Saturday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மை?

ஆவி உங்களைப் பிடித்தால்தான் தப்பு, ஆனால் ஆவியை நீங்க பிடித்தால் தப்பில் லை. என்ன‍டா இவ குழப்புகிறானே என்று தானே தோன்றுகிறது. மேற்கொண்டு வரு ம் வரிகளை படித்தீர்களானால் உங்களுக் கே புரியு ம்

முகத்தை அழகாக்க எத்தனை அழகு சாத ன பொருட்களை பயன்படுத்தினாலும்,

ஆவி பிடிப்பதுபோல் இருக்காது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் கல ந்திரு க்கும். மேலும் சருமத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அழகுப்பொரு ட்களும் வேறுபடும். ஒருவேளை மாற்றி பயன்படுத்திவிட்டால், அதனால் தேவையில்லாத பக்க விளைவுகள் ஏற்படும். ஆகவே எந்த ஒரு பக்கவி ளைவும் ஏற்படு த்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமா க்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது.

ஏனெனில் இதனால் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடை ந்து, அதில் உள்ள அழுக்குகள், கிருமிகள் விரைவில் வெளியேறி விடும். மேலும் இதற்கு எந்த ஒரு செலவும் ஆகாது. இதனை எந்த நேரத்திலும், வீட்டில் சூடான நீரை வைத்து செய்யலாம்.

வீட்டில் முகத்திற்கு எவ்வாறு ஆவி பிடிக்கலாம்?

சூடான நீரை வைத்து, ஒருபோர் வைக்குள் நீங்கள் உட்கார்ந்து, அந்த நீரின் முன் முகத்தை வை த்து, அதிலிருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி, ஒரு 30 நிமிட ம் உட்கார வேண்டும்.

ஆவிபிடிப்பதால் என்ன நன்மை ?

* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வத ற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின் றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும்போது, முக த்தில் உள்ள இறந்த செல்கள் எளி தில் வந்துவிடும்.

* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்து விடும். மேலும் அவை எளிதில் வ ருவதோடு, கரும் புள்ளிகள் வேரோ டு வந்துவிடும். பின்னர் அவை வ ராது போய்விடும்.

* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவிபிடி க்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இரு ந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற் கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்க ளால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய் விடும்.

*மற்றொரு நன்மைகள் என்னவென்றா ல், முதுமை தோற்றத்தை தடுக்கும். எவ் வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் த ங்கிவிடுவதால்தான், முகம் மிக வும் பளிச்சென்று இல்லாமல் முதுமைதோற்றத்தோடு காணப் படுகிறது. அப்போது ஆவி பிடித் தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடி க்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின் னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்து விடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்து விடலாம்.

* ஆவி பிடிக்கும் போது முகத்திற் கு சரியாக இரத்த ஓட்டம் இருக் கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல் லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொ லிவோடு இருக்கும்.

ஆகவே நேரம் இருக்கும்போது முகத்தி ற்கு ஆவி பிடித்து, சோர்ந்துபோன சரும த்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற் றுங்கள். மேலும் ஆவி பிடிப்பதை முகத் திற்கு மட்டுமல்லாமல, கூந்தலுக்கு செய் யலாம். அதாவது வெதுவெதுப்பான நீரால் கூந்தலை அலசுவது தான்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: