Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (24/11/13): அது போலத்தான், மனைவியுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும்போதும்…

எனக்கு வயது 34. நான் +2 படித்தவள். படிக்கும்போதே, என் கணவர் வலிய வந்து என்னை காதலித்தார். பெற்றோரின் சம்ம தத்துடன், +2 முடித்ததும் கல்யா ணமும் செய்துகொண்டார். மண முடித்து 15 வருடங்கள் ஆகிவிட் டன. தற்போது, எனக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர். 

என் கணவர் சபல புத்திக்காரர். திருமணமான மூன்றாம் ஆண்டி ல், ஒரு பெண்ணுடன் பழகினார். அது, எனக்கு தெரிய வந்து, சண் டை போட்டு, அந்த பெண்ணின் வீட்டிற்கு போவ தைத் தடுத் தேன். இது முடிந்து, மூன்று வருடங்களுக்குப் பின், மீண்டும் இப்படி ஒரு பழக்கம் எனக்குத் தெரிய வர, சண்டை போட்டு ரகளை செய்ததில்,

‘நான் பேச மட்டும்தான் செய்வேன்; தப்பா க நடக்கமாட்டேன். என்னை ஏன் வீணாக சந்தேகப்படுகிறாய் ?‘ எனக் கூறி, என்னை அடக்கி விட்டார். 

இடையில், பிசினஸ், அது இது என்று, ஆறு லட்சத்திற் கும் மேல் தொலைத்து, பின், இரண்டு வருடம் குடும்பத் தை பிரிந்து, வெளிநாட்டு க்கு சென்று சம்பாதித்து வந்தார். 

இதெல்லாம் முடிந்த பின்னர், சுமூகமாக காலம் சென்று கொ ண்டிருக்கையில், 18 மாதங்களுக் கு முன், ரொம்ப மோசமான பெண் ணிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொ ண்டார். இதனால், ஒரு மாதம், குடும்பத்தில், பெரிய யுத்தமே நடத் தி, பின், என் சொந்தக்காரர் ஒருவ ர் எடுத்துச் சொல்லி, அங்கு போவ தை நிறுத்தினார். அங்கு போவ தைத்தான் நிறுத்தினாரே ஒழிய, அவளை இன்னும் இவர் மறக்கவில்லை என்று நினைக்கிறே ன். 

அதிலிருந்து தொடர்ந்து, எங்கள் குடும்பத்தில் பிரச்னை. எதற் கெடுத்தாலும், சண்டை. குழ ந்தைகளுக்காகத்தான், நான் உயிரோடு இருக்கிறேன். இதையெல்லாம் பார்த்து, குழந்தைகள், மனதளவில் பாதிக்கப்படுவார்களோ என் று பயமாக உள்ளது. 

இப்பொழுது, சரிவர பேச்சுவார்த்தைகூட இல்லை. இதனால், வாழ்க்கையை வெறுத்து, சாகவும் துணிந்தேன். ஆனால், என் குழந்தைகளை நினைத்துதா ன், நான் இன்னும் உயிரோடு ம், அவரோடும் இருக்கிறேன். என் பிறந்த வீட்டிலும் அவ்வள வு வசதியில்லை. என்னால், நிம்மதியாக ஒரு நிமிடம்கூட வீட்டில் இருக்கமுடியவில் லை. எங்காவது கண்காணாம ல்போய் விடலாமா என தோ ன்றுகிறது. வர வர என் கணவரை பார்க்கவோ, பேசவோ பிடி க்கவில்லை. அவர் எதுபேசினாலும், எனக்கு, அது பொய்யா கவே தோன்றுகிறது. 

இந்த சமீபத்திய சக்களத்தியை, தினமும், வீதியில் பார்க்க வேண்டி யுள்ளது. பார்க்கும் போதெல்லாம், என் உணர்வுக ளை கட்டுப்படுத்த முடியவில்லை. 

தனிமையில், இதைப் பற்றியே சிந் திப்பதால், மனநோயாளியாக மா றி விடுவேனோ என்று பயமாக உள்ளது. ஆறுதல் கூற கூட ஆள் இல்லாமல், தனியே உட்கார்ந்து அழுகிறேன். தனிமையி ல் இருக்கும் போது, என்னையே நான் வருத்திக் கொள்ள வே ண்டும் போல் உள்ளது. 

எனக்கு தெரிந்து, அவருக்கு, நான், தாம்பத்தியத்தில் எந்தக் குறையும் இதுவரை வைத்ததில்லை. 

என் வாழ்க்கையில் நான் செய்த ஒரே தப்பு, இவர் என்னை காதலிக்கு ம்போதே, இடையில், நான், இவரை கல்யாணம் செய்ய மறுத்தது தான் காரணம். பக்கத்து வீட்டுக்காரர் ஒரு வர், சாதாரணமாக பேசி பழகியவர், கடைசியில், ‘நீ, என்னை கல்யாணம் செய்துகொள்ளாவிட்டால், செத்துவிடுவேன்’ எ ன்று கூறினார். 

அதற்கு பயந்துதான், நான், என் கணவரை மறுத்தேன். ஆனா ல், என் சகோதரர் என்னென்ன மோ சொல்லி, எதிர்காலத்தைப் பற்றி பயமுறுத்தி, இவருக்கே திருமணம் செய்து வைத்தார். கல்யாணமானபின், இதற்காக, பலமுறை இவரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறேன். இன்னும்கூட, என் மனசாட்சிப்படி, ‘அது தப்பு’ என்று உணர்ந்து, மனதிற்குள், ‘பீல்’ பண்ணுகிறேன். 

என்னை உங்கள் சகோதரியாக நினைத்து, பதில் அளிக்கவும். 
அன்புடன்,
உங்கள் சகோதரி.

அன்பு சகோதரி, 

உன் கடிதம் கிடைத்தது. தாலி கட்டிய கணவன், பல பூக்களை நாடும் வண் டாக இருந்தால், சமாளிப்பது கஷ்டம் தான். 

ஆனால், சகோதரி, உன் கணவர் இப்ப டி நடந்து கொள்வதற்கானக் காரணத் தை, நீ கண்டுபிடிக்க வேண்டுமல்லவா .. நல்ல மனைவி, காதலித்துக் கல்யா ணம் செய்து கொண்டவர்; நீ சொல்வதுபோல, தாம்பத்ய சுக த்திலும் எந்தக்குறைவும் வைக்கவில்லை. அப்புறம் ஏன், உன் கணவர், இப்படி, ஒவ்வொரு பெண்ணையும் தேடி அலைய வேண்டும்? அதுவும் மோசமானப் பெண்களாய் பார்த்து தொ டர்பு வைத்துக்கொள் ள வேண்டும்? 

இங்கே நான் சொல்வதை, உன்னால் எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்ளமுடியுமோ தெரியவில்லை. ஆண் ஆனாலும், பெண் ஆனாலும் வெறும், ‘செக்ஸ்’ மட்டுமே முழுமையான வாழ்க்கையா காது. இது, நிறைய பேருக்குப் புரிவதில்லை. ‘செக்ஸ்’ சுக்கு முன்பும், பின்பும் அன்பான அரவணைப்பு, ஆதரவான பேச்சு, இனிமையான சிரிப்பும், விளையாட்டும் தேவை.- எல்லாவ ற்றுக்கும் மேல், ‘எதுவானாலும், இவரிடம் அல்லது இவளி டம் பேசலாம்’ என்கிற நம்பிக் கையும் வேண்டும் கண்ணம்மா . 

பெண், காதலில்லாத வாழ்க்கை யை ஒப்பேற்றிவிடுவாள். ஆனால், ஆண்களால் அது முடியா து. காதல் என்றால், சினி மாக்களில் வருவதுபோல, காட்டிலு ம், மேட்டிலும் ஓடி, ‘உயிரே… உயிரே…’ என்று பாடுவது என் று நினைக்காதே… உன் கணவனுக்கு, ஒரு நல்ல சிநேகிதி வே ண்டியிருக்கிறது. நீ திருமணத் துக்கு முன், காதலியாக இருந்த வரையில், நல்ல சிநேகிதியாக இருந்திருப்பாய். அப்போது, உன் காதலருடைய சிரிப்பும், பேச்சு ம், அச்சுப்பிச்சு நடவடிக்கைகளு ம் உனக்குப் பிடித்தமானவைக ளாக இருந்திருக்கக் கூடும். திரு மணத்திற்கு பின், அவர், பொறு ப்புள்ள குடும்பத் தலைவராக இருக்க வேண்டும் என்று, நீ நினைத்திருப்பாய். பெண்களிடம், அவர் சிரித்துப்பேசினால் உனக்கு எரிச்சலும், கோபமும் வந்தி ருக்கும். 

