Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

செக்கச்சிவப்பு நிற பெண்களையே ஆண்கள் ஏன் விரும்புகிறார்கள்?

எனக்கு கொஞ்சம் கலரான பொண்ணு பாருங்க பெண் தேடும் படலம் ஆரம்பித்து விட்டால், பல மாப்பிள்ளைகளின் முக்கிய க் கோரிக்கை இதுதான். குணம் , கல்வி, குடும்ப பின்னணி என் று வாழ்க்கைக்கு அவசி யமான எத்தனையோ இருக்க, சிவப்பு நிறத்தில் ஏன் மோகம் அதிகமா க இருக்கிறது. இது ஒருகுழந் தை மனபான்மை என்கிறா ர்கள், உளவியல் நிபுண ர்கள்.

டீன்ஏஜ் பருவத்தில் பெண்களுக்கு சிவப்பு நிற சருமத்தின் மீது ஆசை வருகிறது. ஆண்களுக்கு உயரமாக வளர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. பெண், தனக்கு

வரும் கணவன் திடகாத்திரமாகவும், உயரமாகவும், அழகாக வும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள். ஆணோ, தனக் கு துணைவியாக வருபவள் அழகில் சிற ந்தவளாக, அதுவும் செக்கச்சிவந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கி றான்.

மனோதத்துவ ரீதியாக இப்படி நிறம், உயரம் போன்றவற்றில் அக்கறை கொள் வதை காம்ப்ளக்சன் என்று கூறுகிறார்க ள்.

சமுதாயத்தில் இயல்பாகவே உடல்தோற்றத்திற்கு மிகுந்த மதிப்பு அளிக்கபடுகிறது. ஒரு குழந்தை பிறந்ததும் ஆணா, பெண்ணா என்று கேட்ட மறுநிமிடம் குழ ந்தை கறுப்பா, சிவப்பா? என்பது தான் அடுத்த கேள்வியாக இருக்கிறது. திரும ண ஊர்வலம் நடந்தாலும், பெண் நல்ல நிறமாக இருக்கிறாளா? என்பது பற்றிய பேச்சு எழுவதை பார்க்கிறோம்.

இயல்பாக நமது மனம் இல்லாத ஒன் றை பற்றி ஏங்கும். அதை எப்படியாவது பெற வேண்டும் என்றும் விரும்பும்.

மேனி நிறத்தை மெருகூட்டுவதாக நிறை ய விளம்பரங்கள் வருவது பெரும்பாலானவர்களுக்கு சிவந்த தேகத்தில் இருக்கும் அக்கறையை எடுத்துக் காட்டும் சிறந்த உதாரணமாகும். உண்மையிலேயே எந்த பொருளும் இயல்பான வண்ணத் தை மாற்றிவிடாது என்பது எல்லோரு க்கும் தெரியும். ஆனாலும் அதன்மீது உள்ள ஏக்கத்தால் அத்தகைய பொருட் களை உபயோகபடுத்தத் தொடங்குகி றோம். அப்படி நிறம் மாறிவிடுவது நிஜ மென்றால் உலகில் ஒரு கறுப்பு மனித னையும் காணவே முடியாது. ஏக்கம் கொண்டவர்களின் மனம் சமாதானம் அடைவதற்கு இந்த தயாரிப்புகள் உதவு கின்றன அவ்வளவுதான்.

சிவந்த நிறத்திற்காக ஆசைபட்டு ஒவ்வொரு தயாரிப்புக்காக மாறுவது, பெண் தேடும்போதும் நிறத்தை காரணம் காட்டி மறுத்துவிடுவது என்று காலம் நகரும் போது ஒருவித சலிப்பும், மாற்ற இயலா த காரணத்தால் ஒருவித இயலாமையு ம் ஏற்படும். இது மன இறுக்கத்தைக் கொண்டு வரும். நீண்டநாள் பாதிப்பு கள் மனவியாதியாக பரிணமிக்கலாம்.

படிக்கும் பருவத்தில் அல்லது பணியாற் றும் பருவத்தில் ஏற்படும் இதுபோன்ற நிறத் தோற்ற மனபான்மை ஒருவரின் படிப்பு அல்லது முன்னேற்றத்தை பாதிப் படையச் செய்யும்.

பெற்றோர், குழந்தைபருவத்தில் இருந்தே தங்களது குழந்தை யின் தோற்றம், நிறம் பற்றி விமர்சனம் செய் வதை தவிர்த்து வளர் த்து வந்தால் இளம் பருவத்தில் இதுபோன் ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஒருவ ரை அழகு என்று கொ ண்டாடுவதும், மற்றவ ரை அழகற்றவர் என்று ஒதுக்கி வைப்பதும் பிற்காலத்தில் பிரச்சினைகளைத் தரலாம் என்பதால், பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: