Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆந்தைகளின் தனி ராஜ்ஜியம்! – ஆச்ச‍ரியமூட்டும் தகவல்கள்

ஆந்தைகள் ஒரு காலத்தில் நம் முன்னோர்களை ஆட்டிப் படைத்து தான் இருக்கிறது அதற்கான சான்றுகள் கீழே

இந்தியாவில் பழமையான பஞ்சதந்திரக் கதைகளில் சித் தரிக்கப்பட்ட பல விலங்குக் கதாபாத்திரங்களில் ஆந்தை யும் முக் கியமான ஒன்று. எனினும் இந்தியப் பண்பாட்டி ல் ஆந்தையின் அலறல் பயத்துக்குரியதாகவும் கெட்ட சகுன மாகவுமே கருதப்பட்டது.

ஆந்தைகளின் புத்தி கூர்மைக்கு

சான்றாக அத்தீனா தெய்வத் துடனும் சம்பந்தப் படுத்தப் பட்டு வந்தது.

அத்தீனா கிரேக்கக் பழங்கதைகளில்வரும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் அறிவுதந்திரம் போர் இவற்றுக்கான கடவுள் ஆவார். இக்கடவுள் பன்னிரு ஒலிம்பியர்களில்ஒருவர். இவரு க்கு இணையான ரோமக்கடவுள் மினர்வா. இவருடைய நினைவா கவே ஏதென்ஸ் நகரம் என்று ஒரு கிரேக்க நகரம் பெயரிடப்பட்டது.

பண்டைய எகிப்தியரின் எழுத்து வரிவடிவங்களில் ‘ம்’ ஒலி யைக் குறிக்க ஆந்தை உருவமே பயன்ப ட்டது. எனினும் ஊனு ண்ணியான இது உயிர்பெற்றுத் தாக்குவதைத் தடுக்க அத ன் கால்கள் முறிந்த நிலையிலேயே வரைந்து வந்தார்கள். ஜப்பானியப் பண் பாட்டில் ஆந்தை இறப்பின் குறியீடாகக் கருதப்பட்டதுடன் இதனைக் காண்பதும் கெடுதியாகக் கருதப் பட்டது. ஹோபி பண்பாட்டில் இவை அழுக்கானவையா கவும் கஷ்டத்தைக் கொண்டு வருபவை யாகவும் கருதப்பட்டன

இனி ஆந்தைகள் பற்றிய சிறு கண்ணோட்டம்

ஆந்தை ஸ்ட்றைஜிபோர்மெஸ் ஐச் சேர் ந்த தனித்த இரவில் திரியும் 174 வகைப் பறவைகளில் ஒன்றைக் குறிக்கும். ஆந் தைகள் பெரும்பாலும் சிறிய பாலூட்டி கள் பூச்சிகள் மற்றும் ஏனைய பறவை களை வேட்டையாடும்.

ஆந்தைகள் முன்நோக்கும் பெரிய கண் களையும் காதுகளையும் சொண்டையும் மற்றும் facial disk என அழைக்கப்படும் தெளிவாகத் தெரியும் கண்களைச் சுற்றி வட்டமாக அமைந்த இறகுகளையு ம் கொண்டுள்ளது.

ஆந்தைகள் நீண்டதூரப் பார்வைச் சக்தியைக் கொண்டிருப்பினும் அ வற்றின் கண்கள் அவற்றுக்குரிய குழிகளில் நிலையாகப் பொருத்த ப்பட்டுள்ளன. இதனால் பார்வைத் திசையை மாற்றுவதற்குத் தலைமுழுவதையும் திருப்ப வேண்டியுள்ளது 

ஆந்தைகள் தூரப்பார்வை கொ ண்டவை அவற்றின் கண்களுக் குச்சில அங்குலங்கள் தூரத்திலு ள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்க முடியாதவை. எனினும் அவற்றி ன் பார்வை விசேடமாக மங்கலா ன வெளிச்சத்தில் மிகவும் சிறப்பா னது.

பல ஆந்தைகள் முழு இருட்டிலும்கூட ஒலியை அவதானித்து வேட்டையாடக் கூடியவை. facial disk கொறிணிகளிடமிருந் து வரும் ஒலியைக் குவித்துக் காதுக்கு அனுப்ப உதவுகின்றன

ஆந்தைகளின் வலுவான நகங்களு ம் கூரிய சொண்டும் உண்பதற்குமு ன் அவற்றின் இரைகளைத் துண்டுதுண்டாகக் கிழிப் பதற்கு உதவுகின்றன. சத்தத்தைஅமுக்கும் தன்மை யுள்ள அவற்றின் சிறகுகளும் மங்கலான இறகுகளும் அவை சத்தமின்றியும் காணப் படாமலும் பறப்பதற்கு உதவுகின்றன. உணவின் சமிக்கப்பட முடியாத எலும்புகள் செதில்கள் மற்றும் இறகுகள் போன் றவற்றை உருண்டை வடிவில் வெளி விடும் இதன் நடத்தை இவற்றின் உணவுப் பழக்க ம் பற்றி ஆராயும் விஞ்ஞானிகளுக்கு உத வுகின்றது

எது எவ்வாறு இருப்பினும் ஆந்தைகளுக்கும் அழகு உண்டு.

– புதுவைவலசை

Leave a Reply