ஆனால், அவருக்கோ, தன் எண்ணங்களை, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள (அவை, கீழ் த்தரமானதாகக்கூட இருக்கலா ம்) ஒரு துணை, தேவையாக இருக்கிறது. உன் கணவருக்கு மட்டுமல்ல, பல ஆண்களுக்கு ம், இது மாதிரி, ‘டூயல் ரோல்’ போட வேண்டிய நிர்ப்பந்தம் வாழ்க்கையில் ஏற்படுவதுண்டு. 

இதற்கு காரணம், மனைவியிடம், தன் வக்கிர ஆசைகளை, எண்ணங்களைப் பகிர்ந்துகொள் ள பயம்; காம்ப்ளக்ஸ்… அதனால் தான், இவர்கள், தன் மனைவியை விடவும் பல படிகள் கீழேயுள்ள, மோசமான நடவடிக்கைகள் கொ ண்ட பெண்களை நாடிப் போகின் றனர். 

ஏன் என்றால், பெண்டாட்டியிடம் கொச்சையாக பேச முடியாது; குடித்துவிட்டு ரகளை பண்ண முடியாது; அசிங்கமாக நட ந்து கொள்ள முடியாது. 

காரணம், பெண்டாட்டி, அவனது குடும்பத்தின் தலைவி; கோவிலின் மூல விக்கிரகம். இந்த உறுத்தல், அவனுள், சதா ஊகா முள்ளாய் உறுத்திக் கொண்டே இருக்கும். 

அலுவலகம் முடிந்து வீடு வந்து, மனைவிதரும் அர்ச்சனையுடன், காபியையும் குடித்து, காய்கறி வாங்க கடைக்குப்போகும் ஆண்களி ல் பலர், காய்கறிக் கடையில், பெண் வியாபாரிகளிடம்தான், வாடிக்கை யாக வியாபாரம் வைத்துக் கொள்வ ர். அந்தப் பெண்களிடம் சிரித்துப் பேசும்போதும், ரசக்குறை வான ஜோக்குகளை உதிர்க்கும்போதும், ‘அப்பாடா’ என்கிற, விடு தலை உணர்வு இவர்களுக்குக் கிடைக்கிறது. 

அதுபோலத்தான், மனைவியுடன் படுக்கையைப்பகிர்ந்து கொ ள்ளும்போதும்… 

பெண்டாட்டி, ஏதோ ஒரு கடுப்பில், சுவரைப்பார்த்து திரும்பி ப்படுத்தால், ஓரளவுக்குமேல், கணவனால், அவ ளை நிர்பந்த ப்படுத்த முடியாது. 

இதுவே, விலை மகளிடம் அப்படியில் லை. திட்டலாம்… ‘காசு கொடுக்கறே னில்ல’ என்று பேசலாம். 

புரிகிறதா… இதுபோன்ற சுவர், கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் விழாமல் இருக்க வேண்டுமென்றால், அதட்டியோ, ஆத்திரப்பட்டோ, அழுதோ பிரயோ ஜனம் இல்லை. 

கணவனை ஒரு சிநேகிதனாக நட ந்து. நீங்கள் இருவரும் தெருவில் நடக்கும்போது, உன் கணவ ன், உனக்குத்தெரியாமல், மற்ற பெண்களை ஓரக் கண்ணால் பார்ப்பதை விடுத்து, ‘ஏ… அந்தப் பச்சைப் புடவை அழகா இரு க்கா இல்லே’ என்று, மனசு விட்டு, உன்னிடம் பகிர்ந்து கொள் ள வை. 

அதெப்படி என்னைப் பக்கத்துல வச்சுகிட்டு, அடுத்தவளை, ‘சைட்’ அடிக்கலாம்,…’ என்று நீ அவரிடம் பாய்வதற்கு பதில், ‘ஆமா… அழகா இருக்கா… அவ கூடப் போறானே… அசப்புல பார்த்தா ஷாருக்கான் மாதிரி இல்லே…’ என்று, நீயும் வெளிப் படையா பேசு. 

இப்படியொரு வாழ்க்கை அமைந்தா ல், எந்தவொரு ஆணும், தனக்கென, ரகசியமாக இன்னொரு துணையை வைத்துக் கொள்ள மாட்டான். முய ற்சி செய்து பாரேன்… 

அதை விடுத்து, பழைய காதல், அது இது என்று, ஏன் அநா வசியமாக மனதை குழப்பிக் கொள்கிறாய். 

கணவனுக்கு உண்மையான அன்பைக் கொடு; அன்பினால் ஆகாதது, எதுவுமே இல்லை. 

— அன்புடன்
சகுந்தலா கோபிநாத்.
(நன்றி – தினமலர் வாரமலர் நாளிதழ்)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: