Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘குட் மார்னிங்’ சொல்லாதீங்க‌! இனி ‘ஜெய் ஹிந்த்’- சொல்லுங்க !

இனி ‘குட்மார்னிங் சொல்லாதீங்க‌ – ‘ ஜெய்ஹிந்த் ‘- சொல்லுங்க! வெள்ளைக்காரர்கள் சொல்லிக் கொடுத்த’ குட் மார்னிங்’ இனி சொல்ல வேண்டாம், இதற்கு பதி லாக அனைவரும் ஜெய்ஹிந்த் சொல்ல வேண்டும் என நம் இந்திய ராணுவத்திற்கு தளபதி பைக்ராம் சிங் கட்டாய உத்தரவு பிற ப்பித்துள்ளார். இந்த உத்தரவு இன்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வந்தது. ராணுவ த்தில் சிப்பாய் முதல் தளபதிகள் உள்பட அனைத்து ஊழியர் களும் குட்மார்னிங்குக்கு குட் பை சொல்லி, ஜெய்ஹிந்த் என ஒருவரை

ஒருவர் மரியா தை செலுத்திக்கொண்டனர். சுதந்திர போராட்டக் காலத்தின் போது முழங்கிய முழக்கம் இந்தியர் களை உணர்ச்சி பொ ங்க வைத்த வாசகம்தான் ‘ ஜெய் ஹிந்த்‘. உள்ளத்தின் ஆழ் மனதில் இருந்து வெள்ளைய ர்கள் எதிர்ப்பு குரலாக இந்த கோஷம் எழுப்பியபோது அனைவருக்கும் ஒரு உற்சாகமும், அதே நேரத்தில் ஆங்கிலே யரை கிலியடையசெய்யவும் ‘ஜெய் ஹிந்த் ‘-ஒலித்தது. இந்த வாசகம் மீண்டும் உயிர்பெறுகிற து ராணுவத்தின்மூலம், அதாவது ராணுவ தளபதி பைக்ராம்சிங் பிறப்பித்துள்ள உத்தரவில்; ராணு வ ஊழியர்கள் அனைவரும் குட் மார்னிங், குட் ஆப்டர்னூன், போ ன்ற வார்த்தைகளை பய ன்படுத்த வேண்டாம். இதற்கு பதிலாக ‘ ஜெய்ஹிந்த் ‘- என்றே மரியாதை செலு த்த வேண்டும். எந்தவொரு பணி துவங்கும் போதும் ‘ ஜெய் ஹிந்த் ‘-என்று சொல்லிக் கொள்ள வேண்டும், இதே போல் எந்தவொரு பணி முடியும்போது பாரத் மாதாக்கி ஜெ என்று சொல்லிக் கொள்ள வேண்டும். இவ்வா று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது. இதுபோன்று நாம் உச்சரிக்கும் போது ஒருவருக் கொருவர் இடைய உள்ள கருத்து வேறுபாடுகள், மற்றும் மதச் சார்பின்மை உருவாகும். மேலும் இது தேசப்பற்றை வளர்க்கும் என தளபதி தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு இன்றுமுதல் உடனடியாக நடை முறைக்கு வந்தது. இந்த தகவல் பாதுகாப்பு துறை அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தது.

– துரை ரவி

Leave a Reply