Friday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நினைப்பதை நடத்தித்தரும் ” மேற்கு முகப்பேர் ஸ்ரீகனகதுர்க்கா”

பூலோகம் வைகுந்தம் கைலாயம் ஒன்றாய் அமைந்த
நினைப்பதை நடத்தித் தரும்

மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனகதுர்க்கா

IMG_0151

பூலோகம் வைகுந்தம் கைலாயம் ஒன்றாய் அமைந்த 
நினைப்பதை நடத்தித் தரும் 

மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனக துர்க்கா

சென்னை பிரசாத் ஸ்டூடியோவின் ஒலிப்பதிவு கூடத்திலிரு ந்த

திரையில் அந்த காட்சி ஓடியது.

தேவாவின் இசையில்… அனுமந்துவின் குரலில் சந்திர கண் IMG_0010ணையனின் இயக்க‍த்தில் சிலையென்று யார் சொன்ன‍து.? என்று கணீ ரென்ற பாடல், பிரம்மாண் டமான அம்ம‍ன் முன் திரு. டெல்லி கணேஷ் அற்புத மாக நடித்த‍ காட்சியைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போனேன்.

ஆதி பராசக்தி படத்திலே எஸ்.வி.சுப்பையா பாடின சொல்ல‍ டி அபிராமி பாடல் மாதிரி இருக்கு சார்னு சொன்ன‍வுடன் எல் IMG_0013லாம் அம்பாள் கருணைதான்! எல் லாம் வாங்க ஒருவரை ஒருவர் அறி முகம் செய்கிறேன் என்று எங்களை அழைத்துச் சென்றார். அவர்தான் ஸ்ரீ ஜெயபால் சுவாமிகள். அவர்தான் இந்த படத்தின் தயாரிப்பாளர்.

க்கோயிலை நீங்க போய் பாருங்க பார்த்துவிட்டு நம்ம‍ உரத்த‍ சிந்தனை யிலே எழுதுங்க என்று டெல்லி கணேஷ் சொல்லி முடிப்பதற்கு முன்ன‍தாகவே தீபாவளி சிறப் பிதழ் அட்டையில் இந்த தடவை அம்பாள் தான் என்று அவருக்கு அறுதியளித் தேன்.

மேற்கு முகப்பேர் காளமேகம் சாலையில் அருள்வாக்குப்பீட மாக விளங்கும் இடத்தில்தான் ஆத்ம விக்ரகம்சிறிய அளவி IMG_0146ல் எழுந்தருளி… துயரங்களைத் துடைத்து… துஷ்ட சக்திகளிடமி ருந்து பக்தர்களைக் காப்பாற்றி வருகிறாள். அந்த இடம்தான் இன் றைய ஸ்ரீ கனகதுர்க்கா திருக் கோயிலாக பிரம்மாண்டமாய் மாறியிருக்கின்றன•

சுமார் எட்ட‍ரை அடி உயரத்தில் பத்துக்கரங்களுடன் மஹாலஷ்மி , மஹா சரஸ்வதி, மஹா காள் யானந்த ரூபமாக … ஏகசக்தியாக சாந்த முகத்துடன் ஸ்ரீ கனக துர்க்கா எழுந்தருளியு ள்ளார்.

பஞ்சகோபுரம் கொண்ட அம்பாள் கிழக்கு முகமாய் பக்தர்களுக்கு அருள்பாலிக்க, தெற்கே புவனேஸ்வரி, மேற்கே IMG_0016மஹா லஷ்மி, வடக்கே மஹா சரஸ்வதி, கன்னிமூலையில் வலம்புரி ஜோதி விநாயகர், தட்சிணா மூர்த்தி, வள்ளி தெய் வானை சுப்பிரமணியர், சொர்ணபைரவர், சரபேஸ்வர மூர்த்தி, அதர்வண காளி, உக்கிர பிரத்தி யங்கரா தேவி (பிரதிமாதம் அமா வாசை அன்று மாலை பிரத்திய ங்கிரா ஹோமம் நடைபெறும்) ஸ்ரீ லஷ்மி சமேத சத்திய நாராயண மூர்த்தி, பஞ்சமுக ஆஞ்சனேயர், பஞ்சமுக நாகாத்தம்ம‍ன், லட்சுமி குபேரர் சந்நிதி, ஐயப்ப‍ன், சப்த கன்னி, ஈசானியில் பாதாளகங்கையில் தவமிருக்கும் ஜலதுர்க்கா (இந்த அம்பாள் வருடத்தில் ஒரு நாள் சித்ரா பௌர்ணமி அன்று மட்டுமே பக்தர்களுக்கு தரி சனம் தருவாள்). IMG_0030நவகிரகம் ஆகியவ ற்றுடன் பொங்கு சனீஸ்வரர் தனிப் பெரும்கோயிலாக அருள்பாலிக்கிறா ர்.

அடேயப்பா… ஒரே கோவிலில் இத் த‍னை தெய்வங்களா என்று ஆச்சர் யம் நம்மை ஆட்கொள்ளும்.

சுமார் பதினாறு ஆண்டு காலமாய் குறைதீர்க்கும் நாயகியாய், ஆபத் பாந்தவியாக அநாதரட்சகியாக புரட் டாசி மாதம் முதல் சனிக்கிழமை அம்பாள் திருப்ப‍தி வேங்கடாசலபதி யாகக் காட்சி தருவாள். ஆடிப்பூரத் தன்று ஜாதிமத பேதமின்றி அனைவரும் மூலஸ்தானத்திற்கு சென்று அனைவரும் அம்பாளுக்கு பாலாபிஷேகம் செய்ய‍ IMG_0021லாம். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இரவு பன்னிரெண்டு மணிக்கு ஜோதி ஏற்ற‍ப்படும்.

கீழ்தளத்தில் இத்த‍னை தெய்வங்கள் என்றால் முதல் தளத்தில் வைகுந்தம்…

நுழைவாயிலில் துவார பாலகர்களின் திருஉருவம் கலைஅம்சம், உள்ளே நுழை ந்ததும் வாசலின் இருபக்க‍மும் ரங்க நாதரைப் பார்த்த‍படி ஆஞ்சநேயர், கரு டாழ்வார் கண்கொள்ளாக்காட்டி, எங்கு பார்த்தாலும் நாராய ணின் திரு அவதாரம் அஷ்டலட்சுமிகள் உப்பிலியப்பர். உலக ளந்த பெருமாள், நிமிர்ந்து IMG_0071பார்த்தால், தசாவதாரம் எதிரே மஹாலட்சுமி, அங்கே நிமிர்ந்து பார்த்தால், இராசி மண்டபம் காட் சித் தருவது நம்மை வைகுந்தத்தி ற்கே அழைத்துச் செல் வது போன்றே இருக்கு ம்.

கருவறையில் சுமார் ஒன்பது அடி நீளத்தில் ஒரு கல்லான ரங்கநாதர் ஆதிசேஷனின் மேல் பள்ளிக்கொ ண்டிருப்ப‍து வி IMG_0080சேஷமான அமைப்பு. அடுத்த‍ சந்நிதிக்கு வந்தால், லட்சுமி ஹயக்கிரீவர் சுமார் ஐந்தடி உயரத்தில் கம்பீரமாக எழுந்தரு ளியுள்ளார்.

படிக்கும் மாணவ மாணவிகளுக்காக கல்வி குருவான ஹயக்கீரீவருக்கும் விசேஷ் பூஜைகள் நடைபெறுகின்றன• சுதர்ஸன மூர்த்தி, யோக நரசிம்ம‍ரை தரிசித்துவிட்டு இடப்புறமாக திரும்பினா ல் லட்சுமி நாராயணின் திருப்பாதம் மட்டுமே இருக்கும். லட்சுமி நாராயணி ன் திருப்பாதங்களை பார்க்க‍முடியும். அந்த பாதங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன• சனிகிழமைகளில் ரங்க நாதரின் பக்தர்கள் வருகிறார்கள். ஒவ்வொரு மணிக்கு  இராமானுஜர் பூஜை நடைபெறுகிறது.IMG_0127

பார்க்குமிடமெல்லாம் தெய்வீகக்கலை அம்சமாக நாராய ணின் அவதாரங்கள் நிறைந்திருக்கிறன• சுவர்களிலும் மேற் கூரைகளிலும் கண்ணைப் பறிக்கும்  சித்திரங்கள், இதற்காக IMG_0054வே விசேஷமான பெயிண்ட் வரவழைக்க‍ப்பட்ட‍தாம், வேறெங்கும் இல்லாத அற்புத வண்ண‍ங்களில் ஓவியங்களு ம் சிற்பங்களும் நம்மை பக்தி பரவசப்படுத்துகின்றன•

இரண்டாவது தளத்தில் 108 நாகங்கள் சிலை தளத்தில் நாகங்கள் பரவசப் படுத்த‌108 அடி நாகங்கள் சிலை வடிவில் ரிசையாக நம்மை ஆச்சர்ய வைக்கின்ற போது, வேறெங்கும் ராகு கால பூனையின் போது IMG_0109இங்கே கூட்ட‍ம். அலைமோது கிறது. வேறேங்கும் இடத்தில் இல்லை என்பது குறிப்பிடத் தக்க‍து.

அப்ப‍டியே திரும்பினால், கைலாயத்தை கைலாயத்தை நம் கண்முன் கொண்டு ந்த து போல் அற்புதகாட்சி! கயலாய தானாக கிடைத்த‍ கயிலாய லிங்கம் இங்கே பிரதிஷ்டை செய்ய‍ப்பட்டுள்ள‍து. (இந்த IMG_0088லிங்கம் கிடைத்ததுஒரு அதிசயமான சம்பவம்.

மேலும் அரிதிலும் அரிதா ன சிவதத்துவ ஸ்வரூபமா ன பாரதம் எங்கும் பரவியு ள்ள‍ 12ஜோதிர் லிங்கங்க ளை ஒரே இடத்தில் பரிதி ஷ்டை செய்ய‍ வேண்டும் என்று எண்ணி இறைவனின் திருவருளால் அதற்கான திருப் பணிகள் செய்து அந்தந்த மாநிலத்தில் உள்ள‍து போன்ற வடிவமைப்பு, அளவு, தரம் முடி ந்தவரை துல்லியமாக 12 IMG_0117ஜோதி லிங்கங்களையும் வடிவமைத்துத்துள்ளார் கள். கோவில் கோபுரங்க ளிலும் அந்தந்த மாநிலத் தில் உள்ளது போன்றே வடிவமைத்துள்ளார்.

இந்த லிங்கங்கள் பற்றி இத்திருக்கோயில் தனியே புத்த‍கம் வெளியிட்டிருகிறது.

இரண்டாவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள‍ ஜோதிர் லிங்கங் IMG_0061கள் கைலாய அமைப்பு 108 நாக சிலைகளை பார்க்கும்போது ஹைதராபாத்தில் உள்ள‍ சுரேந்திர புரி என்ற அற்புதமான கலைக் கோவிலின் நினைவு எனக்கு வந்த து.

இத்திருக்கோயில் திங்கள், புதன், வியாழன் கிழமைகளில் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். செவ்வாய், IMG_0151வெள்ளி, ஞாயிறு நாட்களில் காலை 12 மணிவரை திறந்திருக்கும் இராகு காலபூஜைக்கு ஏதுவாக செவ்வாய்க் கிழமைகளில் மாலை 3 மணிக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 4.30 மணிக்கும் திறக்க‍ப்படுகிறது.

ஜோதிஞானபீடம் டிரஸ்ட் என்ற அறக் கட்ட‍ளையின் மூம்நிர்வகிக்க‍ப்படும் இத்திருக்கோவிலில் அறப்பணிகளுக் கு நீங்களும் நன்கொடை வழங்கி அம்பாளின் பரிபூரண அருளைப் பெற வேண்டுகிறோம்.

மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனகதுர்க்கா நம் கண்ணுக்குள்ளேயே இருந்து நம்மை காக்கும் தெய்வம். நினைப்ப‍தை நடத்திக் IMG_0009கொடுக்கும் நிகழ்கால தெய்வ ம் என்பதை இங்கு வந்தவர் கள் பக்தியோடு அனுபவித்து சொல்வதை போலவே நீங்க ளும் சொல்வீர்கள். வாருங்க ள் அன்னையை தரிசியுங்கள் ஆனந்தம் பெறுங்கள்.

த‌வத்திரு ஸ்ரீஜெயபால் சுவாமிகள்

நம்மைப் போன்ற ஒரு சாதாரணமான மனிதராகத்தான் இவரும் இருந்தார். (இப்பொழுதுதம் அப்ப‍டித்தான்) இவர் IMG_0131அன்புடன் ஆத்மசக்தியுடன் வாழ்த்துவது எல்லாம் பலிக்க வே அவர் வசித்த‍ பகுதியில் உள்ள‍ மக்க‍ள் இவரிடம் அம்பாளின் சக்தி இருப்ப‍தை கண்டு கொண்டனர்.

பல ஆண்டுகள் தொடர்ச்சியா க ஐயப்பா குருசாமியாக இருந்த இவர், ஐயப்ப‍னுக்கு கோயில் கட்ட‍த்தான் நினைத்தாராம். ஆனால் இவரது கனவில், அதுவு ம் விடியற்காலையில் அடிக்கடி கனவில் அம்பாள் வருவாளா IMG_0146ம், அந்த உருவம் கனக துர்க்காவின் உருவம். சரி அம்பாளின் கட்ட‍ளை , அவளுக்கு கோயில் கட்ட‍ வேண்டும் என்பதுதான் போலும் என்று எண்ணிய இவர் முதலில் அருள் வாக்கு பீட த்தை அமைத்தாராம்.

சிறிய கல்லில் அம்பாளின் விக்கிர கம் அருள்வாக்கு அதற் கான பூஜை, மக்க‍ளின் நம்பிக்கை, எல்லாமும் சேர்ந்து அம் பாளின் கருணையுடன் இந்த இடத்தை அவருக்கு அரசின் மூலம் கிடைக்க‍ வைத்த‍ன• அதன் பிறகு படிப்படியாக கோவில் பிரம்மா ண்டமாக வளர்ந்து விட்ட‍து.

“இது எனது முயற்சியல்ல‍ அம்பாளே நடத்திக்கொள்கிறாள்” என்கிறார் அவை அடக்கத்துடன்,

தொடர்புக்கு 

ஜோதி ஞானபீடம் டிரஸ்ட்
காளமேகம் சாலை,
மேற்கு முகப்பேர்,
சென்னை – 600 037
தொலைப்பேசி எண்.26536606

-திரு. உதயம் ராம் (நம் உரத்த‍ சிந்தனை மாத இதழ்)
புகைப்படங்கள் – விக்கி மனோ

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: