Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“WiFi” பயன்படுத்துபவர்களுக்கான எச்ச‍ரிக்கை பதிவு!

கம்பிகளின் வழியாக இணைய இணைப்பை ஏற்படுத்தி பயன் படுத்திக்கொண்டிருந்த நமக்கு, கம்பி யில்லா இணைய இணைப்பை சாத்தி யமாக்கியது WiFi தொழில்நுட்பம். இத்தொழில்நுட்பம் அறிமுகமானதிலி ருந்து குக்கிராமத்திலும்  கூட இணை ய இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளக் கூடி ய வசதிகள் ஏற்பட்டன.பயனுள்ள இத்தொழில்நுட்பத்தில் உள் ள குறைகளைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் செய்யும் திருட்டு த்தனங்கள் நிறையவே

உள்ளது.

மிகப்பெரிய பேராபத்துக்களையும் இதன் மூலம் செய்து வரு கிறார்கள்.

இத்தகைய அபாயங்கள் மிகப்பெ ரிய அச்சுறுத்தலாக உருவெ டுத்து ள்ளது.

என்னென்ன பிரச்னைகள், எத்தகைய அபாயங்கள் உள்ளன என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்பு வைஃபை(WiFi) என் றால் என்ன? என்பதைத் தெரிந்துகொள்வோம். 

WiFi என்பது wireless fidelity என்பதின் சுருக்கம். இது ஒரு  wire less local area network  ஆகும்.

கணினி – இணையதள இணைப்புகளுக் கும், நெட்வொர்க்குக ளுக்கும் இணைப் புகளை ஏற்படுத்திய கம்பிவட தொழில் நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக வளர்ந்து ள்ள புதிய பரிணாம வளர்ச்சியே வை ஃபை என்று சொல்லக்கூடிய கம்பியில் லா இணைய இணைப்பு தொழில்நுட்பம் ஆகும்.

வைஃபை நெட்வொர்க்கில் உள்ள குறைகள்: 
(Imperfections in the WiFi network:)
Wi-Fi நுட்பத்தின் மூலம் கணினி, மொபைல், டேப்ளட் பிசி போன்ற சாதனங்களில் இணைய இணைப்பு எந்த இடத்திலிரு ந்தும் பெற முடியும் என்றாலும் முறையான தடுப்பு, பாது காப்பு வசதிகளைப் பயன்படுத்தாத பொழுது இது பெரும் அச்சுறுத்தலா கவே உள்ளது. 
 
அதாவது, இணைய இணைப்பை வான்வழி சிக்னல்களாக அனுப்பி பெற்றுப்பயன்படுத்துவதால் இடையில் வேறுயாரே னும் அதில் குறுக்கிட்டுப் பயன்படுத்த சாத்தியங்கள் அதிகம்.இதன் மூலம் கணினி ஹேக்கர்கள் எளிதாக ஒரு கணினியின் நெட்வொர் க்கில் புகுந்து நாச வேலைகளில் ஈடு பட முடியும். 
உதாரணமாக சொல்வதெனில் சமீபத் தில் நடைப்பெற்ற குண்டு வெடிப்புச் சும்பவத்தில் ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சல் பயன்படுத்தப்பட்டி ருப்பது தெரிய வந்தது.

அந்த மின்னஞ்சலுக்கு சொந்தக்காரர் அமெரிக்காவைச்சேர்ந்தவர். அதாவ து அமெரிக்காவில் உள்ள ஒருவரின் கணினி யின் நெட்வொர்க்கில் புகுந்து ஹேக்செய்து அவருடைய கணினியி ன் மூலம், அவருடைய மின்னஞ்சலை நாசவேலைக்குப் பயன்படுத்தியிருந் தார்கள் என்பது தெரிய வந்தது.

தொடர்பில்லாத ஒரு நபரின் கணினியின் மூலம் அந்த நாச வேலை அரங்கேறியிருப்பது தெரிய வந்தது. 

வயர்லெஸ் அக்சஸ் கார்டுகளி ன் (Wireless Access Cards) மூலம் இயங்கும் லேப்டாப்கள், தானிய ங்கி இணைப்பு அமைப்புகள் ஆகியவை தற்போது பெருகி வருகிறது.

அதாவது ஒயர்லஸ் இணைப் பைப் பயன்படுத்துபவர்கள் வான் வழியே தகவல்களை அனுப் புவதால் அதனை தடுத்து ஹேக் செய்வது சுலபமாகிறது.

அத்தகவல்களை யார் வேண்டுமா னாலும் பார்க்க முடியும். எந்த இட த்திலிருந்து வேண்டுமானாலும், எந்த ஒருநெட்வொர்க்கைப் பயன்படுத்தினாலும் ஹேக் செய் வது சுலபமாகிறது. 

தடுக்கும் வழிகள் (ways to stop Hacking)

வயர்லெஸ் கருவியின் அட்மின் பாஸ்வேர்ட்டை (Wireless modem admin password) நீங்கள் உடனடி யாக மாற்ற வேண்டு ம்.அதாவது உங்கள் நெட்வொர்க்கின் பெயர், அல்லது பொதுவான பெய ருடன் 12345 என இருக்கும் கடவுச் சொற்களை உடனடியாக மாற்றி வேறு புதிய கடவுச்சொல் லை பயன்படுத்த வேண்டும். 
உங்களுடைய வயர்லெஸ் கருவி பயன்படுத்தக்கூடிய  WPA /WEP  பாதுகாப்பு குறி யேற்றங்களை எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்க வே ண்டும். பயன்படுத்தும் நேரத் தை தவிர, மற்ற நேரங்களில் இணைய இணைப்பு துண்டித்துவிடுவது நல்ல து. 
 
வளாகத்தின் மையப்பகுதியில் ஒயர்லெஸ் அணுக்கள் இடத் தை வைப்பது நல்லது.சுவர் அல்லது சுவற்றின் மூளை களில் வைப்பதால் கசிவுகள் ஏற்பட்டு அதன் மூலம் உங்களு டைய இணைய நெட்வொர்க்குகளை பிறர் எளிதாகப் பயன் படுத்த முடியும்.தற்பொழுது புதியதாக வெளி வந்துள் ள வைபை மோடங்களில் குறிப்பிட்ட கணினியின் ஐபி அட்ரஸ் மட்டும் கொ டுத்து இணையத்தை அணுகும் வழி முறைகளும், அதற்கான வச திகளும் வந்துவிட்டன.

அவ்வாறான வசதியுள்ள சாதனங்க ளில் குறிப்பிட்ட கணினி, மொபைல் மற்றும் டேப்ளட்களை மட்டுமே இணைந்து செயலாற்றத்த க்க வகையில் செட்டிங்ஸ் மா ற்றி அமைத்துக்கொள்ளலாம்.

இதன்மூலம் உங்களுடைய இணைய இணைப்பை மற்ற வர்கள் பயன்படுத்த முடியாம ல் செய்வதோடு, இடையில் உங்களுடைய கணினியை வேறுயாரும் அணுகி நாசவேலை கள் செய்வதையும் தடுக்க முடியும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: