Monday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்தியத்தில் மனைவிக்குப் பூரண சுகம் தர இயலாத ஆணா நீங்கள்?

தாம்பத்தியத்தில் மனைவிக்குப்பூரண மகிழ்ச்சி தர இயலாம ல் தவிக்கும் ஆணா? நீங்கள்! கவலையைவிடுங்கள் உங்கள து ஆண்மைத் தன்மையில் உள்ள குறைபாடு நீங்க..! சித்த‍ மருத்துவத்தில் சிறப்பான தீர்வு உண்டு என்கிறார்கள் சித்த‍ மருத்துவர்கள்.

சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண் மைத்தன்மையில் உள்ள

குறைபாடுகளின் காரணமாக, மனைவிக்குப் பூரண மகிழ்ச்சி தர இயலாமல் போகும். இன் னும் சிலருக்கோ, விந்தணுக் களின் எண்ணிக்கைக் குறைபாடு, உரிய எழுச் சி ஏற்படாமல் போதல், பாலுணர்வு வேட்கைக் குறைதல் போன்ற பல சிக்கல்களும் இருக்கக் கூடும். அவர்கள் எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. பாலியல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பல்வேறு மூலிகைகள் சித்த மருத் துவத்தில் உள்ளன.

காரணங்கள்:

ஹார்மோன் மாறுபாடுகள், ஆண் இனப்பெருக்க உறுப்பி ல் ஏற்படும் பாதிப்புகள், குரோமோசோம் மாறுபாடு கள், அம்மை க்கட்டு, காச நோய், பால்வினை நோய்க ள், மனநிலை மாறுபாடுகள், புகைபிடித்தல், மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பாதிப்புகள், கதிரியக்கத்திற்கு உட்படுதல் மற்று ம் இறுக்கமான உள்ளாடை அணிதல் போன்றவை.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

நிலப்பனைக் கிழங்கைப் பொடித்து, ஒரு டேபிள் ஸ்பூ ன்  எடுத் து பால், சர்க்கரை கலந்து உண்டுவரலாம்.

பூனைக்காலி விதை, நெல்லிவற்றல் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, ஒரு ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.

அமுக்கரா கிழங்குப் பொடி யுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து ஒரு ஸ்பூன் சாப்பி டலாம்.

நிலப்பூசணிக் கிழங்கின் சாறுடன் பால், சர்க்கரை சேர்த்து உண்ணலாம்.

ஓரிதழ் தாமரையை அரைத்துப்பாக்கு அளவு எடுத்துப்பாலில் கலந்து அருந்தலாம்.

தாமரைப்பூவின் மகரந்தப் பொடியுடன் சர்க்கரை, தேன் கல ந்து சாப்பிடலாம்.

சமஅளவு நீர்முள்ளி விதை, மாதுளம் விதையைப் பொ டித்து, ஒரு ஸ்பூன் வெண் ணெயுடன் கலந்து சாப்பிட லாம்.

துவளைப்பூ, முருங்கைப்பூ இரண்டையும் கைப்பிடி எடுத்து நெய், வெங்காயம் சேர்த்து சமைத்து உண்ணலாம்.

முள்முருங்கை இலையை நெய் , அரிசி மாவு சேர்த்துச் சமைத் துச் சாப்பிடலாம்.

வில்வப் பிசின், வாதுமைப் பிசின் சம அளவு எடுத்துப் பொடி த்து அதில் கால் ஸ்பூன் எடுத்துப் பால் சேர்த்து குடிக்கலாம்.

நாவல் வேர்ப்பொடி ஒருஸ்பூன் எடுத்து, நான்கு பங்கு நீர் சேர் த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.

சேர்க்க வேண்டியவை:

முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, முருங்கைப் பிஞ்சு, மாதுளம்பழம், மாம் பழம், பலாப் பிஞ்சு, பலாக் காய், புடலங் காய், எலுமிச் சம்பழம், பசலை, அரைக்கீ ரை, கொத்துமல்லிக் கீரை, கோதுமை, ஜவ்வரிசி, உளுந்து, வெந்தயம், நிலக் கடலை.

தவிர்க்க வேண்டியவை:

அதிகக் காரம், துவர்ப்பு மற்றும் கசப்புள்ள உணவுகள், சிக ரெட் மற்றும் போதைப் பொருட்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: