Monday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடற்பயிற்சி, என்னென்ன நன்மைகளை அளிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

உடல் உழைப்புக் குறைந்த இக்காலத்தில், பலரும் உடற் பயி ற்சியின் அவசியத்தை உணர் ந்து வருகிறார்கள். அதனால்தான், அதிகாலையில் பலரும் பூங்காக் கள், திறந்தவெளிகளில் மெல் லோட்டம் ஓடுகிறார்கள், நடக்கி றார்கள், உடற்பயிற்சிக் கூடத்துக் குச் சென்று பயிற்சி செய்கிறார்க ள். 

சிலர் வீட்டிலேயே உடற்பயிற்சிக் கருவிகளை வாங்கிப் போட்டு பயிற்சி செய்கிறார்கள். சரி, உடற்பயிற்சி என்னென்ன நன்மைகளை அளிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? இதோபட்டியல்…

* உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கும், நல்ல நிலையில்

வைத்துக் கொள்வதற்கும் உதவுகிற ஒரே தீர்வு உடற்பயிற்சி.

* உடற்பயிற்சி செய்வதன் மூலம் தசைகள் நன்றாக விரிவ டையும். உடலில் சோர்வு நீங்கும், மனதில் உற்சாகம் பிறக் கும்.

* நிம்மதியான தூக்கம் வரும், எந்தப் பக்கவிளைவும் இல் லாதது.

* தொடர்ந்து உடற்பயிற்சி செய்ப வர்களுக்குப் புற்றுநோய் வரும் வாய்ப்புகள்கூட குறையும் என்கி றது ஆராய்ச்சி.

* வாரத்துக்கு மூன்று மணிநேரம் நடந்தால், மாரடைப்பைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஓர் ஆராய்ச் சி. மாரடைப்பு மட்டுமல்ல, பல்வேறு நோய்கள் வருவதற்கா ன வாய் ப்பும் வெகுவாகக் குறையும்.

* ரத்த ஓட்டம் சீராகும், உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும், மற்றவர்களுடன் உரையாடியபடியே நடக்கும்போது மனதி லும், உடலிலும் உற்சாகம் பிறக்கு ம்.

* தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவ ர்களுக்கு எடை கட்டுப் பாட்டுக்கு ள் இருக்கிறது, உடலில் கொழுப்பு சேர்வதில்லை.

* வாகன வசதி, பொது போக்குவர த்து வசதி குறைந்த அந் நாட்களி ல், பலருக்கும் கால்களே பயண உபகரணங்களாக இருந்தன. அத னால் நோய், நொடிகளும் குறைந் தன.

* அதிகாலை வேளையில் எழுவதே நல்ல விஷயம் தான். காலையில் உடற்பயிற்சி செய் யும்வழக்கம் உள்ளவர்களுக்கு, அதிகாலையில் எழும் பழக்க மும் ஏற்படுகிறது.

* காலை வேளையில் சுத்தமா ன காற்றைச் சுவாசிக்க முடிகி றது. உடற்பயிற்சியால் உள்ளு க்குள் செல்லும் ஆக்சிஜனின் அளவு அதிகரிக்கிறது. இன்னு ம் பல நன்மைகளை பட்டிய லிட்டுக்கொண்டே போகலாம். சோம்பலை உதறி, இன்றே உடற்பயிற்சியில் இறங்குங்க!

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!

One Comment

  • Dheena Dhayalan (Raju), Hyderabad

    Useful article. The benefits of exercise are still many more such as
    Diabetic (sugar) control etc.
    Thanks Sathya for your a nice article for maintaining our good heath.

Leave a Reply