பொதுவாக பெண்கள் என்றால் தங்களை அழகாக காட்ட விரும்புவார்கள். அதற்காக உடல் பரா மரிப்பு, சரும பராமரிப்பு மற்றும் தலை முடி பராமரிப்பு என அவர்கள் மெனெ க்கெடுவது அனைவரும் அறிந்ததே. சாதாரண நேரத்திலேயே இவ்வளவு மெனெக்கெடுபவர்கள் திருமணம் ஆக போகிறது என்றால் சும்மா இருப்பார்க ளா?
தன் திருமண நாளின்போது ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் தனித்துவத்துமா ன தோற்றத்துடன், நேர்த்தியான அழகு டன், அனைவரையும் ஈர்க்கும் வண்ண ம் இருக்க வேண்டும் என்று ஆசை எழு வது இய ற்கை தான். அழகான தோற்றத்தை பெற தன் உடல் மற்றும் சரும பராமரிப்பின் மீது மட்டும் அவள் அக்கறை எடு த்துக் கொள்வது பத்தாது. திருமணத்தின் போது
தன் கூந்தல் பராம ரிப்பிலும் மணப்பெண் அக்கறை எடுத்துக் கொள்ள வே ண்டும். ஈர்ப்புள்ள தோற்றத் தை பெற மணப்பெண்ணாக போகும் பெண்ணுக்கு கூந்தல் பராமரிப்பு என்பது அவசியமான ஒன்றாகும். அதனை அடை ய அழகு நிலையத்தை நாடி போக வேண் டும் என்ற அவசியமே இல்லை. மணப்பெ ண்ணாக போகும் பெண்களுக்காக சிகை அலங்கார வல்லு னர்கள் சில டிப்ஸ்களை வழங்கியுள்ளனர். அதனை பின்பற்றினால் மணப்பெண்ணின் சிகை அலங்காரம் அழ காவும், கவர் ச்சிகரமாக வும் அமையும்.
மணப்பெண்களாக மாறபோகும் பெண்களுக்கான சில கூந் தல் பராமரிப்பு டிப்ஸ்…
தலைமுடி பராமரிப்பை சீக்கிர மாகவே தொடங்குங்கள்:
திருமண நாளின் போது கூந்தல் அழகாக காட்சி அளிக்க, மணப் பெண்ணாக போகும் பெண்கள் திருமண நாளிற்கு சில நாட்களு க்கு முன்பாகவே தயராக வேண்டும். முடிந்தால் சில மாதங்களுக்கு முன்பாக வே மணப்பெண்ணாக போகும் பெண்கள் தலைமுடி பராமரி ப்பில் ஈடுபட தொடங்கி விடலாம். இது கடைசி நிமிஷ டென் ஷன் மற்றும் வலியை குறைக்கும். இதற்கு உதவி புரிந்திட சில தலை முடி வல்லுனர்க ளின் ஆலோசனை யையும் பெற்றுக் கொள்ளலாம் .
தலைமுடியின் வாகை பொறுத்து அ தற்கேற்ப பராமரிப்பில் ஈடுபடுங்கள்:
மணப்பெண்ணாகபோகும் பெண்ணு க்கு தலைமுடியை பராமரிப்பதில் எதிர்பார்த்த விளைவை பெற முதலி ல் அவர் களின் தலைமுடி வகையை அறிந்து கொள்வது அவசியம். உங்க ளுக்கு வறண்ட தலைமுடி என்றால் கண்டிப்பாக பொடுகு இருப்பதில் ஆச்சரியம் இருக்காது. அத னை நீக்க பொடுகை நீக்கும் பொருட்களை சந்தையிலிருந்து வாங்கி பயன்படுத்துங்கள். தலைக்கு குளித்த ஒரு நாளைக்கு பிறகு தலை முடியை சாதாரணமாக விட்டுவிட சொல்லி மணப்பெண்ணாகபோகும் பெண்களுக்கு தலைமுடி வல்லுனர் கள் பரிந்துரைக்கிறார்கள். அப்படி செ ய்தால் தலைமுடி பளபளப்பாகவும் நல்ல தோற்றத்துடனும் நீண்டகாலம் நிலை க்கும்.
இயற்கையான தலைமுடி பராமரிப்பு வழிமுறைகளை தேர்ந் தெடுங்கள்:
மணப்பெண் அழகாக காட்சி அளிக்கு ம் டிப்ஸ்களை பெற கூந்தல் அலங்காரத்துக்கு இயற்கையா ன வழிமுறைகளை தேர்ந்தெடுங்கள். அதற்கு இயற்கையான தலைமுடி பராமரிப்பு பொருட்களையே பயன்படுத்துங்கள். ரசாயனம் கலந்த பொருட்களைமணப்பெண்ணாக பெண்க ள் பயன்படுத்தினால் அவை தீங்கை வி ளைவிக்கும். அது பொடுகு அல்லது முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைக ளை உண்டாக்கிவிடும். இருப்பினும் மணப் பெண்ணாக போகும் பெண்கள் அழகிய கூந்தலை பெறுவதற்கு ஹேர் ட்ரையர், சிந்தடிக் நிரப் பூச்சுகள் மற்றும் இதர பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வகை பொருட்கள் கூந்தலின் வலி மையை குறைத்து விடும். தலைமுடியை கலரிங் செய்வதற்கு மருதாணியுடன் வடிசாறு மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பேஸ் டை பயன்படுத்துமாறு வல்லுனர்கள் அறிவுறுத்துகிறா ர்கள். தலைமுடி பளபளவென காட்சி அளிக்க மாதம் ஒரு முறை
தலை முடிக்கு முட்டையின் வெள்ளை கருவை பயப்படுத்து மாறும் அறிவுறுத்தப்படுகின்ற னர்.
சீரான முறையில் தலை முடி யை கழுவ வேண்டும்:
மணப்பெண்ணாக போகும் பெண்கள் அழகிய கூந்தலை பெ றுவதற்கு கொஞ்சம் ஷாம்பூ போட்டு தலை முடியை வாரம் மூன்று முறையா வது சீரான முறையில் கழுவ வேண்டும். மணப்பெண்ணாக போகும் பெண்களுக்கு இது பெரிதும் பரிந்துரைக்கப்படுகிற அழகு குறிப்பாகும். அதற்கு காரணம் இது தலைமுடியை பலவகை சேதத்திலிருந்து பாதுகாக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின் றனர். தலை முடியை கழுவ புரதம் கலந்த கண்டி ஷனரை பயன்படுத்தினால் அது ஸ்டைலான கூந்தலாக காட்சி அளிக் கும். திருமணத்திற்கு முன்பு கொஞ்ச நாளைக்கு சீரான முறை யில் தலை முடி மசாஜிலும் ஈடுபடலாம். இதுவும் மணப்பெ ண்ணாகபோகும் பெண்ணு க்கு திருமணத்தின்போது அழகிய கூந்தலாக காட்சி அளிக்க உதவும்.
மணப்பெண்ணாக போகும் பெண்கள் மேற்கூறிய அறிவுரை களை பின்பற் றினால் அவர்களின் திருமணத்தில் சிறப்பாக காட்சி அளிப்பா ர்கள். அதனால் உங்கள் திருமணத்திற்கு மேலும் சிறப்பு சேர் க்க இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!