Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“பாரதி காணாத புதுமைப்பெண்கள்”

“பாரதி காணாத புதுமைப்பெண்கள்” என்ற தலைப்பில் உங்கள் நண்பன் விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி ஆகிய நான் எழுதிய கட்டுரை இந்த‌ (டிசம்பர்) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் பக்க‍ எண் 12இல் வெளி வந்துள்ள‍து என்பதை இங்கே தெரிவித் துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகி றேன்.

பாரதி காணாத புதுமைப் பெண்கள்

– விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி

பாரதி என்ற அந்த மாமனிதன், தேச விடுதலைக்காகவும், பெண்சுதந்திரத்திற்காகவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த‍ பல பாடல்களிலும் கவிதைகளிலும் அந்த உணர்வினை செறிவு டன் வித்திட்டான்.

ஒரு பக்க‍ம் பாரதி கண்ட புதுமைப்பெண்களாக, இன்றைய பெண்கள் வலம்வந்தாலும், பல இடங்களில் பாரதி காணாத புதுமைப் பெண்களாகவும் வலம் வருகின்றனர். இன்றைய

பெண்களில் சிலர், திருமணம் முடித்து அமைதியான இல்ல‍ றவாழ்வினை காணாமல், தேவையற்ற‍ அற்ப விஷயங்க ளைக்கூட பெரிதாக்கி, தன் வாழ்வின் ஒரு அங்கமாக கருத வேண்டிய கணவனையும், மதிக்க‍ வேண்டிய புகுந்த வீட்டாரையும், சில வழக்க‍றி ஞர்களின் தூண்டுதல்களாலும் சில காவலர்களின் ஆதரவுடனும் தனது கணவன் மற்றும் அவனது குடும்ப த்தினர்மீது குடும்ப வன்முறைத் தடுப் புச்  சட்ட‍த்தை கையிலெடுத்து, அதை தவறாக பிரயோகித்து, அவர்களை காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத் திற்கும், அலைக்கழித்து வரும் கொடுமைகளை புரியும் இந் த பெண்களை பாரதி காணாத புதுமைப் பெண்கள்  என்று தானே சொல்ல‍ வேண்டும். .

இன்றைய திரைப்படங்களிலும் தொலைக் காட்சிகளிலும் பார்த்தால் நடனம் என்ற பெயரில் அறைகுறை ஆடைகள் அணிந்து கொண்டு ஆபாச அங்க அசைவுகளுடன் நடனம் ஆடுகின்றனர். இவர்களைப் பார்க் கும்போது பாரதி காணாத புதுமைப் பெண்கள் என்றுதானே சொல்ல‍ வேண் டும்.

மதுவுக்கும் போதை வஸ்த்துவுக்கும் அடிமையான ஆண்களை, திருத்தி நல் வழிப் படுத்த‍ வேண்டிய பெண்கள், இன் றோ ஒருகையில் மதுபாட் டிலுடனும், மறு கையில் சிகரெட்டுடன் எப்போதும் காட்சித் தரும் இவர்களை, பாரதி கா ணாத புதுமைப்பெண்கள்   என்றுதானே சொல்ல‍வேண்டும்.

தான்பெற்ற‍க்குழந்தைக்குக் கூட தாய்ப் பால் கொடுக்காம ல், புட்டிப்பால் கொடு க்கும் பெண்களைப் பார்க்கும்போது, அவர் களுக்கு தான் பெற்ற‍க் குழந்தை முக்கி யமானதாக தெரியவில்லை. தன் குழந்தை யைவிட தனது அழகுதான் பிரதானமாக வும் முக்கியமான தாகவும் கருதுகிறார்கள். இவர்களைக் காணும்போது பாரதி காணாத புதுமைப் பெண்கள்  என்று தானே சொல்ல‍ வேண் டும்.

தன் மானம் காக்கும் மாராப் பைத் தவிர்த்து, இருக்க‍மான உடையுடன் வலம் வந்து ஆண் களின் காம உணர்ச்சிகளை சுண்டி இழுக்கும் பெண்களை காணும்போது பாரதி காணாத புதுமைப் பெண்கள்  என்று தானே சொல்ல‍ வேண்டும்.

காதல் என்ற பெயரில், சொற்ப காலமே பழகிவிட்டு, திடீரென்று ஒருநாள் காதலனை, அண் ணா என்றழைத்து அவனது கையில் தனது திருமணப்பத்திரிக்கையை கொடுக்கும் பெண் களை, பாரதி காணாத புதுமைப்பெண்கள்  என்று தானே சொல்ல‍வேண்டும்.

பெற்றோர் பார்த்து திருமணம் முடித்து வைத் து இவன் தான் உன் கணவன் என்று ஊரார் முன்னிலையில் பிடித்துக் கொடுப்ப‍ர். ஆனாலு ம் திருமணத்திற்கு முன்பு தன க்கிருந்த காதலன் பற்றி தன் பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்து விட்டு, திருமணத்திற் குப்பின், தேனிலவு என்ற பெய ரில் கண வனை மூணாறு அழைத்துச் சென்று, அவனை தன் காதலன் துணையோடு அந்த அப்பாவி கணவனை இரக்க‍ மற்றுக் கொல்லும் அந்த நயவஞ்சக பெண்களை, பாரதி கா ணாத புதுமைப் பெண்கள் என்றுதானே சொல்ல‍ வேண்டும்.

ஓ! பாரதியே நீ ஏன் இறந்தாய்! நீ இறவாமல், இந்த உலகத்தில் வாழ்ந்திரு ந்தால், இன்றைய பெண்களில் சிலரை பார்க்கும்போது, நீயே வீறு கொண்டு எழு ந்து ஆண்களுக்காகவும் ஆண்களின் உரி மைகளுக்காகவும் முதல் ஆளாக நின்று போர்க்கோலம் பூண்டிருப்பாய்!

– விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி (படங்கள் – கூகுள்)

*****

நம் உரத்த‍ சிந்தனை மாத இதழின் பக்க‍ எண்கள் 12 & 13 இல் வெளிவந்த பாரதி காணாத புதுமைப்பெண்கள் என்ற எனது கட்டுரை

Bharathi Kaanaadha Pudhumai Pengal 01

Bharathi Kaanaadha Pudhumai Pengal 02

7 Comments

  • G Kumaran

    Bharathi indru Uyirudan Irunthal avar Aangalukkaga Kural kodukka, avarai ethirthu Indraiya Puthumai Pengal Porattam Natathuvaargal.

  • Hi, sir your article excellent. day to day life nadakirathu. inda pengal ketu poga sila angalum panatukaga kattayapadutugirargal, pengaluku pengala kevalamana kariangal pandrangal. nadu nasama poga idellam mukkia karanam. pilligal parents. madikavillai, pendati vs pursanaium madikavillai. istam pol valkai valgirargal. vekkam,manam, soodu, soranai, avamanam, kudumba mariatai , ellam vanatil arundu ponda katadi agivittadu. migavum kevalamaga irukiradu.

  • sir, konja kallatuku munnadi india pengal patti pesumbodu. periya perumaia irundadu. anal iniki talakila maripochu. ivanga ketu nasama poratuku cinema, newspapers,media, education system. en solrena education valkai kalvi patri enda education solitarala, panam sambarika matum soli tarudu. sattam edugalil irukiradu makkal yarum adai padikala, idai taduka valuvana sattam vendum. kuwait, arabu nadugal pondra kandipanna sattam nam natil vandal nichayam marum. nalla kudumbam, nalla nadu kattayam uruvagum ilavital nasama poradu orudi.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: