
குழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது?
இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம்.
முதலில் இந்த ஓவியத்தை யார் வரைந்திருப்பார்கள் என்று
உங்களால் ஊகிக்க முடிகிறதா. தெரி ந்தவர்களும் இருப்பீர். தெரியாதவர் களும் இருக்கலாம். பாசம் பொங்கு ம் கண்களு டன் அன்னை மேரியும் தெய்வீகக் குழந்தை ஏசுவும் தத்ரூப மாக காட்சி அளிக்கும் இந்த ஓவிய த்தை பார்த்தால் பாராட்டத் தோன் றாமல் இருக்குமா? ஆனால் பேரைக் கேட்டால் பாரா ட்ட மனம் வராது.
சிறு வயதில் இருந்தே அவனுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்த து. ஓவியப் பள்ளியில் சேர்ந்து படிக் க வேண்டும் விரும்பினான். ஆனால்
அவன் அப்பாவோ அவ னது திறமையை அறிந்தவராக இல்லை. அவனை பொறியி
யல் படிக்க வற்புறுத்தினார். சிறிய தவறுகளுக்குக் கூட அவனை கடுமையாக அடித் து துன்புறுத்துவதை வழக்க மாகக் கொண்டிருந்தார். தெ ருவில் நிறுத்தி பெல்ட்டால் மகனை அடிப்பது சர்வ சாதா ரணமாக இருந்தது. தந்தை யின் மீது தீராத வெறுப்பு கொண்டான் அந்த சிறுவன். தந்தை இறந்த பின் அவன் தனது விருப்பத்தை தாயிடம் தெரிவித்தா
ன். ஓவியக் கல்லூரியில் சேர்த்து விட முயன்றார் அவரது தாய். ஆனால் அதிலும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. இரண் டாவதுமுறை முயற்சி செய்தும் தோல்வி யே கிடைத்தது. (அந்தக் காலத்திலுமா நுழைவுத் தேர்வு) அவனுக்கு ஓவியம் வராது ஆனால் ஓவியத்தைவிட Architecture வேண் டுமானால் படிக்கலாம் என்றனர். பிடிக்காத பள்ளிக்கே மீண்டும் செல் ல வேண்டி இருந்தது. இப்படி விருப் பப் பட்டது எதுவும் நட க்காமல் மன சிதைவுக்கு ஆளானான் அந்த சிறுவன். மேலு ள்ள அழகான ஓவியத்தை வரைந்தவன் தான் பின்னாளில் இலட்சகணக்கா
ன பேரை கொன்று குவித்தவன். இப்போது தெரிந்திருக்குமே அவன் யாரென்று. ஆம் அவன்தான் அடா ல் ப் ஹிட்லர்.
தந்தையின் கொடுமை,பள்ளியின் கண்டிப்பு,ஓவியத் தேர்வில் தோல் வி போன்றவை ஹிட்லரை இரக்க மற்ற மனிதனாக மாற்றிஇருக்கக் கூடும். ஹிட்லர்கள் தானாக உரு வாவதில் லை என்பதற்கு இது ஒரு உதாரணமாகக் கொள்ளலாம் . ஓவியக் கல்லூரியில் இடம் கிடைத்திருந்தால் அவனது வாழ்க்கையே திசை மாறி இருக்க லாம். ஏன் வரலாறே ஒரு வே ளை மாறி இருக்கலாம்.
இதற்குநேர் மாறாக இன்னொரு உதாரணம் பார்க்கலாம். சர்ச்சுக்கு வந்த அந்த சிறுவனின் வயது எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கலா ம் ஒருநாள் பாதிரியார் அவனை ஒரு கண்ணடிக் கோப்பையை எடு த்து வருமாறு கூறுகிறார். கோப் பையை கொண்டு வரும்போது கவ னக் குறைவினால் கை தவறி கீழே போட்டு விடுகிறான். அது உடைந்து சிதறி விடுகி றது.பையனுக்கோ பய ம் வந்துவிட்டது பாதிரியார் தன்னை என்னவெல்லாம் சொ ல்லி திட்டப் போகிறாரோ?அல்லது அடி ப்பாரோ என்று நடுங்
குகிறான். கண்ணாடி உடையும் சத்தம் கேட்ட பாதிரியார் திரும்பிப்பார்க்கிறார் . அடடா குடிப்பையா! கண்ணாடி கோப் பையை கை தவறவிட்டுவிட்டாயா? உடைந்து விட்டதே? கவனமாக இருக் கவேண்டாமா? காலில் குத்தி விட்டால் ஆபத் தாயிற்றே” என்று சொல்லிக் கொண்டே கண்ணாடித் துண்டுகளை அப்புறப் படுத்த ஆரம்பித்து விட்டார்.
பையனால் இதை நம்பமுடியவில்லை . ‘ஃபாதர் ஏன் தன்னை திட்டவில்லை? என்பது அவன் மனத்தில் எழுந்த கேள்வி .நெடு நேரம் அவனு க்கு அது உறுத்தியது. யோசிக்க யோசிக்க அவனுக்கு தெளிவு
கிடைத்தது. அவன் தவறு செய்தான். ஆனால் ஃபாதர் அவ னை மன்னித்து விட்டார். தவறு எல்லோரும் செய் வார்கள். பெரியவர்கள் அதை மன்னி த்து விடுவார்கள். இதுதான் அவனுக் கு தோன்றிய விடை. இதுதான் பிற் காலத்தில் அந்த சிறுவன் உலகம் வணங்கும் மனிதராக உருவாக கார ணமாக அமைந்தது. அவர் பிற்காலத் தில் யாருடைய தவறையும் பொருட் படுத்தியதில்லை. அவரை கொல்ல ஒருவன் முயற்சி செய்தான். ஆனால் அதில் இருந்து நூலிழையி ல் தப்பி விட்டார். கொலை செய்ய முன்றவனை கைது செய் து விட் டனர்.ஆனால் அவரோ அவனை, தான் மன்னித்ததோடு மன்
னித்து விடுமாறு அரசாங்கத் தையும் கேட்டுக கொண்டார். அதுமட்டுமல்ல சிறைச்சா லைக்கு சென்று அவனை நேரில் சந்தித்ததோடு அவன் நன்மைக்காக பிரார்த்தனையு ம் செய் தார். அவர் யார் என்று கண்டுபிடித்திருப்பீர்கள் அவர்தான் இரண்டாம் போப் ஜான் பால்.
=> tnmurali
thankyou