இப்பகுதியில் கடந்த (22-11-2013 அன்று), சவால் எண்.22-ன் படி கொடுக்கப்பட்ட வாக்கியங்ளை, படித்தவர்கள் சுமார் 271 பேர் என்றாலும் கொடுக்கப்பட்ட அந்த வாக்கியங்களில் எது சரி? எது தவறு? என்பதை சுட்டிக்காட்டியவர்க
ளது பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
1) திரு. ஜோசப் அருளானந்தன்
2) திரு. தீனதயாளன் (ராஜு), ஐதராபாத்
3) திரு. ராமமூர்த்தி
4) திரு. எஸ்.கே.எம். வண்ணன்
5) திரு. அப்துல்
6) திரு. எஸ். ரூபன்
7) செல்வி வித்யா வழக்கறிஞர் (கோயம்புத்தூர்)
8) திரு. கே. மகேஸ்வரன்
9) பெயர் வெளியிட விரும்பாத நபர்
மேற்காணும் இந்த 9 பேரையும் விதை2விருட்சம் இணையம் சார்பாகவும், பலத்த கரவொலி மற்றும் குரலொலிகளோடு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இதோ இன்றைய வாக்கியங்கள்:
1.1) கலைஞனும் கவிஞனும் போற்றும் வித்தகண் அவன், தன்னை படைப்பவனுக்கு நிகறாக கருதியவன், கோள மயிலோடு ஒரு கோப்பையில் குடியிருந்த பிரம்மனவன்
1.2) கலைஞனும் கவிஞனும் போற்றும் வித்தகன் அவன், தன்னை படைப்பவணுக்கு நிகராக கறுதியவன், கோல மயிலோடு ஒரு கோப்பையில் குடியிருந்த பிறம்மனவன்
1.3) கலைஞனும் கவிஞனும் போற்றும் வித்தகன் அவன், தன்னை படைப்பவனுக்கு நிகராக கருதியவன், கோல மயிலோடு ஒரு கோப்பையில் குடியிருந்த பிரம்மனவன்.
***
2.1) தண்ணிகரில்லாக் கவிஞனவன், தனது கற்பனையிலே வற்றாத ஊற்றாக ஊறும் பண்களால், மனித மணங்கள் பலதை கொள்ளைக் கொண்ட கொள்ளைக்காரனவன்
2.2) தன்னிகறில்லாக் கவிஞனவன், தனது கற்பனையிலே வற்றாத ஊற்றாக ஊறும் பண்களால், மனித மனங்கள் பலதை கொள்ளை கொண்ட கொள்ளைக்காரனவன்
2.3) தன்னிகரில்லாக் கவிஞனவன், தனது கற்பனையிலே வற்றாத ஊற்றாக ஊறும் பண்களால், மனித மனங்கள் பலதை கொள்ளைக் கொண்ட கொள்ளைக்காரனவன்.
***
3.1) பன்கள் பல படைத்தே, புன்பட்டாரை தேற்றிய மருத்துவனவன். கண்ணனை, தன் கண்களிலும் கற்பனையிலும் தாங்கி, கவிதைகளில் நிரப்பிய கவி மன்னனவன்
3.2) பண்கள் பல படைத்தே, புண்பட்டாறை தேற்றிய மருத்துவனவன். கண்ணனை, தன் கண்களிலும் கற்பனையிலும் தாங்கி, கவிதைகளில் நிறப்பிய கவி மன்னனவன்
3.3) பண்கள் பல படைத்தே, புண்பட்டாரை தேற்றிய மருத்துவனவன். கண்ணனை, தன் கண்களிலும் கற்பனையிலும் தாங்கி, கவிதைகளில் நிரப்பிய கவி மன்னனவன்.
***
கீழ்க்காணும் மூன்றில் எந்த திருக்குறள் சரியாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டவும்.
4.1) திணைத்துணை நன்றி செயினும் பணைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்
4.2) தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொல்வர் பயன்தெறி வார்
4.3) தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
***
கீழ்க்காணும் பாடல் வரிகளில் எந்த பாடல்வரி சரியானது?
5.1) நான் பலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன், என் மகராணி உனை காண ஓடோடி வந்தேன்!
5.2) நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன், என் மகராணி உணை காண ஓடோடி வந்தேன்!
5.3) நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன், என் மகராணி உனை காண ஓடோடி வந்தேன்!.
***
ஐதராபாத்தில் வசிக்கும் திரு. தீனதயாளன் (ராஜு) அவர்கள், மேற்காணும் சவால் எண்.23-க்கு எது சரி என்பதை, விதை2விருட்சம் இணையத்தில் மின்னஞ்சல் மூலமாக சுட்டிக்காட்டி, அதற்கான சரியான பொருளையும் அவரது கைப்பட எழுதி அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய பதில் இதோ உங்கள் பார்வைக்கு . . .
all nos of last one is correct… which answer for all is 3
1 – 1.3
2 – 2.3
3 – 3.3
4 – 4.3
5 – 5.3
1-3
2-3
3-3
4-3
5-3
1:3, 2:3, 3:3, 4:3, 5:3. ஆகியவையே சரியானதாகும்.
1.3),2.3),3.3),4.3),5.3)
1.3),2.3),3.3),4.3),5.3)
1.3),2.3),3.3),4.3),5.3)
1.3),2.3),3.3),4.3),5.3)
1.3 – 2.3 – 3.3 – 4.3 – 5.3
1.3 ,2.3 ,3.3 ,.4.3 ,.5.3 is the correct wordings