Wednesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“‘அந்த’ படத்தில் நடித்தது ஒரு மோசமான அனுபவம்!?” – நடிகை விஜயலட்சுமி

காதலுக்கு கோட்டை கட்டிய அகத்தியன் மகள் விஜயலட்சுமி. அச்சு அசல் தமிழ் நடிகை. சென்னை-28ல் அறிமுகமாகி மெல்ல அடியெடுத்து சினி மாவில் நடந்து வருகிறவர். தற்போது ரெண்டாவது படம், வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிப்போமடா படங்களில் நடித்து வருகிறார். 2014ம் ஆண்டு இந்த மூன்று படங் களும் ரிலீசாக இருக்கிறது. மேலும் 2 படங்களில் நடிக்க இரு க்கிறார். விஜய லட்சுமி தினமலர் நாளிதழுக்கு அளித்த சிறப் பு பேட்டி:

* சினிமாவுக்கு வந்து 5 வருடங்கள் கடந்து விட்டது. ஆனால் இதுவரை 7 படங்களில்

மட்டுமே நடித்திருக்கிறீர்கள். ஏன் இந்த தாமதங்கள்?

நான் சினிமா நடிகையாவேன்னு நினைக்க வே இல்லை. திடீர்னு சென்னை-28-ல ஜாலிக்காக நடிக்கப்போக இப்போது நடி கையாகிவிட்டேன். சினிமா எனது உயிர், பேஷன், சினிமா இல்லாமல் நான் இல்லை என்றெல்லாம் சொல்லமாட்டேன். என்னை த்தேடி வாய்ப்பு வந்தால் மட்டுமே நடிக்கி றேன். யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்பதி ல்லை. அதற்காக மெனக்கெடுவதும் இல் லை. 5 வருடத்தில் 7 படங்கள் நடித்தவள், இப்போது ஒரே நேரத்தில் 3 படங்கள் நடிக்கிறேன், எல்லாம் நடக் கும்போது நடக்கும்.

* தமிழ் நடிகை என்பதால்தான் வாய்ப்பு குறைவாக வருவதா க நினைக்கிறீர்களா?

கண்டிப்பாக அப்படி நினைக்கவே இல்லை. சினிமாவுக்கு ஏது மொழி வித்தியாசம். தெலுங்கு, மலையாள வாய்ப்புகள் வந்தபோது நான் நடிக்க வில்லை. தமிழ்போதும் என்று இருந் து விட்டேன்.

* கவர்ச்சியாக நடிக்க தயங்குவது காரணமாக இருக்குமா?

நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று எப்போதும் சொன் னதில்லையே. கதைக்கு தேவையான அளவுக்கு கிளாமராக நடிக்க தயார். ஒரு விஷயம் தெரியுமா, விஜயலட்சுமி ரொம் ப அமைதியான பொண்ணு புடவை தவிர வேற எதுவும் அணி யாதுன்னு நிறைய பேர் நினைச்சிக்கிட்டிருக்காங்க. ஆனா நான் விதவிதமான மார்டன் உடைகளைத் தான் விரும்பி அணிவேன். சினிமாவில் நடித்த கேரக்டர்கள் அடக்க ஒடுக்க மாக அமைந்து விட்டதால் இமேஜும் அப்படி யே ஆகிவிட்டது.

* அதே நேரம் அதே இடம் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடி த்தீர்களே?

அந்த படத்தில் நடித்தது ஒரு மோச மான அனுபவம். என்னிடம் அவர்க ள் சொன்ன கதைவேறு, எடுத்த கதை வேறு. அதனால் என் இமேஜ் கூட கொஞ்சம் பாதிச்சிடுச்சின்னு நினைக்கிறேன்.

* வெங்கட் பிரபு டீமிலிருந்து விலகிட்டீங்களே?

சென்னை-28க்கு பிறகு சரோஜாவுல நடிச்சேன். அடுத்தும் என க்குன்னு கேரக்டர் அமையும்போது கண்டிப்பா கூப்பிடுவாங்க .

* சுல்தான் தி வாரியர் டிராப்பானது ல வருத்தம்தானே?

அப்புறம்… இருக்காதா. ரெண்டு பட த்துல நடிச்ச நிலையில் அடுத்து சூப்பர் ஸ்டாருடன் நடிக்க சான்ஸ் கிடைச்சப்போ வானத்துல மிதக்கி ற மாதிரி இருந்துச்சு. அவரோட நடிச்ச அந்த ஒரு வாரமும் என் வாழ்க்கையில மறக்க முடியாத அனுபவம். படம் டிராப் ஆனபோது ரொம்ப வருத்தப்பட்டேன். ஆனா இப்போ அதை யெல்லாம் தாண்டி வந்துட்டேன்.

* வனயுத்தம் படத்துல வீரப்பன் மனைவி முத்துலட்சுமியா நடிச்சீங்க. ஆனால் அந்த சீனையெல்லாம் கட் பண்ணிட்டாங்களே?

ஆமாங்க. அதுவும் எனக்கு வருத்தம்தான். ரொம்ப ஒர்க்கவுட் பண்ணி. அந்த அம்மா வோட மானரிசங்களை கத்துக்கிட்டு அடர் ந்த காட்டுல நடிச்சேன். ஒரு சீன்கூட படத் துல வராததது வருத்தம்தான். ஆனால் நான் நடிச்ச அத்தனை சீனும் கன்னட த்துல இருந்திச்சு. அந்த ஸ்டேட்டுல இருந்த நிறைய பேர் போன் பண்ணி பாராட்டினா ங்க.

* இப்போ நடிச்சிட்டிருக்குற படம் பற்றி சொ ல்லுங்களேன்-?

வெண்ணிலா வீடு அடுத்த ரிலீசாகுற படம். கிராமத்தில் மாம னை விரட்டி விரட்டி காத லிச்சு கல்யாணம் பண்ணி நகர்புற வாழ்க் கைய சமாளிக்க முடியாம தவிக்கிற பெண் கேரக்டர். கிராமத்து பெண்ணா ஒல்லியா நடிச்சிருப்பேன். நகரத்து பொண்ணு வெயிட் போட்டு ஒரு குழந்தைக்கு அம்மாவா நடிச்சி க்கேன். ரெண்டாவது படத்துல வித்தியாசமான கேரக்டர். அந் த கேரக்டர் பற்றி விரிவா சொல்ல முடியாது. ஆடாம ஜெயிப் போமடா பக்கா காமெடி படம். விஜய் சேது பதி தவிர சூது கவ்வும் டீம் அப்படியே நடிக்குறாங்க.

* அப்பா அகத்தியன் மீண்டும் படம் டைரக் ட் பண்ண போகிறா ராமே? நீங்க அதில் நடிப்பீங்களா?

கூப்பிட்டா கண்டி ப்பா நடிப்பேன்.

* யாரையோ காதலிக்குறீங்க. கல் யாணம் பண்ணிக்கப் போறீங் கன்னு நியூ வருதே?

காதல்மேல நிறையநம்பிக்கைஇருக் கு. ஆனா அதைப்பற்றி வெளிப்படை யா சொல்லமுடியாது. கல்யாணத் தை வெளிப்படையாக எல்லோருக்கு ம் சொல்லித்தான் பண்ணுவேன். அதுக்கு ரெண்டு 3 வருஷம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: