கடந்த ஆகஸ்டு மாதம் ரிலீசான தலைவா படத்தில் விஜய்யு டன் அமலாபால் நடித்தார். தற்போது ஜெயம் ரவியுடன் ‘நிமிர்ந்து நில்’, தனுசு டன் ‘வேலை இல்லா பட்டதாரி’ படங்களி ல் நடிக்கிறார். தெலுங்கில் ஒரு படத்திலு ம் மலையாளத்தில் இரண்டு படங்களிலு ம் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே நடிப் பேன் என்று அமலா பால் அடம்பிடிப்பதாக செய்திகள் வந்தன. இதனை அவர் மறுத் துள்ளார். இது குறித்து அமலாபால் கூறிய
தாவது:–
பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று யார் சொன்னது. நான் தமிழ், தெலுங் கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் நடிக்கிறேன். எனக்கு கதைதான் முக்கியம். நல்ல கதையம்சம் உள்ள படமாக இருந்தால் உடனே ஒப்புக்கொள்கிறேன். பெரிய ஹீரோ வுடன்தான் நடிப்பேன் என்று நான் யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை. கதை பிடித்து இருந்தால் புது ஹீரோக்களுடனும் நடிப்பேன் இவ்வாறு அமலா பால் கூறினார்.