Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘நா’ காக்க . . . ! (தலையங்கம்)

‘நா’ காக்க . . .

2013, டிசம்பர் (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளி வந்த தலையங்கம்

இந்தியாவின் அரசியல் மேடை அண்மைக்காலங்களில் அநாகரிகமேடையாகி வருகிறது. தனி நபர் விமர்சனங்களும், தாக்குதல்களு ம் தலைக்குனிவை  ஏற்படு த்துமளவு க்குக் கட்ட‍விழ்த்தப்பட்டு வருகின்றன•

முன்பெல்லாம் கட்சிகளின் பிரச்சாரக் கூத்தாடிகள் மட்டுமே நான்காந்தரமா ய் . .. நாராசமாய் மேடைகளில் அசிங் கமான அங்க அசைவுகளுடன் பேசுவ ர். இன்றோ மாபெரும் தலைவர்களே அந்த பணியைச்

செய்து வருகின்றனர். கதாநாயகியே கவர்ச்சி நடனம் ஆடு வது போன்றுள்ள‍து என்றால் மிகையில் லை.

ஜெகன்மோகன் ரெட்டியைத் திருடன் என்கிறார் சந்திரபாபு நாயுடு. மற் றொரு தலைவரை குரங்கு என்கிறா ர் ஜெகன் மோகன் ரெட்டி. நரேஷ் அகர்வால் என்கிற சமாஜ்வாடிக்கார ர் டீ கடை வேலையாளுக்கு நாட் டையாள என்ன‍ தகுதி? என்று மோடி யைக் கேட்கிறார்.

குரங்கு புத்தியும் குறுக்குப் புத்தியும் உள்ள‍வர்கள் எதிர்க்கட் சியினர் என்று கொம்பு சீவுகிறார் சோனியா. நமது நிதியமைச்ச‍ரோ உயிரோடிருக்கும் முன்னாள் பிரதமரை அமரராக்கி ஆனைந்தப் படுகிறார்.

முலாயம் சிங் யாதவுக்கு திடீரென்று மொழிப் பற்று வந்திருக்கிறது. பாராளுமன்ற உறுப்பின ர்களெல்லாம் அவரவர் தாய்மொழியில் மட்டு மே பேச வேண்டுமாம். (யாருமே பேசற‌தில்லை. . . குஸ்தி தானே போடுறாங்க . . என்று நீங்கள் சிரிப்ப‍து தெரிகிறது)

சரி, இவர்கள்தான் இப்ப‍டியென்றால், இளவல் ராகுலோ முசாப்பூர் கலவரத்தை ஏற்படுத்தி அந்நிய நாட்டு சக்திக ளை ஊடுரவச்செய்கிறது பா.ஜ•க•என்று பட்டாசு கொளுத்தியிரு க்கிறார்.

எல்லோரையும் ஓங்கட்டியிருக்கிறார். பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, சோனியாவை விஷக்கிருமி என் கிறார். நேருவுக்கும் பட்டேலுக்கும் இருந்த ஊடலை தேவை யின்றி ஊதிப் பெருதாக்குகிறார். புள்ளி விவரம் தரு கிறேன் என்று தப்புத் தப்பாய் உளறிக் கொட்டுகிறார். பணமென்ன‍ உன் மாமா வீட்டி லிருந்தா வருகிறது என்கிற விமர்சனமெல்லாம் நன்றாகவா இருக்கிறது?

மக்க‍ளைக்கவர்வதற்காகத் தரமிறங் கி வரும் அரசியல் தலைவர்களே... பகை வனுக்கருள்வாய் நன்னெஞ்சே ! என்று பாடிய பாரதியையும், யாகாவாராயினும் நா காக்க என்று ‘நச்’சென்று சொன்ன‍ வள்ளுவ ரையும் அருள்கூர்ந்து படியுங்கள்

பேச்சு பேச்சாக இருக்க‍ட்ட‍ம். ஏச்சாகவும் ஏடா கூடமாகவும் மாற வேண்டாம் என்பதே எல்லோரின் வேண்டு கோள்.

இந்த வைர, வைடூரிய வரிகளின் உரிமையாளர்

உதயம் ராம் (நம் உரத்த‍ சிந்தனை)

தொடர்புக்கு கைபேசி 94440 11105

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: