Monday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வீட்டுக்கடனை கூடுதலாக‌ பெற சில எளிய வழிகள்

வீட்டுக்கடனை தம்பதியர் கூட்டாகவாங்கும்போது, பல்வே று சலுகைகள் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரிய வில்லை. இது பற்றிய ஒரு பார்வை:

வீடுகட்டுவதற்கோ, வாங்குவதற் கோ அதிகதொகை வீட்டுக்கடனா க தேவைப்படும். இதுபோன்ற சம யங்களில் தம்பதியர் இருவரும் இணைந்து கூட்டாக விண்ணப்பிக்குமாறு வங்கிகள், நிதி நிறுவனங்கள் கூறுவதை பார்க்கலாம். இதுபோல கூட்டாக சேர்ந்து வீட்டுக் கடன் வாங்கினால்

வரி செலுத்துவதில் சில சலுகைகள் உண்டு தெரியுமா?

கணவனும், மனைவியும் இணை ந்து விண்ணப்பிக்கும்போ து அவர் களால் கூடுதல் தொகையை மாதா ந்திர தவணையாக செலுத்த முடி யும் என்பதால் அதிக தொகையை வீட்டுக்கடனாக பெறமுடியும். அதே சமயத்தில் செலுத்தும் அசல், வட்டி ஆகியவற்றின் மீது இருவரும் தனித்தனியாக வரி தள்ளுபடி பெற முடியும்.

வருமான வரி சட்டத்தின்படி, கூட்டாக கடன் வாங்கும் அனைவருக்கும் வரி சலுகை கிடைக்கும். ஒருவரின் ஆண் டு வருமானத்தில் ரூ.1.5 லட்சம் வ ரை வீட்டுக்கடன் வரிச்சலுகை கிடைக்கும். கூட்டாக வீட்டுக் கடன் வாங்கும்போது கணவன், மனைவி இருவருக்கும் தலா ரூ.1.5 லட்சம் என ரூ.3 லட்சத்துக்கு வரி தள்ளுபடி கிடைக் கும்.

இந்த சலுகையைப் பெற வீட்டுக் கடன் பெறும் இருவரும் சொத்துக்கு உரிமையாளர்களாக இருக்க வேண்டும். கூட்டாக வீட்டுக் கடன் வாங்கிய கணவன், மனைவி இருவரும் ரூ. 2.40 லட்சம் வட்டியா கவும், ஸீ1 லட்சம் அசலாகவும் செ லுத்தியிருந்தால், இருவருக்கும் வட்டியின் மீது 1.2 லட்சம் வரையும், அசலின் மீது ரூ.50 ஆயிரம் வரையும் வரி தள்ளு படி கிடைக்கும்.

ஒரு குறிப்பிட்ட ஆண்டில் மனை வி ஏதாவது காரணத்துக்காக ஊதியம் ஈட்டவில்லை, கணவரே வீட்டுக்கடன் தவணையை செலு த்துகிறார் என்ற நிலையில், ” முழு தவணை தொகையையும் கணவர்தான் செலுத்தினார்” என் று மனைவியிடம் நூறு ரூபாய் முத்திரைத் தாளில் எழுதி பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அந்த ஆண்டு முழு வரிச் சலுகையும் கணவருக்கு கிடைக்கும். கணவர் ஊதியம் ஈட்டவில்லை என்றால் மனைவியும் இதேபோல வரிச் சலுகை பெற முடி யும்.

சகோதரிகள், நண்பர்கள், திருமணமா காத ஜோடிகள் ஆகியோர் இத்தகைய வரிச்சலுகையை பெறமுடியாது. மே லும் கூட்டாக வீட்டுக்கடன் வாங்குபவ ர்களின் எண்ணிக்கை 6 க்கு மேல் இரு ந்தால் இந்த சலுகை கிடைக்காது. மொத்தத்தில் கூட்டாக சேர்ந்து வீட்டுக்கடன் வாங்குவது சிறந்த லாபம் தரக்கூடிய து.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: