Thursday, January 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சவால் எண்.20: – உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்!

இப்பகுதியில் நேற்று (19-11-2013 அன்று), சவால் எண்.19-ன் படி கொடுக்க‍ப்பட்ட‍ வாக்கியங்ளை, படித்த‍வர்கள் சுமார் 111 பேர் என்றாலும் கொடுக்க‍ப்பட்ட‍ அந்த வாக்கியங்களில் எது சரி? எது தவறு? என்பதை சுட்டிக்காட்டியவர்களது பெயர்கள் கீழே

பட்டியலிடப்பட்டுள்ள‍து.

1) திரு. தீனதயாளன் (ராஜு), ஐதராபாத்
2) திரு. மணிகண்டன் பொன்னுசாமி (துபாய்)
3) செல்வி வித்யா, வழக்க‍றிஞர், (கோயம்புத்தூர்)
4) திரு. மணிவண்ண‍ன் வேதாரண்யம்
5) செல்வி ரஸ்வினா தாஹிர் (ஸ்ரீலங்கா)
6) திரு. ரமேஷ்
7) திரு. ஏ. கோபால கிருஷ்ணன் (துபாய்)

மேற்காணும் இந்த ஏழு பேரையும் விதை2விருட்சம் இணை யம் சார்பாகவும், பலத்த‍ கரவொலி மற்றும் குரலொலிகளோ டு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இதோ இன்றைய வாக்கியங்கள்

1.1) குள‌மகள் ராதை, குல‌த்தில் குளிக்கையில் கள்ள‍த் தனமாக கல்லெரிந்தோடிய‌ கள்வன் அவன் புள் தடுக்கி விழுந்ததால் அவனது பல் உடைந்து உதிரம் கொட்டியது.

1.2) குலமகல் ராதை, குளத்தில் குளிக்கையில் கள்ள‍த்தண‌ மாக கல்லெறிந்தோடிய‌ கள்வன் அவன் புல் தடுக்கி விழுந்த தால் அவனது பல் உடைந்து உதிற‌ம் கொட்டியது.

1.3) குலமகள் ராதை, குளத்தில் குளிக்கையில் கள்ள‍த் தனமாக கல்லெறிந்தோடிய‌ கள்வன் அவன் புல் தடுக்கி விழுந்ததால் அவனது பல் உடைந்து உதிரம் கொட்டியது.

***

2.1) மலையேர‌ பயந்த‌ மலையப்ப‍ன், துணிவை மனதில் கொண்டு மலையேரினான். பின், தான் கடந்த பாதையைக் கண்டு மலைத்துப்போனான்.

2.2) மளையேற பயந்த மளையப்ப‍ன், துணிவை மனதில் கொண்டு மளையேறினான். பின், தான் கடந்த பாதையைக் கண்டு மளைத்துப்போனான்.

2.3) மலையேற பயந்த‌ மலையப்ப‍ன், துணிவை மனதில் கொண்டு மலையேறினான். பின், தான் கடந்த பாதையைக் கண்டு மலைத்துப்போனான்.

***

3.1) நெல்லையப்ப‍ன் நினைத்த‍படி விலைநிலத்தை விளை பேசி வாங்க அளைமோதும் கூட்டத்தால் விலைநிலத்தின் விலை உச்ச‍த்திற்கு சென்றது.

3.2) நெல்லையப்ப‍ன் நினைத்த‍படிவிளைநிள‌த்தை விலை பேசி வாங்க அலைமோதும் கூட்டத்தாள் விளைநிலத்தின் விலை உச்ச‍த்திற்கு சென்றது.

3.3) நெல்லையப்ப‍ன் நினைத்த‍படிவிளைநிலத்தை விலை பேசி வாங்க அலைமோதும் கூட்டத்தால் விளைநிலத்தின் விலை உச்ச‍த்திற்கு சென்றது.

***

கீழ்க்காணும் மூன்றில் எந்த திருக்குறள் சரியாக உள்ள‍து என்பதை சுட்டிக்காட்ட‍வும்.

A) இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
     இன்முகங் காணும் அளவு

B) இண்ணாது இரக்கப் படுதல் இரந்தவர்
     இண்முகங் கானும் அளவு.

C) இன்னாது இற‌க்கப் படுதல் இரந்தவர்
     இன்முகங் காணும் அளவு.

8 Comments

Leave a Reply