் துண்டாக்கிச் சேர்ப்பது தனி சுவையைத் தரும். அன் னாசியில் பெரும்பகுதி தண்ணீர்தான். ஆகவே, இதை நாம் எவ்வளவு சாப்பிட்டாலும் வயி று நிரம்பும், ஆனால் தொப்பை போடாது.பொட்டாசியம், மக்னீ சியம், கால்சியம் ஆகியவை இதில் ஏராளமாக உண்டு. வைட் டமின் இயும் அதிகமாக இருக்கி றது. அன்னாசிப் பழத்துக்கு மரு த்துவ குணங்களும் நிறையஉண்டு. உடலில் எலும்பு வளர்ச் சி யை மேம்படுத்தும், பற்களையும் ஆரோக்கியமாக வைத்தி ருக்கும்.ஜலதோஷம், சுவாசப்பிர ச்சனைகளுக்கு அன்னாசி ஒரு நல்ல மருந்து. வயிற்றில் புழுக்கள் இருந்தா ல் அவற்றை நீக்கிக் குணப்படுத்தும். வியர் வை, சிறுநீர் சுரப்பில் இருக்கக் கூடிய கோ ளாறுகளை அகற்றும். உடலில் காயம்படும் போது ரத்தம் அதிகம் வெளி யேறாமல் கா க்கும். ‘பைனா’ வை நேரடியாகவோ, அல்ல து, பட்டு, பாலியெஸ்டருடன் சேர்த்தோ நெ சவு செய்யலாம். இதிலிருந்து சில விசேஷ மான ஆடைகளைச் செ ய்கிறார்கள். மேஜை விரிப்பு, பைகள், பாய் கள் போன்றவற்றையும் தயாரிக்கிறார்க ள். அன்னாசியை நறுக்கும்போது நாம் வேண்டாம் என்று தூக்கி எறிகிற தோல், இலைகள் போன்றவற்றுக்கும் பயன் இரு க்கிறது. வினிகர் உற்பத்தியிலும், வேறு சில பானங்களைத் தயா ரிக்கும்போதும் இவற்றைச் சேர்க்கிறார்கள், கால்நடைக ளுக்குத் தீவனமாகவும் கொடுக்கிறார்கள்.
 
– என்.சொக்கன்

2 Comments

Leave a Reply