Friday, July 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ATM-இல் ஒரு பெண்ணை, மர்ம நப‌ர் கொடூரமாக தாக்கும் நேரடி காட்சி!-வீடியோ

பெங்களூரில் வசிக்கும் ஜோதி உதய என்ற 37 வயது வங்கி அதிகாரி ஒருவர் நேற்று காலை ஏழு மணியளவில் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்கும்போது திடீரென உள்ளே நுழைந்த ஒரு மர்ம மனிதன் மையத்தின் ஷட்ட ரை மூடி, தான் கொண்டு வந்திருந்த அரிவாளை எடு த்து பெண்ணின் கழுத்து, தோள் பட்டை உள்பட பல இடங்களில் வெட்டி தாக்கியுள்ளான். பின்னர் அவரிடம் இருந் து பணத்தை பறித்துக்கொண்டு உடனடியாக ஷட்டரை திறந் து அந்த இடத்தில்

இருந்து மறைந்து விட்டான்.

இந்தகொடூர காட்சிகள் ஏ.டி.எம் மையத்தில் இருந்த இரண்டு கேமராவிலும் பதிவாகியு ள்ளது. பின்னர் பணம் எடுக்க வந்த ஒரு வாடிக்கையாளர் தந்த தகவலை அடுத்து போ லீஸார் வந்தனர். உயிருக்கு போராடியபடி துடித்துக் கொ ண்டிருந்த ஜோதி உதயை உட னடியாக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோதிஉதய் உயிருக்கு ஆபத்தான நிலை யில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக நிமான்ஸ் மருத் துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

%d bloggers like this: