Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருமண வாழ்வில் உங்க துணையை நிறைவாக, சந்தோஷமாக, வைத்துக்கொள்ள . . .

திருமண உறவில் தம்பதியர் இருவரும் ஒருவருக்கொருவர் சரி சமமான கவனி ப்பை தங்களுக்குள் கொடுக்க வேண்டியது அவ சியம். ஒரு கணவராக நீங்கள் கொடுக்கும் அன்பைக் காட்டிலும் அதிகமான அன்பை உங்கள் மனைவியிடமி ருந்து எதிர்பார்ப்ப து இயற்கை. உங்களையும், உங் களது தேவைகளையும் உங்கள் துணைவியாரும் சிறப்பாக செய்து வருவார். உங்களது மனைவியின் தேவைகளை நீங்கள் கவனித்துக் கொண்டால், அ

வர் உங்களை இன்னும் அதிக கவனத்துடன் பார்த்துக் கொள்வார். ஆதலால் திருமண வாழ்க்கையில் உங்களது மனைவியை நிறைவாகவும் சந்தோஷமா கவும்; வைத்து க் கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களது துணைவியார் உங்களுடனான உறவை மேம்படுத் திகொள்ள எவ்வளவு முயற்சி மேற்கொள்கிறார் என்பதை நீங்கள் கண்டி ப்பாக புரிந்துகொள்ள வேண்டும். சில சமயங்க ளில் உங்கள் மனைவியின் செயலை குறைவாக மதிப்பிட் டு விட்டு, காரணமின்றி மேலும் அவருடைய கவனம் வேண்டும் என்று நினைப்பீர்கள். கணவ ரை விரும்பும் மனைவியானவள் எப்பொழுதும் யாரும் எதிர்பார்ப்பதை விட அதிக கவனத்தை தங்கள் கணவருக்கு கொடு க்கவே விரும்புவார்கள். ஆதலால் நீங்கள் அவரிடம் எந்த அளவிற்கு கவனத்தை எதிர்பா ர்க்கிறீர்கள் என்று எதிர்பார்க் கும் முன்னரே தெரிந்திருத்தல் முக்கியமானதாகவும்.

கணவன் மனைவிஉறவு மிகவும் மென்மையான உறவாகும். மனைவி யிடம் அன்பை எதிர்பார்க்கும்போது, அதே அளவு அன்பை நீங்களும் அவளுக்கு கொ டுக்க வேண்டியது அவசி யம். நீங்கள் நோய்வாய்பட்டிருக்கும் போது உங்கள் மனைவி எப்பொழுதுமே அருகில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த் திருப்பீர்கள். அவர்களது அன்பார்ந்த மற்றும் தன்னலமற்ற கவனிப்புக்கு பதி லாக, அவள் உங்களுக்கு மிகவும் முக்கிய மானவள் என்பதை உணர்த்துமாறும் மற்றும் அவளை சந்தோஷமாக வைத்திருக்குமாறும் நீங்கள் செய்ய வேண்டிய குறை ந்த பட்ச செயலாகும்.

பொதுவாக பெண்கள் அதிகம் பேச விரும்புவார்கள். இவ்வா று தான் தங்களது இதய த்தை திறந்து பேசவும் மற்றும் உண ர்வுகளை பகிர்ந்து கொள்ளவும் செய்வார்கள். உங்களுடன் பேசுவதற்காக அவர்கள் எதை வேண்டுமானாலும் கொடுக்க முனைவார்கள். உங்களு டைய அன்பையும் மற்றும் அவளுக்கான நெருக்கமான உணர் வுகளையும் பகிர்ந்து கொண்டு மகி ழ்ச்சியுடன் பேசுங்கள்.

பெண்ணுக்குரிய அன்பையும், கவனிப்பையும் நீங்கள் பரிமாறும்போது தான், உங்க ளது பங்கை அவளிடம் நீங்கள் எதிர்பார்க்க முடியும். அவளின் தேவைகளையும் உணர்வுகளை யும் அனுதினமும் தெரிந்து கொள்ளுங்கள். திருமண உறவில் தனிமையை உணராதவாறு உங்கள் துணைவியை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

சில சமயங்களில் மனைவியர் காட்டும் அபரிமிதமான அன்பையும் அக் கறையையும் நீங்கள் உணருவதில்லை. நீங்கள் அவருக்கு முக்கியமா னவர் என்பதை உணர்த்தும் வகையில் அவர்கள் செய்யும் சிறு சிறு விஷயங்களையும் சற்றே கவனித்து, அவற்றை மகிழ்ந்து அனுபவியுங்கள்.

உங்களை கவனிப்பதில் இருந்தும் மற்றும் உங்களுடைய தேவைகளை கவனிப்பதில் இருந்தும் உங்களுடைய மனைவிக்கு சுதந்திரமும், ஓய்வும் அவசியம் தேவை. அவளை அவளது பெற்றோரின் வீட்டிற்கு வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது பெண்களுடன் இரவு நேரத்தை செலவிடவோ தொ டர்ந்து அனுப்புவதன்மூலமாக புத்துணர்வும் எழுச்சியும் அவளுக்கு கிடைக்கும். இச்செயலால் மேலு ம் மேலும் உங்களை அவர் சிறப்பாக கவனிப்பார்.

ங்கள் உறவில் குறைகள் ஏற்படும் ஒவ்வொரு முறையிலும் அவர்மீது கொண் டுள்ள அன்பையும், உணர் வையும் அவளிடம் வெளிப்படுத்துங்கள். இச்செயலால் நீங்கள் அவள் மேல் அக்கறை கொண்டுள்ளதை யும், அவளையும், அவளுடனான உறவையும் எப்போதும் நினைவில் வைத்திருப்பதையும் காண்பிக்க முடியும். அதிக கவனிப்பு உங்களுக்கு தேவையானால் அதையே அவளுக்கும் கொடுங்கள்.

திருமண வாழ்க்கையில் நீங்கள் எப்பொழுதும் உங்கள் துணைவியிடம் உண் மையாக இருக்க வேண்டும். இது மகிழ்ச்சியான உறவுக்கு உறுதியான அடித்தள த்தை ஏற்படுத்தும். உங்கள் மீதும், உங்கள் குணத்தின் மீதும் மனைவி நம்பிக்கை கொள்ளும் போது அவர் மிகுந்த அன்பையும், அக்கறையையும், கவனிப்பையும் வெளிப்படுத்துவார். ஏனெனில், அவர் காட்டும் அன்பு வீணாவதில்லை என்பதை அவள் உணர்ந்து கொண்டார்.

நெருக்கம் தங்கள் உறவில் பெரும் அதிசயங்களை உண்டு பண்ணும். நெருக்கமாக இருந்தால், அது உங்கள் மனைவியின் தனித்துவமான அன்பையும் அரவணைப்பை யும் அள்ளித் தரும். உங்களிருவரைப் பற்றியும் நன்றாக தெரிந்து கொள்ளவும், இருவரின் தேவைகளையும் தெரிந்து கொள்ளவும் நெருக்கமாக இருக்கும் நேரங்கள் உதவும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply