Monday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“புதுப்படங்களை இணையத்தில் வெளியிட முடிவு!” – A.V.M அதிரடி

தமிழ்த்திரையுலகில் பல்வேறு புதுமைகளையும் புகுத்தி பல காலத்தால் அழியாத பல காவியத் திரைப்படங்களை தந்த‌ நிறுவனம் என்றால் அது ஏ.வி.எம்தான்

திரைப்படத்துறையில் தொட ங்கிய‌ ஏவிஎம்மின் வெற்றிப் பயணம் , தொலைக்காட்சியிலும் ஆதிக்க‍ம் செலுத்தியது. மேலும் இன்றைய பரிணாம வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் இணைய த்திலும் தனது பயணத்தை

தொடர இருக்கிறது. ஆம் இனி ஏ வி எம். தயாரிக்கும் புதுப்படங்களை திரையரங்கில் வெளி யிடுவதற்கு பதிலாக இணையத்தில் அதாவது யூ டியூப்பில் வெளியிட தீர்மானித்திருக்கிறது.

தமிழ்த்திரை ரசிகர்கள் ஏ.வி.எம்மின் புதிய திரை ப்படத்தை யூடியூப் போன்ற இணையங்களில் கண்டு ரசிக்கலாம். இதில் இருந்து கிடைக்கும் விளம்பரம் தான் இத்திரைப்படத்தின் வருமானம்.

முதன்முதலாக சிவாஜி பேரன் சிவாஜி தேவ் நடிக்கும், “இதுவும் கடந்து போகு ம்” என்ற படத்தை ஏ விஎம் தயாரித்து வருகிறது. கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீஹரி பிர பாகர் எழுத, அவருடன் இணைந்து இந்த படத்தை அனில் கிருஷ்ணன் இயக்கியுள்ளார்

தியேட்டரில் வந்து படங்கள் பார்க்கும் கூட்டம் தற்போது குறைந்துகொண் டே வருகிறது. இனி எதிர்காலத்தில் திரைப்படங்களையே நேரடியாக இணையத்தில் ரிலீஸ்செய்யும்நிலை வரவும் வாய்ப்புள்ளது. இதன் ஆரம்ப நிலையே தற்போது குறும்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிடும் முயற்சியில் ஈடுபட் டுள்ளது ஏவிஎம். ஒரு மணிநேரம் ஓடும் குறும்படங்கள் இனி எதிர்காலத்தில் சினிமா,டிவிக்களை ஓரங்கட்டும் என்பதில்சந்தேகம்இல்லை.

Leave a Reply